LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Wednesday, 19 November 2014

ஃபாதர்[FR] மர்ஃபி _ தன்னிகரற்ற ஆசிரியர்!

ஃபாதர்[FR] மர்ஃபி 

தன்னிகரற்ற ஆசிரியர்!

       



நான் ஒரு ‘மிஷினரி’ பள்ளியில் படித்தேன்; கல்வியாண்டு அப்பொழுதுதான் ஆரம்பமாகியிருந் தது.நான் ஐந்தாம் வகுப்பு மாணவன்.

ஐந்தாம் வகுப்பில்
தான், குழந்தைகள் சிறுவர்களாக வளரத்தொடங்கு கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கையிலுள்ள கழியைத் தள்ளி
வைத்துவிட்டு ஆசிரியர் மாணவ
ருக்கு அறிவுரை தரத் தொடங்குகி றார்.அல்லது, திட்டி நல்வழிப் படுத்தத் தொடங்குகிறார்.
  
வகுப்பில் மாணவர்கள் நீண்ட விடுமுறையை எப்படியெப்படியெல்லாம் ஜாலியாகக் கழித்தோம் என்று தோழர்களிடம் ஆர்வமாகப் பீற்றிக்கொண்     டிருந்தார்கள்.

உள்ளே நுழைந்தார் ஃபாதர் மர்ஃபி. 

சுருக்கமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் எங்களுக்கு அந்த வருடம் அவர் தான் வகுப்பாசிரியர் என்று அறிவித்தார். 

பின், எங்கள் பக்கமாகத் தன் முதுகைத் திருப்பி, கரும்பலகையை நோக்கிச் சென்றார். 

மாணவர்களிடையே மீண்டும் சளசளவென்று பேச்சு கிளம்பியதும் ஃபாதர் மர்ஃபி வகுப்பை நோக்கித் திரும்பினார்; மாணவர்களைத் திட்டவில்லை அவர். மாறாக, அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தவாறு,

“சரிதான், நீங்கள் விடுமுறையை எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகக் கழித் தீர்கள் என்று உங்களிடம் நிறைய சொல்ல இருக்கிறதல்லவா! அது பற்றிப் பேச யார் இங்கே முதலில் வரப்போவது?” என்று அன்போடு அழைத்தார்!"  

உடனே மாணவர்களிடம் உற்சாகமான சலசலப்பு எழுந்தது. வேகவேகமாக எல்லோரும் கையை உயர்த்தினார்கள்.

அந்த வகுப்பின் முழுநேரமும் மாணவர்கள் தங்களுடைய விடுமுறை அனுப வங்களைப் பற்றிக் கூறுவதில் கழிந்தது!

இது ஃபாதர் மர்ஃபியை எங்களுடைய மனதுக்கு நெருக்கமானவராக்கியது.

ஃபாதர் எப்பொழுதுமே மாணவர்களிடம் கனிவாக மட்டுமே நடந்துகொள்வார் என்றெல்லாம் கிடையாது; தேவைப்பட்ட நேரத்தில் கண்டிப்பாகவும் கறாரா கவும் நடந்துகொள்வார். 

அவர் எங்களுக்குக் கற்பித்த பாடங்களோடு கூட தன்னுடைய வாழ்வனுப வங்களையும் சேர்த்துச் சொல்லிப் புரியவைப்பார். 

மனப்பாடம் செய்து ஒப்பித்தலை அவர் என்றுமே ஊக்குவித்ததில்லை.

’பாடங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு தன் சொந்த வார்த்தைகளில் விடைகளை எழுதவேண்டும்; அதுதான் நல்லது’ என்று மாணவர்களுக்கு எடுத்துச்சொல்வார்.

வகுப்பு நிகழ்வுகள், உரையாடல்கள், விவாதங்களில் ஆர்வமாகப் பங்கெ டுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்துவார். இது எனக்கு ஒரு கசப்பான விஷயமாக அமைந்தது!

