உதவிக்கு ஒரு பேய்!
Iஅந்த விமானத்தில் ஏறிக்கொண்ட பயணிகள் மிகவும் உற்சாகமான பேர்வழிகளாக இருந்தார்கள்;
சிங்கப்பூருக்கும், சென்னைக்கும் இடையே உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்ட அளவில் அந்த விமானம் இரவு 10 மணி, க்குச் சென்னையில் வந்துசேரவேண்டியது.
ஆனால், துரதிருஷ்டவசமாக, விமானம் கிளம்பி சுமார் அரைமணிநேரத்திற்குப் பிறகு, விமானம் காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தி எல்லாவிடங்களிலும் ஒலிபரப்பப்பட் டது, ஆனால், காணாமல் போன விமானம் எங்கே போயிற்று, என்ன ஆயிற்று என்று எந்த விவரமும் தெரியவில்லை.
கடல்களில் மேற்கொள்ளப்படும் தேடல் முயற்சி கள் அடுத்த நாள் காலையில் தான் தொடங்கப்பட முடியும்;
இதற்கிடையில் ஊடகங்களில் விமானத்திற்கு என்னாயிற்று என்பது பற்றி பலவிதமான சாத்தியப் பாடுகளை வெளியில் உலவவிட்டுக்கொண்டிருந் தன. 1. விமானம் கடத்தப்பட்டுள்ளது. 2. விமான ஓட்டி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் சமுத் திரத்தில் எங்கேயோ விழுந்துவிட்டது. 3. ஏதோ வொரு பெரிய அதிகார சக்தி அந்த விமானத்தை வலுக்கட்டாயமாகத் தன்னுடைய இராணுவத் தளத்தில் இறங்கச் செய்திருக்கிறது. இப்படிப் பல ஊகங்கள்...
ஏதோவோர் அமானுஷ்ய சக்தி, வேற்றுக் கிரகத் தைச் சேர்ந்தது, விமானத்தை பூமியிலிருந்தே அப்பால் எடுத்துச்சென்றுவிட்டது என்று கூட சிலர் பேசிக்கொண்டார்கள்.
காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரமாகத் தொடர்ந்தது, அடுத்துவந்த நாட்களில் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால், எந்தப் பயனுமில்லை.
இப்பொழுது அந்த விமானத்தில் சென்ற பயணிக ளின் உறவினர்கள் தங்களுடைய அன்புக்குரிய உறவுகளை இனி பார்க்க முடியும் என்ற நம்பிக் கையை முற்றிலுமாக இழந்துவிட்டார்கள்;
மேலும், அப்படியே அந்த விமானத்தின் உடைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் உயிரோடு யாருமே இருக்கவியலாது என்றும், இறந்தவர்களின் சடலங்கள் கூட அடையாளம் கண்டுபிடிக்கவியலாத அளவு சிதைந்துபோயிருக்கும் என்பது மிகத் தெளிவாகவே எல்லோருக்கும் புரிந்தது.
அந்த துரதிருஷ்டம் பிடித்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் ராஜீவ் நடராஜன்.
இயல்பாகவே அவன் பரபரப்பான பேர்வழி. ஓரிடத்தில் நிற்க மாட்டான். அங்கே இங்கே அலைந்துகொண்டேயிருப்பான்.
ஒரு சிறந்த உத்தியோகம் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது;
அந்த துயர சம்பவம் நிகழ்ந்தபோது அவனுக்கு வயது 21தான்.
மிகவும் புத்திசாலியான பட்டம் பெற்ற இஞ்ஜினியர். கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் உயர்ந்தவன் அவன். அயல்நாட்டில் மேற்படிப்பைப் படித்து முடித்து அங்கேயே நல்ல வேலை பார்த்துக்கொள்வதென்று திட்டம் தீட்டியிருந்தான்.
அவனுடைய உறவினர்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்; தாங்கமுடியாத துயரம்.
ராஜீவின் ஆன்மா சொர்க்கம்/நரகம் வாசலை எட்டிய போது அங்கிருந்த வாயிற்காவலாளி அதைத் தடுத்து நிறுத்தினான்.
"மன்னிக்கவும், உள்ளே நுழைய உங்களுக்கு அனுமதியில்லை. பூமிக்கே திரும்பிச் சென்று அங்கே ஒரு பேயாகத் திரிவாயாக.”
“என்ன? நான் செய்யாத தப்புக்காக எனக்கு இந்தத் தண்டனையா?” என்று கோபத்தோடு கேட்டான் ராஜீவ்.
