அழுக்கு மண்டிய
இந்திய அரசியல் உலகம்
இந்திய அரசியல் உலகம்
என்னுடைய மாணவப்பருவத்திலிருந்தே இந்திய அரசியல் போக்குகளைக் கூர்ந்து கவனித்துவந்திருக்கிறேன்.
50கள் மற்றும் 60களில் இந்திய அரசியல் தூய்மையானதாகவும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது.
70களிலிருந்து தான் அது அசுத்தமடையத் தொடங்கியது.
50கள் மற்றும் 60களில் இந்திய அரசியல் தூய்மையானதாகவும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது.
70களிலிருந்து தான் அது அசுத்தமடையத் தொடங்கியது.
அந்தக் காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘ஆயே ராம்; காயே ராம் ["Aye Raam Gaye Raam"] என்ற முழக்கம் கண்டிப்பாக நினைவிருக்கும்.
அதற்கு அர்த்தம் : அவர் வந்தார்; சென்றார். அதன் உண்மையான அர்த்தம் _
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவையில் ஒரு மசோதாவை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ அப்போது பதவியிலிருந்த அரசியல் கட்சியில் தன்னை [அதற்கென ஒரு பெருந்தொகையைப் பெற்றுக் கொண்டு] இணைத்துக்கொண்டார். அப்படிச் செய்துமுடித்த பிறகு அவர் மீண்டும் தன்னுடைய பழைய கட்சிக்கே திரும்பிச் சென்றுவிட்டார்.
இந்தப் போக்கு மிகவும் பரவலாக நிலவி வந்ததன்(மாநிலங்களிலும் கூட) இந்தத் தொல்லையைத் தவிர்க்க மத்திய அரசு கட்சித்தாவல் தடைச் சட்டம் கொண்டுவந்தது.
பின்னர், 80களில் அந்த ஹர்ஷத் மெஹ்தா விவகாரம் வந்தது. பதவியிலிருந்த அரசுக்கு யாருடைய ஆதரவு மிகவும் அவசியத்தேவையாக இருந்ததோ அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுப்பொறுப்பிலிருந்த கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக அச்சுறுத்திய போது பெட்டி நிறைய கத்தை கத்தையாய் பணம் அவர்களுக்கு அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 1 அரசாங்கப் பொறுப்பிலிருந்த சமயம், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைக்குள் சூட்கேஸ்கள் நிறைய பணத்தோடு சென்று அணுஆயுத மசோதாவை ஆதரிப்பதற்காக தங்களுக்குப் பணம் தரப்பட்டது என்று கூறி பெட்டிகளை மக்களவையிலேயே கவிழ்த்துக்காட்டியாதை யாரும் மறந்துவிட முடியாது.
சமீபத்தில் மகராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் நடந்துமுடிந்த தேர்தல்கள் மீண்டும் நம்முடைய அரசியல்களத்தை அதன் உச்சபட்ச அவலநிலையில் எடுத்துக்காட்டியது.
உடல்நிலை சரியில்லை என்று காரணங்காட்டி சிறையிலிருந்து வெளியே வந்த கைதி ஒருவர், தனது கட்சிக்காகப் பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டார்!
பதவிகளைப் பகிர்ந்துகொள்வதில் உடன்பாடு எட்டப்படாததால் ஒன்றாக இருந்த நான்கு கட்சிகள் கூட்டணியை முறித்துக்கொண்டன.
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மற்ற மூன்று கட்சிகளை தேர்ந்தெடுத்த பழிச்சொற்களைக் கொண்டு மிகமோசமாக. தேர்தல் முடிவு கள் வெளியான பிறகு, தங்களுடைய அரசு பதவிக்கு வந்தால் எதிர்த் தரப்பினரின் பொய் புரட்டுகளை அம்பலப்படுத்துவதாய் தேர்தலில் வெற்றி பெற்றவர் மக்களுக்கு உறுதியளித்திருந்ததால் தோற்றவர்கள் தாங்கள் நடந்துகொண்ட விதத்தை அறவே மறந்தவர்களாய் வெற்றி பெற்றவரோடு ஒட்டிக்கொள்ள பெருமுயற்சி செய்தார்கள்.
ஆட்சியாளர்களே ஊழலில் ஈடுபடுவதால், இந்த நோய் அடிவேர் வரை இறங்கிவிட்டது....

அதன் விபரீத செயல்பாடுகளை நாம் நாடெங்குமுள்ள உள்ளூர் அலுவலகங் களிலெல்லாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆட்டோ ஓட்டுநர்கள் கூட சாதாரண மனிதர்களிடமிருந்து அதிகப் பணத்தைக் கறப்பதை தம் அவசியத் தேவையாகக் கோருகிறார்கள்!
No comments:
Post a Comment