வகுப்பில் நான் எப்படிப் படித்துவருகிறேன்; நடந்துகொள்கிறேன் என்று கொஞ்சகாலமாகவே என் அப்பா கவனித்துக்கொண்டிருந்தார்.  

ஒரு நாள், என்னுடைய ‘ப்ராக்ரெஸ் ரிப்போர்ட்’இல் கையொப்பமிடும்போது , அவர் நான் வகுப்பில் ஏன் முதல் ராங்க் எடுக்கவில்லை என்று சடாரென்று கேட்டார்;

திடுக்கிட்டுப்போனேன் நான். ஏனென்றால், நான் எப்பொழுதுமே பரிட்சைக்கு முன்பாகத் தான் படிக்கத் தொடங்குவேன்!

இருந்தாலும், அடுத்த தேர்வில் வகுப்பிலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்து தந்தையை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

அதேபோல், அயராது படித்து அடுத்து வந்த தேர்வில் வகுப்பிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டேன்! 

ஆனால், என்னுடைய ‘ரிப்போர்ட் கார்டி’ல் மதிப்பெண்கள் எழுதப்பட்ட போது, நான் தேர்வில் வாங்கியிருந்த மதிப்பெண்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தன!   

ஃபாதர் மர்ஃபியிடம் அதுபற்றிக் கேட்டபோது அவர் வகுப்பு நிகழ்வுகளிலான பங்கேற்பில் நான் மிகவும் பின்தங்கியிருக்கிறேன் எனவும், அதனால் தான் என் மதிப்பெண்களைக் குறைக்கும்படியாகியது எனவும் பதிலளித்தார். 

ஃபாதர் சொன்னதை என் அப்பாவிடம் சொல்லவில்லை. காரணம் வெளிப் படை.  

இதனால் என் தந்தையிடமிருந்து கிடைக்கும் திட்டு அதிகமாகியது.

மறுபடியும், அடுத்த பரிட்சைக்கு அயராது பாடுபட்டுப் படித்தேன்;இம்
முறை வகுப்பு நிகழ்வுகளிலும் ஆர்வமாகப் பங்கெடுத்துக்கொண்டேன்; 

ஆனால், என் துரதிருஷ்டம், தேர்வுத்தாளில் நான் எதிர்பார்த்த அளவு அதிகமாக மதிப்பெண்கள் எடுக்கவில்லை. 

வழக்கமாக முதல் ’ராங்க்’ வாங்கும் மாணவனின் மொத்த மதிப்பெண்கள் என்னுடையதைவிட அதிகமாக இருந்தது. 

‘வேறு வழியில்லை, மீண்டுமொரு முறை அப்பாவிடம் திட்டுவாங்க வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு அதற்குத் தயாரானேன்.  

ஆனால், என்ன ஆச்சரியம்!   

ஃபாதர் மர்ஃபி என்னுடைய மொத்த மதிப்பெண்களை நிறையவே உயர்த்தி யிருந்ததில் நான் முதன்முதலாக வகுப்பிலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் ‘ராங்க்’ மாணவனாகப் பெருமை பெற்றேன்!  

ஃபாதருக்கு விளையாட்டிலும் மிகுந்த ஆர்வமுண்டு. பள்ளிநேரம் முடிந்த பிறகு, நாங்கள் விளையாடும் விளையாட்டுகளில் அவரும் ஆர்வமாகப் பங்கெடுத்துக்கொள்வார்!  

பள்ளியிலிருந்த எல்லோருமே ஃபாதர் மர்ஃபியை மிகவும் மதித்தார்கள். எல்லோருக்குமே அவரை மிகவும் பிடிக்கும்!   

பல வருடங்கள் கழித்து, நான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறிய பிறகு, ஃபாதர்  பணியிலிருந்தபோது உயிர்நீத்தார் என்ற செய்தியைக் கேள்விப் பட்டேன்!  

அந்த அன்பு மனிதருக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலி உரித்தாகட்டும்!


_ ஜி.வெங்கடேஷ்


              









No comments:

Post a Comment