“ஆனால், நான் சொன்னதில் ஒரு நிபந்தனை இடம்பெறுகிறது,” என்று தெரிவித்த வாயிற்காவலாளி மேலும் கூறலானான். “பூமியில் நீ எப்படி நடக்கிறாய் என்பது குறித்த காலத்திற்குக் கண்காணிக்கப்பட்டுவரும். நீ நன்றாக நடந்துகொள்கிறாயா, அல்லது தீயவழியில் நடக்கிறாயா என்பதைப் பொறுத்து நீ சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ வரவேற்கப்பட்டு அனுமதிக்கப்படுவாய்”, என்று விவரித்தான் வாயிற்காவலாளி.
ராஜீவ், எப்பொழுதுமே வீர தீர பராக்கிரமங்களை விரும்புவன்; உற்சாகமான இளைஞன். எனவே, அவன் அந்த நிபந்தனையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டான்!
ஆனால், என்ன நல்லது செய்வது, அதை எப்படிச் செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. தன் குடும்பத்தாருக்கு நல்லது செய்வது என்று தன் செயல்பாடுகளைத் தொடங்கினால் சுயநலக்காரன் என்று அவனைச் சொல்வார்கள்;
எனவே எதிர்ப்படும் விஷயங்களுக்கேற்ப, உரிய வி்தத்தில் செயல்படுவது என்று முடிவு செய்தான்.
முதலில் ஒரு பிச்சைக்காரனுக்குச் சாப்பிட இரண்டு வாழைப்பழங்களை இலவசமாகத் தந்தான். அவற்றை அவன் ஒரு வாழைப்பழ வியாபாரியிட மிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டான்;
நினைவுவைத்துக்கொள்ளுங்கள், அவன் வெளியுலகின் கண்களுக்குத் தெரியமாட்டான்!
திடீரென , அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பெண்ணொருத்தி வீறிட்டலரும் சப்தம் கேட்டது.
என்ன விஷயம் என்றுபார்க்கச்சென்றபோது அங்கே ஒரு ஆள் மூதாட்டி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான். அவனுடைய கூட்டாளி அந்த மூதாட்டியைக் கயிற்றால் இறுகக் கட்டிக்கொண்டி ருந்தான். தன்னுடைய சமயோசித புத்தியைப் பயன்படுத்தி ராஜீவ் அந்த ஆளின் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டினான்’
உடனே அந்த ஆசாமியின் கையிலிருந்த கத்தி கீழே நழுவிவிட்டது. ராஜீவ் அதைக் கையிலெடுத்துக் கொண்டு அந்த ஆளை நோக்கி நீட்டினான். அந்த ஆள் அலறியடித்துக்கொண்டு ஓடியே போய்விட்டான்.
அந்த மூதாட்டி பெருமாளின் தீவிர பக்தை. நாராயணனே தன்னைக் காப்பாற்றிவிட்டதாக எண்ணிக்கொண்டாள் அவள்!
அண்மையிலிருந்த கோயில் ஒன்றில் ராஜீவ் நுழைந்தான். அங்கே ஒரு சுவாமிஜி சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். கூட்டம் மெய்மறந்து அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது;
அந்த சுவாமிஜி மனிதர்களின் பல்வேறு தீயகுணங்களைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார்; முக்கியமாக, பேராசை மிகவும் மோசமான குணம் என்று வலியுறுத்திக்கூறிக்கொண்டிருந்தார்;
தன்னுடைய பேச்சில் நடுநடுவே சில பிரார்த்தனை கீதங்களைப் பாடினார், ராமாயணம் மகாபாரதத்திலிருந்து சில மேற்கோள்களை எடுத்துக்காட்டினார்; சில குட்டிக்கதைகளைச் சொன்னார்.
திடீரென, அங்கே கூடியிருந்தவர்களிலிலிருந்து ஒரு பக்தன் சுவாமிஜியிடம் சென்று அவரை விமர்சித்தான். அவர் தன்னுடைய சொற்பொழிவால் எளிய மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினான்;
சுவாமிஜி சிறிதுநேரம் நிதானமிழக்காமல், அந்த ஆள் கூறுவதை சாந்தமாகவே கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவனோ தொடர்ந்து அவரை இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டேயிருந்தான்.
இது சுவாமிஜியைப் பெரிதும் ஆத்திரமடையச் செய்தது. அவர் அந்த மனிதனின் முட்டாள்தனமான பேச்சுக்காக அவன் ரத்தம் கக்குவான் என்று சபித்தார்.
