LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Saturday 31 January 2015

தேவி அருள் புரிவாய்!

தேவி அருள் புரிவாய்!




நம் வீட்டில் வேலை செய்யும் பணியாளை[பணிப்பெண்ணைக் கையாள்வது மிகவும் சுலபம் என்றுதான் நாம் எலோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எழுத்தறிவில்லாதவர்கள், எதிர்த்துப் பேச மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.  


ஆனால் வேலைக்கமர்த்திய பிறகுதான் அவர்களால் எத்தனை பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது நமக்கு உறைக்கிறது.



ராமுவும் இதற்கு விதிவிலக்கல்ல; தீர்மானமான பிரம்மசாரி அவர். வயதா கிக்கொண்டே போவதும், வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதுமாக, அவ ருக்கு வீட்டில் உதவிக்கு ஆள் தேவைப்பட்டது.  

 தன்னுடைய தேவையை அக்கம்பக்கத்தில் உள்ள தெரிந்தவர்களிடம் கூறினார். 

அதன்பின், நீண்டகாலம் காத்திருக்கவேண்டிய அவசியமிருக்க வில்லை. துணியை சலவை செய்துகொண்டுவருபவர் வீட்டுவேலைக்காக ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டுவந்தார். 

“ஸார், இந்தப் பெண் இங்கே இந்தப் பகுதியில்தான் வேலைபார்த்து வரு கிறாள். உண்மையாக உழைப்பவள். இதற்கு நான் உத்தரவாதம்.” என்றார் அவர். 

“அப்படியானால் சரி” என்றார் ராமு. என்ன வேலை, எத்தனை சம்பளம் என்பதையெல்லாம் விளக்கமாகக் கூறினார். எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார். பின், “நீ நாளையிலிருந்து வந்து விடலாம்”, என்றார்.



 தேவி(அதுதான் அந்தப் பணிப்பெண்ணின் பெயர்) முதல் சில மாதங்கள் உண்மையாக உழைத்தாள். விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை.



ராமுவின் வீட்டில் தன்னை உறுதியாக வேரூன்றிக்கொண்ட பிறகு, அவள் தன்னுடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்தத் தொடங்கினாள்.



வாரம் ஒருமுறையாவது வேலைக்கு வராமல் போக்குக்காட்டத் தொடங்கினாள்.



ஏன் என்று கேட்டால், அதற்குத் தயாராய் கைவசம் சில சாக்குபோக்குகளை வைத்துக்கொண்டிருந்தாள்.  



’எங்க உறவுக்காரவுங்க இறந்துபோயிட்டாங்க’ அல்லது, ’வீட்டுக்கு மண்ணெண்ணெய் வாங்கவேண்டியிருந்தது, பெரிய க்யூவுல ரொம்ப நேரம் காத்திக்கிட்டிருக்கவேண்டியிருந்தது’ அல்லது’ ‘உடம்பே முடியலை’


மேலும், தினசரி வேலை செய்யும் நேரத்தையும் குறைத்துக்கொள்ளத் தொடங்கினாள்;  ஆரம்ப நாட்களில் ஒரு மணி நேரம் உண்மையாக வேலை களைச் செய்துவந்தவள், இப்பொழுதெல்லாம் அதே வேலையை அரை குறை யாய் 40 நிமிடங்களில் முடித்துக்கொண்டு கிளம்பத் தொடங்கினாள். 

கொஞ்ச நாட்களாகவே அவளுடைய அசிரத்தையான, அரைகுறையான வேலை களைக் கவனித்துக்கொண்டிருந்த ராமு, இதை இனியும் இப்படியே விடக் கூடாது என்று தீர்மானித்தார். 

சம்பள நாள் அன்று, அவள் சரிவர வேலை செய்வதில்லை என்றும், இப்படியே போனால் தான் வேறு ஆளை வேலைக்கமர்த்திக்கொள்ள வேண்டி வரும் என்றும் கூறினார்.


