LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Thursday 6 November 2014

ராவணன் நல்லவனா? கெட்டவனா?

ராவணன் நல்லவனா? கெட்டவனா?


நாம் எல்லோருமே ராமாயணத்தைப் படித்திருக்கிறோம் அல்லது கேட்டிருக்கிறோம்.

இந்துக் கலாச்சாரத்தில் மூத்தவர்கள், முதியவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு, பேரக்குழந்தைகளுக்கு ராமாயணக் கதை கூறுவது வழக்கம்.

எப்பொழுதுமே ராமன் கதாநாயகன் - அதாவது நல்லவனாகவும் ராவணன் கெட்டவனாகவும், தீமையின் உருவமாகவும் சித்தரிக்கப்படுவார்கள்.

நம்முடைய முன்னோர்கள் ராமனைப் போல் வாழவேண்டும் என்று நம்மிடம் கூறுவார்கள்.  

அவர்களுடைய வாரிசுகளுக்கு ராமன் என்று பெயர் சூட்டுவார்கள்.

ஆனால், ராவணன்?

அவன் வெறுப்பிற்குரியவனாகவே பார்க்கப்படுகிறான்; அவமானச்சின்ன மாகப் பழிக்கப்படுகிறான்.

ராவணன் இந்த வெறுப்புக்கும், அவமதிப்பிற்கும் உரியவனா?

ராமாயணம் கடந்தகாலங்களில் ஒருவருக்கு மேற்பட்டோரால் எழுதப்பட்டு வந்திருக்கிறது.


அவர்களில் சிலர் எழுதியுள்ளவற்ரின் அடிப்படையில், விருப்புவெறுப்பின்றி ராவணனுடைய வாழ்க்கையை நம்மால் அணுக முடிந்தால், ஆச்சரியகரமான சில தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

ராவணன் ஒரு பிராமணன். பிராமணத் தந்தைக்கும், அரக்க குலத்தைச் சேர்ந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தவன். 

சிறுவயதிலிருந்தே ராவணன் கடின உழைப்பாளியாக விளங்கிவந்தான். சிவ பக்தனான அவன் பல கடும் தவங்களை இயற்றியவன். அவற்றின் பலனாய் சிவன் அவனுக்குத் தந்த வரங்கள் அவனை வேதங்கள், மற்றும் சாத்திரங்களில் தன்னிகரற்றவனாக விளங்கச் செய்தது. தலைசிரந்த போர்வீரனாகவும், லங்காபுரியின் அரசனாகவும் விளங்கினான் ராவணன்.

லட்சுமணன் மட்டும் கொஞ்சம் நிதானத்தோடு நடந்துகொண்டிருந்தால், ராமாயணமே உருவாகியிருக்காது!

தன்னுடைய சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தால் சீற்றமடைந்த ராவணன், சீதையை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு இலங்கைக்குச் சென்றான்.

அங்கும் கூட, சீதை அவனுடைய மனைவியாக மறுத்த போது, ராவணன் அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளை வலுக்கட்டாயமாக அடைய முயற்சி செய்யவில்லை. ராவணன் லங்காபுரியின் மிகவும் பெயர்பெற்ற மன்னனாகத் திகழ்ந்தவன்.

இவ்வாறு, ராவணனின் ராவணனின் அகங்காரமும், தான் என்ற அகந்தையுமே அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணமாகின.

அதற்காக அவனை கேடுகெட்ட கயவனாகப் பாவிப்பது சரியல்ல.


வெங்கடேஷ் 

No comments:

Post a Comment