சீக்கிரமே, அப்படியே நடந்தது. அந்த ஆசாமி நிறையவே சி்வப்பு நிற திரவத்தை நிறையக் கக்கினான்.
உடனடியாக அவன் சிகிச்சை அளிக்கப்படுவதற்காக அங்கிருந்து தூக்கிச்செல்லப்பட்டான்.
இது ராஜீவின் ஆர்வத்தைக் கிளப்பியது;
ஆனால், அங்கே குழுமியிருந்த பார்வையாளர்கள் மத்தியிலோ ஔவாமிஜியைப் பற்றிய மதிப்பும், அவருக்கிருக்கும் ஆன்ம சக்தியைக் குறித்த மதிப்பும் ஒரேயடியாக அதிகரித்துவிட்டது! நிறைய பேர் அவர் சாட்சாத் கடவுள் அவதாரம் என்று கருதினார்கள்!
உடனடியாக சில முதாட்டிகள் அவருடைய காலடியில் விழுந்து வணங்கினார்கள்!
தன்னுடைய சொற்பொழிவின் இறுதியல் சுவாமிஜி அந்த ஆசிரமத்தின் பராமரிப்புக்காக தங்களால் இயன்றதை, தங்களுக்கு விருப்பமானதை நன்கொடையாகத் தந்து உதவும்படி வேண்டிக்கொண்டார்.
கூடியிருந்த பக்தர்கள் அங்கிருந்த உண்டியலில் காசு போட முண்டியடித்துக்கொண்டு சென்றார்கள்!
பிறகு சில பக்தர்களுக்கு சுவாமிஜியிடம் தங்களுடைய குறைகளைக் கூறி நிவாரணம் பெற அவருடைய உதவியாதரவை வேண்டுபவர்களாய் அவரிடம் பேசுவதற்காகச் சென்றார்கள்.
அவர்களில் ராஜீவின் மனதுக்கினியவள் நீட்டாவும் இருந்தாள்; அந்த சுவாமீஜி அவளிடம் தன்விவரக்குறிப்புகள் அடங்கிய சிறிய அட்டையைக் கொடுத்து தன்னோடு பேசுவதற்காக முன்பதிவு செய்ய பின்னர் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.
கூட்டம் முடிந்த பிறகு சுவாமிஜி அந்த அரங்கை விட்டு, அவருடைய தனிக்காவலர்களின் பாதுகாப்போடு அங்கிருந்து வெளியேறினார்.
சுவாமீஜி எங்கே போகிறார் என்று பார்ப்பதற்காக ராஜீவ் அவர் பின்னாலேயே சென்றான்.
சிறிது தூரம் நடந்த பின் அவனுக்கு ஒர் பேரதிர்ச்சி காத்திருந்தது.
அரங்கில், சுவாமீஜியை கேலியாக விமர்சித்து அதன் விளைவாய் ரத்தம் கக்கியவன் அங்கே வந்து சுவாமீஜியோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
அவ்ர்களிருவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.
சுவாமீஜி கூறினார்: அந்த சிவப்பு ஜூஸ் சரியாக வேலை செய்தது! இல்லையென்றால் நமக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்கும்; நாளைக்கு என்னைப் பார்க்க வரச் சொல்லி ஓர் அழகிய பெண்ணுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். எனவே, உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க முடியும் என்று நம்புகிறேன்.இந்தக் கேளிக்கையில் நீயும் இணைந்துகொள்ள விரும்புகிறாயா?”
”கரும்பு தின்னக் கசக்குமா என்ன!” என்றான் சுவாமீஜியின் கூட்டாளி.
“அப்படியென்றால் அங்கே சரியாக பதினோரு மணிக்கு வந்துவிடு.”
”கண்டிப்பாக வருகிறேன்” என்றான் கூட்டாளி.
ராஜீவ் தன்னுடைய மனதுக்கினியவளின் வீட்டுக்கு வேகமாகச் சென்றான்.
அவள் தன்னுடைய அம்மாவிடம் சுவாமீஜியைப் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டான். கோயிலில் நடந்த அந்த சம்பவத்தைத் தாயாரிடம் எடுத்துக்கூறினாள் அவள்.
“அம்மா, சுவாமீஜி எனக்குப் பதினொரு மணிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். நான் அவரிடம் என்னுடைய பிரச்னைகளை எடுத்துச்சொல்லப் போகிறேன். ராஜீவ் பற்றிக்கூட. அவர் எனக்கு நல்ல அறிவுரை வழங்குவார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.”
