என் முன்னோடி!
நம் நாட்டைச் சேர்ந்தவரும் இல்லை;
அயல்நாட்டைச் சேர்ந்தவரும் இல்லை.
அவர் எந்த நாட்டின் தலைவரும் அல்ல.....
அவர் தன்னலமில்லாமல் அயராது உழைப்பவர்.
தன்னுடைய கடமையை தவறாமல் செய்துவருகிறார். தன்னிடமுள்ள அனைத்தையும் பிறருக்குத் தந்து மகிழ்கிறார்;
ஆனால், பதிலுக்கு எதையுமே அவர் எதிர்பார்ப்பதில்லை!
ஆமாம், அவர் ஒரு கொடைவள்ளல், ஒருவேளை, இதில் அவர் தன்னிகரற்றவராகக் கூட இருக்கலாம்!
அதுதான் சூரியன்!
வெப்பம், ஒளி, infra மற்றும் ultra violet கதிர்கள் என எல்லாமே சூரியனிடமிருந்து தான் நமக்குக் கிடைக்கிறது.
இருந்தும், சில நேரங்களில் நாம் சூரியனிடம் நன்றியோடு நடந்துகொள்வதில்லை.
கோடைக்காலத்தின் மத்தியில் சூரியனை வெறுக்கிறோம்; சபிக்கிறோம்!
சூரியனின் ‘நேரந்தவறாமையையும் நாம் நிச்சயம் பாராட்டவேண்டும்!
ஒவ்வொரு நாளும் சரியாக விடியலில் சூரியன் நமக்காக வந்துவிடுகிறது!
ஆரவாரமில்லாமல், அலட்டிக்கொள்ளாமல் அமைதியாகத் தன்னுடைய வேலையைச் செய்கிறது. அந்தியில் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு போய்விடுகிறது.
சில மனிதர்கள் செய்வதுபோல் தன்னுடைய வெற்றிகளைப் பற்றிப் பெருமை பீற்றிக்கொள்வதில்லை!
விடாமுயற்சிக்காரன் சூரியன்;
நீங்கள் பிடிவாதமாக சூரியனோடு எந்தச் சங்காத்தமும் வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றாலும்
அவன் எப்படியும் உன்னை எட்டிவிடுவான்.
[திரைச்சீலையில் ஒரு சிறு துளை இருந்தாலும் போதும் - சூரியன் உள்ளே நுழைய அனுமதி கிடைத்துவிடும்!]
எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது _
சில கணங்கள் சூரியன் ஓய்வெடுத்தாலும் அவ்வளவுதான்,
விளைவுகள் முழு உலகையும் பாதிக்கும் அளவுக்கு மிக மோசமானவையாக இருக்கும்!
உண்மையாகவே,
சூரியன் நாம் முன்னோடியாக கொள்ளத்தக்கவர் தான்!
வெங்கடேஷ்
No comments:
Post a Comment