LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Wednesday, 5 November 2014

பாசாங்குக்காரர்கள் நிறைந்ததா நம் சமூகம்?

பாசாங்குக்காரர்கள் நிறைந்ததா நம் சமூகம்?




 சமீபத்தில் ஒருநாள் என்னுடைய நெருங்கிய நண்பரும் உறவினருமானஒருவர் இறந்துபோய்விட்டார். 

அவருக்கு அஞ்சலி செய்யவும் அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைச் சொல்லவும் நான் சென்றிருந்தேன். 

எதிர்பார்த்ததைப் போலவே அங்கே நண்பர்களும் உறவினர்களுமாய் ஏராளம் பேர் குழுமியிருந்தார்கள்.   

அந்த வீட்டில் நுழைந்ததுமே பலர் விம்மத்தொடங்கிவிட்டார்கள். 

அது இயல்புதான்.

ஆனால், அவர்களுடைய துக்கமும், கண்ணீரும் மனப்பூர்வமானதா அல்லது சடங்கார்த்தமானதா என்று எனக்குத் தெரியவில்லை. 

ஆனால், அங்கிருந்த சிறிது நேரத்தில் அது தெளிவாகிவிட்டது.

பொதுவாக, இந்த மாதிரி சமயங்களில் இறந்தவரின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக இறுதிச் சடங்குகளைச் செய்ய குருக்கள் வரவழைக்கப்படுவார்.

இந்த மாதிரி நிகழ்வுகளில் பெரும்பாலான நேரங்களில் குருக்கள் குறித்த நேரத்தில் வந்துசேர்வதில்லை.

ஏனெனில், இறந்தவருக்கான இறுதிச் சடங்குகளை செய்துமுடித்த பின் குருக்கள் குளிக்கவேண்டியது நியதி. எனவே, இத்தகைய சடங்குகளை அவர் ஒரு நாளுக்கான இறுதிப் பணியாக வைத்துக்கொள்வது வழக்கம்.  
அதன் விளைவாக, இறந்தவ்ர் வீட்டில் முழுகியிருப்பவர்கள் நீண்ட நேரம் காக்கவேண்டிவரும். அப்படித்தான் அன்றும் ஆயிற்று.

துக்கத்திற்குரிய பொழுது அங்கே கலகலப்பாக அக்கப்போர் பேசும் சந்தர்ப்பமாகிவிடுகிறது.  

பெண்கள் சமீபமாக தாங்கள் என்னவெல்லாம் வாங்கினோம் என்று பலதையும் பேசி வம்பளக்கத்தொடங்கிவிடுவார்கள்! 

அதேபோல், ஆண்களும் பங்குச்சந்தை நிலவரம் பற்றி விவாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்!   

என்னுடைய பெற்றோர்கள் இறந்தபோது என்னால் இந்த நிலைமையை கண்கூடாகப் பார்க்க முடிந்தது!

வெங்கடேஷ்

No comments:

Post a Comment