”கண்டிப்பாக, நீதா..... போகும் போது பூ, பழம் எல்லாம் எடுத்துக்கொண்டு போ. மறந்துவிடாதே. அவர் பிரசாதம் தந்தால் அதை மறக்காமல் கொண்டு வா. நம்முடைய நண்பர்கள், உறவினர்களுக்கெல்லாம் கொடுக்கலாம்.”
அடுத்த நாள், ராஜீவ் குறித்த நேரத்தில் நீத்தாவின் வீட்டையடைந்தான்.
நீத்தா தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாள். அவளுடைய கண்ணுக்குத் தெரியாத அளவில், அருவமாய் ராஜீவ் பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டான்.
தரப்பட்ட விலாசத்திற்கு குறித்த நேரத்தில் அவர்கள் போய்ச்சேர்ந்தனர்.
சுவாமீஜி நீத்தாவை அன்பொழுக வரவேற்று அவளைத் தன்னோடு தரையில் அமரச் செய்தார். நீத்தா தன்னுடைய மனதுக்கினியவன், ராஜீவ் என்று பெயர் கொண்டவன் தன்னைத் தவிக்கவிட்டு இறந்துபோய்விட்டான் என்ற விவரத்தை அவரிடம் கூறினாள்.
சுவாமீஜி அவளை சமாதானப்படுத்தி, ஆறுதல் வார்த்தைகளைப் பேசினார். பின், இறந்தவரின் ஆன்மா சாந்தியடைவதற்காகவும், நீத்தாவின் மனம் நிம்மதி பெறுவதற்காகவும் ஒரு பூஜை நடத்தப்போவதாகத் தெரிவித்தார்.
கண்ணை மூடிக்கொள்ளும்படியும், மனதிற்குள் கடவுளின் நாமத்தை உச்சரித்துக்கொண்டேயிருக்கும்படியும் நீத்தாவிடம் கூறினார்.
பூஜையின்போது நீத்தா மயக்கத்திலாழ்ந்துவிட்டாள். சுவாமிஜி தன் கூட்டாளியிடம் அவளைப் படுக்கையறைக்குத் தூக்கிக்கொண்டு செல்லும்படிக் கூறினார்.
இச்சை நிரம்பிய மனதோடு, கண்கள் வேட்கையில் பளபளக்க சுவாமீஜி படுக்கையறைக்குள் நுழைந்தார். நீத்தாவின் ஆடைகளைக் களைய முற்பட்டார்;
ராஜீவ் மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்து நீத்தாவின் கண்களில் தண்ணீரைத் தெளித்தான்;
உடனடியாக மயக்கம் கலைந்து எழுந்துகொண்ட நீத்தா, அலங்கோலமான நிலையில் தான் கிடப்பதைப் பார்த்து அந்த சுவாமீஜியை வேகமாக அப்பால் தள்ளிவிட்டாள்.( அருவமாயிருந்த ராஜீவ்வும் உதவினான்) . பின், அந்த அறையிலிருந்து ஒரே ஓட்டமாய் வெளியே ஓடினாள். ராஜீவும் அவளைப் பின்தொடர்ந்தான்.
சுவாமீஜி இதை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப்போய், ஏறத்தாழ அரையாடையில் இருந்தவர் தன்னுடைய கூட்டாளியைக் கூப்பிட்டு அவளைத் தடுத்து நிறுத்தும்படி கூறினார்;
ஆனால் நீத்தா அவருடைய பிடியிலிருந்து தப்பித்துவிட்டாள்.
சட்டத்தின் நீள்கரம் வெளியே காத்துக்கொண்டிருந்தது. சுவாமீஜியைப் பிடித்துக்கொண்டது. “நீயும் உன்னுடைய கூட்டாளியும் கைதுசெய்யப்படுகிறீர்கள்!” என்று இன்ஸ்பெக்டர் சுவாமீஜியிடம் கூறினார். “உங்களுடைய சமூக விரோதச் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு சரியான நேரத்தில் தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப்பட்டதால்தான் எங்களால் வர முடிந்தது.”
பின்னர், ராஜீவுக்கு மேலுலகிலிருந்து ஒரு செய்தி வந்தது: “பாராட்டுகள்; நீ பூமியில் நல்ல காரியம் செய்தபடியால் இப்பொழுது நீ சொர்க்கத்திற்கு வரவேற்கப்படுகிறாய்!
ஜி.வெங்கடேஷ்
.
No comments:
Post a Comment