”ஓ, அப்படியா, அதையும் தான் பாக்கலாம். வேற எவ இங்க வந்து என்னைவிட மேலா வேலை செய்வாள்னு பாக்கறேன்”,



அதாவது, அவள் மருத்துவமனையில் சில காலம் இருக்கவேண்டி வந்தாலொ ழிய!



அப்படியே தப்பித்தவறி அந்த மாதிரி நடந்துவிட்டாலும்கூட, ஆறுமாத சம்பளத்தை என் கையில் கொடுத்து அனுப்பத் தயாராக இருக்கவேண்டும். இந்தநாளில் நினைச்சா வேலை கெடக்குதா என்ன?



எனவே, இப்பொழுதெல்லாம் ராமு போகுமிடங்களிலெல்லாம் ஒரே கவலை யாகக் காட்சியளித்தார்.



’க்ளப்’போ, ’பார்க்’கோ எங்கு போனாலும் அவரை கவலை பாரமாக அழுத்திக் கொண்டிருந்தது.



அவருடைய நண்பர்களில் ஒருவரான ஷ்யாம் க்ளப்பில் அவரைப் பார்த்த போது கேட்டார். “ஏன் கவலையாயிருக்கிறாய் ராமு? ஏதாவது பிரச்னையா?”



ராமு அவரிடம் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் தேவியைப் பற்றிக் கூறினார். 

“இதுதான் விஷயமா? கவலையை விடு! என்னிடம் சொல்லிவிட்டாயல்லவா - இனி நான் பார்த்துக்கொள்கிறேன்.”


ஷ்யாம் மேடை நாடகக் கலைஞர். நன்றாக நடிப்பார் தன்னுடைய திட்டத்தை அவர் ராமுவிடம் கூறியபோது ராமுவுக்குக் கொஞ்சம் பயமாகவே இருந்தது.


“நீ பயப்படவேண்டிய அவசியமேயில்லை ராமு. ஓய்வாக ஓரமாக அமர்ந்துகொண்டு உன் வீட்டில் நடக்கப் போகும் தமாஷைப் பார்!



குறிப்பிட்ட நாளில், திட்டமிட்டபடி ஷ்யாம், ராமுவின் வீட்டுக்கு வந்து அவ ரோடு அமர்ந்தபடி அதையும் இதையும் பேசிக்கொண்டிருந்தார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில்(தன்னுடைய நாடகக் குழுவினரிட மிருந்து கடன் வாங்கி உடுத்திக்கொண்டிருந்தார்!) வந்திருந்தார். தேவியின் வருகைக்காய் காத்துக்கொண்டிருந்தார்.  

ராமுவின் வீட்டு வாசலில் ஒரு ஜீப்( போலீஸ் ஜீப் போல்!) நின்றுகொண்டிருந் தது.

தேவி 30 நிமிடங்கள் தாமதமாக வந்துசேர்ந்தாள். வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியைப் பார்த்தபடியே உள்ளே சென்று பரபரவென்று வேலை செய்ய ஆரம்பித்தாள்.




அவள் கூடத்தைப் பெருக்கித் துடைத்துக்கொண்டிருக்கும்போது ஷ்யாம் தன்னுடைய ‘லத்தி’யால் காபி மேஜையில் தட்டினார், தன்னுடைய மீசையைக் கோபமாகத் திருகியபடியே தேவியை நோக்கிக் கோபமாக உறுமினார்: “யேய், இங்கே வா, என்ன இத்தனை ‘லேட்டா’க வருகிறாய்?”


”மன்னிச்சுக்கங்க ஐயா, கார்ப்பரேஷன் தண்ணீ  வர நேரமாயிட்டுது!”



“வாயை மூடு! பொய் சொல்வதை நிறுத்து! எத்தனை மோசமாக வேலை செய்திருக்கிறாய் தெரியுமா? நான் தான் நேரிலேயே பார்க்கிறேனே! இன்னும் ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்கக் கூடாது நீ. கிளம்பு, கிளம்பு!”

