பலரும் அறிந்த பழமொழி ஒன்று உண்டு: “யார் இளவயதிலேயே இறந்துவிடுகிறார்களோ
அவர்கள் கடவுளின் அன்புக்குப் பாத்திர மானவர்கள்.
இந்தக் கூற்றைப் பலரும் மறுக்கக்கூடும் இதற்கு எந்தவிதமான ஆதாரமும்
இல்லை என்று வாதிடக் கூடும். ஆனால், சாதாரண மான மூத்த குடிமக்கள் அப்படிச் செய்ய
மாட்டார்கள். நமக்கு வயதாகிக் கொண்டே போகும்போது, பணமல்ல, உடல்நலனே அவர்களுக்குப்
பெரிதும் கவலையளிக்கும் விஷயமாகிறது.
பணக்காரர்களோ, வசதிபடைத்தவர்களோ, நடுத்தர வர்க்கத் தினரோ, ஏழைகளோ
கூட, அவரவர் வாழ்க்கைமுறைக்கேற்ப கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு வாழ்ந்துவிட
முடிகிறது; ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை யாருக்குமே திருப்தியான
வாழ்க்கை இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நீங்கள் யாரேனும் முதியவரிடம், நண்பரிடம்,
உறவினரிடம் என்று யாரிடம் பேசினாலும் சரி, அந்த உரையாடலில் உடம்பே சரியில்லை
என்றவிதமான புலம்பலோ, அங்கலாய்ப்போ கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்!
என்னுடைய உடம்பு மிகவும் ஆரோக்கியமானது;
எனக்கு நோய்நொடியே வந்ததில்லை என்று சிலர் பீற்றிக்கொள்ளக் கூடும். அப்படிப்
பேசுபவர்கள், ஒன்று பொய் சொல்கிறார்கள், அல்லது தம்முடைய உடல்நலன் சார்ந்த
பிரச்னைகள் சொல்லத் தக்க அளவில் பொருட்படுத்தக்கூடியது அல்ல என்று கருதுகிறார் களாயிருக்கும்.
எப்படியிருந்தாலும் சரி, மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளவேண்டி யிருக்கும்
உடல்நலப் பிரச்னைகள் மிகவும் கடுமையாக இருக் கின்றன. வெளியே தெரிவதைக் காட்டிலும்
பன்மடங்கு அதிக மான உடல் நலன் சார்ந்த, வாழ்வு சார்ந்த வேதனைகளை அவர் கள்
அனுபவித்துவருகிறார்கள்.
பிரபு ஒரு நடுத்தர வயதுக் குடும்பத்திற்குப் பெயரளவில் தலைவராக இருந்துவந்தார்.
நான் ஏன் பெயரளவு தலைவர் என்று சொல்கிறேனெறால், அந்தக் குடும்பத்தின் முக்கிய முடிவுகளை யெல்லாம் அவருடைய மனைவி ப்ரமீளா தான்
எடுப்பாள். பிரபுவின் கடமை என்பது வெறுமே அவருடைய மனைவி காட்டும் காசோலைகளில்
கையெழுத்திடுவது; வெறுமே ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியேறிவிடுகின்ற அறிவுரை களை
வழங்குவது. பிரபுக்கு நிறைய உடல் உபாதைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது
சீர்கெட்டுவிட்ட முழங்கால் ஒன்று, உயரளவு ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும்.
அதன் விளைவாக, அவருடைய உடல்நிலையை, அவன் சாப்பி டும் உணவை அவனுடைய
மனைவி உன்னிப்பாக கண்காணித்து வந்தாள். ஏறத்தாழ வீட்டுக்காவலில் இருந்தார் அவர் என்றே சொல்லலாம், அவர் வெளியே எங்கே போவதானாலும் அவளும் அவருடனேயே
புறப்பட்டுவிடுவாள்!
ஆனால், அவருடைய உடல் உபாதைகள், மனைவியின் வேட்டை நாய்த்தனமான
கண்காணிப்பு எல்லாவற்றையும் மீறி, பிரபுவுக்கு மதுவருந்தவும் சிகரெட் புகைக்கவும்
உதவிசெய்ய அவருடைய
வேலையாள் மது
இருந்தான்!
இப்பொழுது அந்த வேலையாள் மதுதான் பிரபுவின் அறைக்குள் வருகிறான்;
”மது, எனக்கு ஒரு சிகரெட் பற்றவையேன்,” என்கிறார் பிரபு.
