LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Thursday, 6 November 2014

தொழில்நுட்பம் என்ற ’வில்லன்’ !

தொழில்நுட்பம் என்ற ’வில்லன்’ !


ன்றைய உலகில், நம்முடைய பெற்றோர்களுக்கு வாய்க்காத பல புதிய புதிய கண்டுபிடிப்புகள்நமக்குக் கிடைத்திருக்கின்றன!    

குறிப்பாக, தகவல் தொடர்புத் துறையில். 


இணையதளம், கைபேசிகள், கணினிகள், மடிக்கணினிகள், note books, tablets  - இன்னும் எத்தனையெத்தனையோ. 


இந்த உபகரணங்களின் துணையோடு, உலகெங்கிலும் உள்ள மனிதர் களோடு நம்மால் எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. 


Skypeஐப் பயன்படுத்தி,  நாம்  யாரிடம் பேசுகிறோமோ அவரை நம்மால் பார்க்கவும் முடிகிறது!


எத்தனை இனிமையான அனுபவம்! இது நம்முடைய பெற்றோர்களுக் குக் கிடைக்கவில்லையே என்று நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!


ஆனால், ஒரு நிமிடம் பொறுங்கள், 


பதிலுக்கு நாம் என்ன இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடிகிறதா?


ஆம், அதுதான் கையெழுத்து. அதுவும், குறிப்பாக, கடிதம் எழுதும் கலை!




நாம் கடைசியாக எப்பொழுது நம் கையால் ஒரு கடிதம் எழுதினோம்?(அலுவலக ரீதியாகவோ, அல்லது தனிப்பட்ட அளவிலோ] 

குறைந்தபட்சம், எனக்கு நினைவில்லை.


இப்பொழுது, நான் கையால் எழுதுவதெல்லாம், கடையில் வாங்கவேண் டிய பொருட்களின் பட்டியல் மட்டுமே. அல்லது, அன்றன்று நான் செய்ய வேண்டிய வேலைகள். மறந்துபோய்விடுகிறது என்பதால் அவற்றைக் கையால் எழுதிவைத்துக்கொள்கிறேன். அவ்வளவே! 


நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி நாம் கடிதங்களைத் ’டைப்’ செய்கிறோமே மின்னஞ்சலில் அனுப்புகிறோமே என்று சிலர் கூறலாம்.

ஆனாலும், கையால் எழுதியனுப்பபடும் கடிதங்கள் கிடைக்கவில் லையே என்று நாம் இழப்புணரவில்லையா என்ன? 


கண்டிப்பாக, இரண்டும் ஒன்றாகாது! 


கையால் எழுதப்படும் கடிதங்கள் தனித்தன்மை வாய்ந்தவை;


ஒருவரின் கையெழுத்து பிரத்யேகமானது. 

ஒருவரின் கையெழுத்துபோல் இன்னொருவரின் கையெழுத்து இருக்காது. 

சிலர் நேராக எழுதுவார்கள் ,

சிலர் வலப்பக்கமாய் சாய்த்து எழுதுவார்கள்


இடப்பக்கமாய் சாய்த்து எழுதுவோரும் உண்டு!


சிலருடைய கையால் எழுதப்பட்ட கடிதங்கள் நேர்த்தியாக, திருத்தமாக இருக்கும்;

ஒரே சீரான அளவில் அமைந்த எழுத்துகள் சீரான இடைவெளிகளில் பொருந்தியிருக்கும்!

அவற்றைக் காலத்திற்கும் பொக்கிஷமாய் பத்திரப்படுத்திவைக்கவேண்டும் போல் உங்களுக்குத் தோன்றும்.    

அதேயளவுக்கு அடித்தல் திருத்தல்களோடு அபத்த உளறலாய் கிறுக்கியெழுதப்பட்ட கடிதங்களும் உண்டு. அவை குப்பைக்கூடைக்கே உரியவை.



எந்த இருவரின் கையெழுத்து
களும் ஒத்திருப்பதில்லை.

கையெழுத்து என்பது தனித்துவமானது;பிரத்யேக

மானது; பொக்கிஷம் போன்று பாதுகாக்கப்பட வேண்டியது.

இதை, இன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் எழுத்துக
ளோடு, நாம் மின்னஞ்சலில் பெறும் எழுத்துகளோடுஒப்பிட்டுப் பாருங்கள்.

எழுத்துகளின் அளவு 

ஒரேமாதிரி யாக இருக்கும். 

இது என்னை கையால் எழுதப்

பட்ட கடிதத்திற்காய் அவ்வப்
போது ஏங்க வைக்கிறது!

மேலும், ஒரு மின்னஞ்சலையோ அல்லது கைபேசியில் வரும் ’குறுஞ் செய்தி’களையோ நாம் படித்தால், அதில் நேரத்தையும், இடத்தையும் மிச்சம் பிடிப்பதற்காய் மொழியின் இலக்கண விதிகள் காற்றில் பறக்கவிடப் பட்டிருக்கும்


R for " are " U for " you "  1ce for " once " _  இதுபோல் எத்தனையோ.


இப்பொழுது தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையில் எப்படி ஒரு ‘வில்லனா’க உருவெடுக்கிறது என்பதை  உங்களால் உணரமுடிகிறதல்லவா!


இதில் இன்னும் கவலையளிக்கும் விஷயம் _  கையால் எழுதுவது என்பதே நம்முடைய பாடத்திட்டங்களிலிருந்து மெதுவாக அகற்றப் பட்டுக்கொண்டு வருகிறது.


ஏற்கனவே கல்லூரிகளில் மடிக்கணினிகள் முதலியவை நம்முடைய மாணவப்பருவத்தில் நாம் கையிலெடுத்துச் சென்ற நோட்டுப் புத்தகங்களை வெளியேற்றத்தொடங்கிவிட்டன.  


பள்ளிகளிலும் இந்த நிலை ஏற்பட வெகுகாலமாகாது!  


ஹோ, கையால் எழுதப்படும் கடிதத்திற்காக நான் எவ்வளவு ஏங்கு கிறேன் தெரியுமா


யாரேனும் என் ஏக்கத்தைத் தீர்க்க முன்வருவீர்களா?




ஜி.வெங்கடேஷ்




























No comments:

Post a Comment