கர்னலைச் சுட்டுவிட்டேன்! [கிட்டத்தட்ட!]
கல்லூரியில்
படித்துக் கொண் டி ருக்கும்போது நான் National Cadet Corps
[NCC]யில் சேர்ந்திருந்தேன்
N C C யில் மாணவர்களுக்கு ராணுவப்பயிற்சி
அளித்தார்கள். துப்பாக்கி சுடுவதிலும் எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தவிர, துப்பாக்கியுடனோ அல்லது துப்பாக்கியில்லாமலோ எங்களுக்கு அணி வகுப்பு பயிற்சியும் தரப்பட்டது.
வார இறுதியில் நாங்கள் கண்டிப்பாகப் பயிற்சிக்கு ஆஜராகவேண்டும். ‘அட்டெண்டன்ஸ்’ கட்டாயம்.
பயிற்சியின் போது நாங்கள் ஏறத்தாழ ராணுவவீரர் போலவே நடத்தப்படு வோம்;
ஏனோதானோவென்றெல்லாம் நாங்கள் பயிற்சியில் ஈடுபட முடியாது. யாரே னும் ஏதேனும் தவறாகச் செய்துவிட்டால் உரத்த குரலில் அந்த மாணவரை நோக்கிக் கெட்டவார்த்தைகளில் வசை பாடப்படும். (குரல் எத்தனைக்கெத் தனை உயர்கிறதோ அத்தனைக்கத்தனை அதிகாரம் தூள்பறக்கும்!) ராணுவத் திற்கேயுரிய அந்த ‘நான்கெழுத்துக் கெட்ட வார்த்தைகள் வந்துவிழும்!
எங்கள் கல்லூரி .ஸி.ஸி பிரிவின் தலைவராக இருந்தவர் ராணுவத்தில் ’கர்னலா’க இருந்தார். நான் அவரைப் பார்த்ததில்லை, ஆனால் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து , பணியில் இருக்கும்போது அவர் மிகவும் கண்டிப்பான ஆள். அவருடைய முகம் எப்பொழுதுமே உர்ரென்று, கடுகடு வென்று இருக்கும்.
ஒருமுறை, நாங்கள் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக, அதற்குரிய திறந்த வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
நாங்கள் திருத்தமான தோற்றத்துடன் வரவேண்டுமென்றும், கர்னல் எங்கள் பயிற்சியைப் பார்வையிட வருவார் என்றும் கூறப்பட்டது.
நாங்கள் அணிவகுப்பு செய்கையில் கர்னல் அங்கே வந்தார். அவரை வரவேற்று மரியாதை செய்யும் விதத்தில் நாங்கள் அவர் முன்னிலையில் அணிவகுத்துச் சென்றோம்.
கர்னல் எங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு மாணவனும் அவரைக் கடந்துசென்றபோதும் அவர் அந்த மாணவரைப் பற்றி இடக்காக ஏதாவது கருத்துரைத்துக்கொண்டிருந்தார்.
இறுதியாக, அவருடைய கழுகுப்பார்வை என்மீது படிந்தது;
தலை முதல் பாதம் வரை என்னைப் பார்வையால் துருவினார்: “ You f***ing c*** ஒரு வார தாடி நீளமாக உன் முகத்தில் வளர்ந்திருக்கிறது; உன்னுடைய உடைகள் ‘அயர்ன்’ செய்யப்படவேயில்லை. உன்னுடைய bl***y பூட்சுகள் பாலீஷ் செய்யப்படவேயில்லை.”, அவர் என்னை நோக்கி நாயாய் குலைத்தார்!
ஒரு கணம், அவர் கூச்சலிட்டதைக் கேட்டு நான் வாயடைத்துப்போனேன்; (அதுவும், நான் திருத்தமாகத் தோற்றமளிக்க எத்தனை பாடுபட்டிருந்தேன்!) என்னையுமறியாமல் என் கையிலிருந்த துப்பாக்கி கர்னலைக் குறிபார்த்தது!
"ஹேய், என்ன காரியம் செய்கிறாய்? உன்னுடைய துப்பாக்கி என்னை நோக்கித் திரும்பியிருக்கிறது பார், கீழே போடு, துப்பாக்கியைக் கீழே போடு”, கர்னல் மீண்டும் இரைந்தார்.
மறுகணம் நான் சுயநினைவுக்கு வந்துவிட்டேன். சமாளித்துக்கொண்டு விட்டேன்!
பின்னர், என்னுடைய செய்கை மன்னிக்கப்பட்டது, அந்த நிகழ்ச்சி பற்றி மேலிடத்தில் புகார் செய்யப்படவில்லை.
’பர்ஃபெக்ஷன்’ என்று எதுவும் இல்லையென்றும் அதை அடைய ஒவ்வொரு வரும் பாடுபடவேண்டும் என்றும் ராணுவம் நம்புகிறது!!
ஜி.வெங்கடேஷ்
0
.