”எஜமான்,
இப்பொழுதெல்லாம் இதைச் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது… போன தடவை எஜமானியம்மா
என்னைக் கையுங்களவுமாய்ப் பிடித்து, இன்மேல் ஒரு சிகரெட் உங்களுக்கு வாங்கித்
தந்தால்கூட என்னை வேலையை விட்டுத் தூக்கிவிடுவதாய் பயமுறுத்தினார். ” என்றான்.
"பிரபு அவனை இடைமறித்து, “ சரி, சரி நான் உனக்கு ஒரு
சிகரெட்டுக்கு இன்னும் 5 ரூபாய் அதிகம் தருகிறேன். எங்கே என்னுடைய மதுக்கோப்பை?” என்று கேட்டார்.
மது கதவைத் தாழிட்டு, பிரபுவிடம் ஒரு சிறிய புட்டியைத் தந்தான்;
“எஜமான், சீக்கிரம் குடித்து முடியுங்கள், யாராவது வந்துவிடப் போகிறார்கள்” என்றான்.
பின்னர், பிரபு குடித்துமுடித்த பிறகு, “ எஜமான், அதன் விலை
200 ரூபாய்”, என்றான்.
”என்னது?” என்று கத்தினார் பிரபு. “போன தடவை நான் உனக்கு 100
ரூபாய் தான் தந்தேன்.”
”ஆமாம் எஜமான், ஆனால் நாட்டுச்சாராயத்தை யாருக்கும் தெரி யாமல் வீட்டிற்குள்
கொண்டுவருவது இப்போதெல்லாம் எத்தனை கடினமான காரியமாக இருக்கிறது தெரியுமா?”
“மது, இங்கே நீ
தொடர்ந்து வேலையிலிருக்க வேண்டுமா, அல்லது, உனக்கு வேலை போனால் பரவாயில்லையா?
இதைமட்டும் எனக்குச் சொல்லிவிடு" என்றார் பிரபு,
தொடர்ந்து, “சின்ன வயதில் நான் மிகவும் நன்றாக நடிப்பேன் தெரியுமா?’ அதுவும்,
குடிகாரனாக அற்புதமாக நடிப்பேன்; உன்னுடைய எஜமானியம்மாவின் எதிரில் அப்படி
நடிக்கவா? அப்படிச் செய்தால் உன் கதி என்னாகும் என்று யோசித்துப்பார்!” என்று கேட்டார்.
"ஐயோ, வேண்டாம் எஜமான், அப்படிச் செய்துவிடாதீர்கள்” என்று
பயந்துபோய் கெஞ்சினான் மது. “உங்களுக்கு என்ன விருப்பமோ அந்தப் பணத்தை மட்டும்
தண்டால் போதும்”;
அப்போது கிரிக்கெட் ஸீஸன். பிரபுவுக்கு கிரிக்கெட் மீது இருந்த மோகம்
குறையவேயில்லை. ஆனால் அவருடைய நினைவு மழுங்கிக்கொண்டிருந்தது. அவருடைய பேரன் அஜித்
மட்டுமே அந்த வீட்டில் கிரிக்கெட் ரசிகனாக இருந்தான்.
"அஜித், ஐ.பி. எல்
நடந்துகொண்டிருக்கிறது, ஆனால், தெரிந்த முகமாக டி.வியில் யாரையுமே
பார்க்கமுடியவில்லையே, ஏன்?” என்று பேரனிடம் கேட்டார் பிரபு.
“யாரைப்போல், தாத்தா?” என்று கேட்டான்
அஜித்.
அந்தப் பையன்
விஷமக்காரன். தாத்தாவுக்கு எதுவும் சரியாக ஞாபகம் இருப்பதில்லை என்பது அவனுக்கு
நன்றாகவே தெரியும். அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான்.
வேகப்பந்து வீச்சாளராகத் திகழும் கிரிக்கெட்வீரன் ஒருவரைக் குறிப்பிட்டார் பிரபு.
ஆனால், அவருடைய பெயர் என்ன தாத்தா?”
“ஸ்ரீ, ஸ்ரீ…. “ என்று முணுமுணுத்தார் பிரபு. “எனக்கு
அவனுடைய முழுப்பெயர் ஞாபகம் வரவில்லை.”
அது ஸ்ரீகாந்தாக இருக்க வழியில்லை தாத்தா, அவர் வேகப்பந்து வீச்சாளர்
கிடையாது. தவிர, இப்பொழுது அவர் ‘கோச்’ மட்டுமே.”
“அஜித், என்னை முட்டாளாக்கப் பார்க்காதே”, என்று கூறினார் பிரபு.
”தாத்தா, அது ஸ்ரீநாத்தா?
ஆனால், அவர் ‘ரிடையரா’கி விட்டாரே!”
“இல்லை, இல்லை” என்று ஆத்திரத்தோடு கூறினார் பிரபு.
“ஒருவேளை, நீ ஸ்ரீராமைக் குறிப்பிடுகிறாயா? ஆனால், அவர் ஐ.பில்.
எல்லில் கிடையாதே, அவர் வெறும் ‘க்ளப் ப்ளேயர்’ தான்!”
”பரவாயில்லை, அடுத்து நீ
என்னிடம் அது ஸ்ரீவித்யாவோ, ஸ்ரீதேவியோ இல்லை என்று சொல்வாய்,” என்ற பிரபு,
“உனக்கு என்னிடம் சொல்ல விருப்பமில்லையென்றால் நான் வேறு யாரிடமாவது
கேட்டுக்கொள்கிறேன்_” என்றார்.
“ஹோ, இப்பொழுது நீ யாரைக் குறிப்பிடுகிறாய் என்று எனக்குப்
புரிந்விட்டது, தாத்தா”, என்ற அஜித் “நீ ஸ்ரீஷாந்தைத் தானே குறிப் பிடுகிறாய்!
ஆனால், அவர் இப்போது ஸஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளாரே தாத்தா!”
“இத்தனை நேரமும் அது உனக்குத்
தெரிந்தேயிருந்தது… இல் லையா? என்னை வைத்துக் கொஞ்சம் வேடிக்கை செய்து மகிழ்ச் சியடையப்
பார்த்தாய், அவ்வளவுதான்…”
அவருடைய உணவு வழக்கமாக அவருடைய அறையிலேயே பரிமாறப்படும். ஆனால்,
அன்று அவரும் குடும்பத்தாரோடு சேர்ந்து சாப்பிட வரும்படி அழைக்கப்பட்டார். அப்படி
அழைக்கப் பட்டதற்கு என்ன காரணம் என்று பிரபு கேட்க விரும்பினார்.
சாப்பாட்டு மேஜைக்குச் சென்றதும் அங்கேயிருந்தவர்கள் ஒரே குரலில்
“ஹாப்பி பர்த்டே தாத்தா!” என்று பாடினார்கள்.
பிரபு சாப்பாட்டுமேஜையருகே நடுநாயகமாக அமர்த்தப்பட்டார்.
மேஜையின் மீது என்னென்னவோ தின்பண்டங்கள் பரப்பிவைக் கப்பட்டிருந்தன,
ஆனால், நாக்கில் எச்சிலூற வைக்கும் தின்பண் டங்கள், இனிப்புகள் எல்லாமே தன்னுடைய
கையெட்டும் தொலைவிற்கு அப்பால் வைக்கப்பட்டிருந்தன என்பதை பிரபு கவனித்தார்;
அவருடைய தட்டில் இருந்ததெல்லாம் உப்புசப்பில்லாத உணவு, ஒரு
சின்னஞ்சிறிய லட்டுத்துண்டு. அவ்வளவே.
அவர் ப்ரமீளாவை ஏறிட்டு நோக்கியபோது, “உங்களுக்குத் தான் தெரியுமே,
உங்கள் உடல்நிலை மோசமான நிலையில் இருக் கிறது. டாக்டர் உங்களுக்கு உப்புசப்பில்லாத
உணவைத் தான் தர வேண்டும் என்று என்னிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். கொஞ்சம்போல உப்பு
சேர்த்துக்கொள்ளலாம், அவ்வளவுதான். அந்த லட்டு உங்களுக்கு இன்று பிறந்தநாள்
என்பதற்காக. சொல் லப்போனால், அதைக்கூடத் தரக்கூடாது என்று டாக்டர் என்னைத்
தடுத்தார்.”
பிரபு தன்னுடைய மருத்துவரை சபிப்பதாய் முணுமுணுத்தார். ஆனால்,
அவருடைய குடும்பத்தார் அதைப் பொருட்படுத்தவே யில்லை. அவர்கள் மும்முரமாக
அங்கேயிருந்தவற்றையெல்லாம் ஆசைதீர விழுங்கிக்கொண்டிருப்பதை பிரபு கவனித்தார். அவரு
டைய பேத்தி ஆர்த்தி மட்டும் சாப்பிடவில்லை. அவருடைய அருகில் அமர்ந்தபடி வெகு
மும்முரமாய் யாரிடமோ மௌபைல் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய தட்டில் இருந்த லட்டுவைப் பார்க்க பிரபுவுக்கு நாக்கில்
எச்சில் ஊறியது; யாரும் பார்க்காத அளவில் பாய்ந்து அதை எடுத்துக்கொண்டவர் அதைத்
தன்னுடைய வாயில் போட்டுக் கொண்டுவிட்டார்! ஆசைதீர அதைக் கடித்து ருசித்துக் கொண்டிருந்தபோது
அருகிலிருந்த ஆர்த்தி கூறினாள்:
“அம்மா, நீ என் தட்டில் லட்டு வைக்க மறந்துவிட்டாய்.”
“இல்லை, இல்லை ஆர்த்தி – நீ அதைச் சாப்பிட்டிருப்பாய்; இந்தா,
இன்னொன்று எடுத்துக்கொள்”, என்றாள் அவளுடைய அம்மா.
“ஸெல்ஃபோனில் பேசுவதை நிறுத்தி சாப்பிடத் தொடங்கு, ஆர்த்தி….
இல்லையென்றால் இந்த லட்டுவும் காணாமல் போய்விடும்! அதுவும், உன்னுடைய தாத்தா இங்கே
இருக்கிறாரே!” என்றால் ஆர்த்தியின் பாட்டி.
பிரபு
தன்னுடைய அறைக்குத் திரும்பிவந்துவிட்டார். தன்னுடைய வாழ்க்கையின் 80 வருடங்கள்
எப்படியெல்லாம் கழிந்துபோயின என்பதை எண்ணிப்பார்த்துக்கொண்டார்;
அவருடைய நினைவலைகள் அவரைக் குழந்தைப்பிராயத்திற்கு வழிநடத்திச்
சென்றன. அங்கிருந்து பள்ளி, கல்லூரி நாட்களுக்கு; தன்னுடைய நண்பர்களோடு அவர் கண்டு
களித்த திரைப்படங்கள் – ஆங்கிலப் படங்கள், இந்திப் படங்கள் நினைவுக்கு வந்தன.
பின், அவருக்குப் பிடித்தமான பாடகர்கள் நினைவுக்கு வந்து அவரை நெகிழச் செய்தார்கள்;
பாடகர்களில் என்றுமே முகேஷ் தான் அவருக்கு மிகவும் பிடித்தமானவர்!
முகேஷைப் பற்றி நினைத்துக்கொண்டதும், அவர் பாடியதிலேயே தனக்குப்
பிடித்தமான பாடல்களில் ஒன்று பிரபுவின் உதடுகளிலிருந்து ஒலித்தது: “ப்யார்
ஹுவா இக்ரார் ஹூவா( "Pyaar Hua Ikraar Hua)
"
அறைக்கதவு தட்டப்பட்டது. ப்ரமீளா உள்ளே நுழைந்தாள்: “தயவு செய்து பாடாதீர்கள்; நீங்கள்
பாடும்போதெல்லாம் அக்கம் பக்கத்துவீட்டாருக்கு சிரிப்புக்குப் பஞ்சமில்லாமல்
போய்விடு கிறது. தவிர, நாம் இங்கே நல்லபடியாக வாழவேண்டும் என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக, உங்கள் வயலினை வாசிக்கத்தொடங்கிவிடாதீர்கள். அதைக்
கேட்டாலே தெருநாய்களெல்லாம் குறைக்கத் தொடங்கிவிடுகின்றன
அப்பொழுதுதான்,
இன்னும் தான் வாழத்தான் வேண்டுமா?’ என்ற எண்ணம் பிரபுக்கு ஏற்பட்டது. அண்ணாந்து
வானத்தைப் பார்த்த வர், “எதற்காக இன்னும்
காத்துக்கொண்டிருக்கிறாய், கடவுளே, இப்பொழுதே வந்து என்னைக் கூட்டிக்கொண்டுபோய்விடு…
கூட்டிக் கொண்டுபோய்விடு….!” என்று மன்றாடிக் கேட்டுக் கொண் டார் அவர்!
ஜி.வெங்கடேஷ்
No comments:
Post a Comment