“இல்லை ஐயா, நான் இங்கே நல்லாத்தான் வேலை செய்கிறேன் ஐயா!”


”அதுதான் இப்படி ரூமிலேயெல்லாம் சிலந்திவலை தொங்குதா!”


”பாத்திரமெல்லாம் அழுக்கா, பிசுபிசுப்பா இருக்கு, பாத்ரூமுக்குள்ளே ஒரே வழுக்கல்!  என்ன இதெல்லாம்?”



“இல்லை ஐயா, அப்படியெல்லாம் இல்லை ஐயா!”



“எங்கேயிருக்கு உன் வீடு? உன்னுடைய முழுப்பெயர் என்னது?”


”சாரதா காலனியில் இருக்கேன் ஐயா, என் பேர் தேவி ராமசாமி ஐயா.”




ஷ்யாம் தன்னுடைய ஸெல் ஃபோனை எடுத்து ஒரு எண்ணை சுழற்றிப் பேசத் தொடங்கினார்:



”ஹலோ, யாரு முரளியா, நான் தான் ஷ்யாம் பேசறேன். இங்கே சாரதா காலனியிலே தேவி ராமசாமின்னு ஒரு அம்மா இருக்கு. ரொம்பப் பிரச்னை பண்ற பொம்புளை. கொஞ்சம் கவனி, என்ன?”



பின், தேவியை நோக்கித் திரும்பியவர், “அங்கே இருக்கிற அம்பு, செல்வம் ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு தெரியுமா?” என்றார்.


தேவி (அழுதபடி) ஐயோ வேணாம் ஸார், என்னை உள்ளே போட்டுடாதீங்க...”




அப்படீன்னா, என் நண்பரை ‘ப்ளாக் மெயில்’ பண்றதை இத்தோட நிறுத்திக்க. திரும்பவும் அப்படி ஏதாவது செஞ்சே, என்ன நடக்கும் தெரியுமா? தெரியும் தானே! பாத்து நடந்துக்க. போ, போய் வேலையைப் பாரு”



அந்தப் பெண்மணி அங்கிருந்து சென்றவுடன், ராமு ஷ்யாமிடம், “அட, என் னமா பிரமாதமா நடிச்சே!” என்றார். பின், “ஆனால், அன்பு, செல்வம் பத்தியெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”



”ரொம்ப சுலபம்! அவர்கள் மத்தியில் அன்பு, செல்வம் போன்றவை அதிக மாகப் புழங்கும் பெயர்கள்; எனவே, சொல்லிவைப்போமேன்னு சொல்லிப் பாத்தேன்!”



“முரளி கூட பேசினாயே, அது ?”



“அதுவா, அப்படி யாரிடமும் நான் பேசவே இல்லை. அந்தம்மா பயப்பட ணும்னு சும்மா, வெத்து ஃபோனைக் காதில் வச்சு பேசினேன்!”


”ரொம்ப தாங்க்ஸ் ஷ்யாம்” என்றார் ராமு.




“அட, இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லணுமா என்ன! ஏதாவது பிரச்னை வந்துச்சுன்னா உடனே கூப்பிடு. தயங்காதே, என்ன”



”மறுபடியும் இன்ஸ்பெக்டரா வருவியா!” என்று கேட்டார் ராமு.



“இல்லையில்லை, அப்ப என்ன பிரச்னையோ அதைப் பொறுத்து, அந்த சூழ் நிலைக்கேற்ப வருவேன்! என்றுபதிலளித்தார் ஷ்யாம்.


ஜி.வெங்கடேஷ்










Thursday 15 January 2015

SHANI DASA : SYNOPSIS OF THE EPISODE



   SHANI DASA : 
SYNOPSIS   OF THE EPISODE

The Hindu religion, though very  tolerant to practice, has strong beliefs and  lays down strict guidelines in some areas;

for example a day is divided into eight zones or  " Kaalams" of 90 minutes each;

one zone of these  called  Rahu Kaalam is considered very inauspicious for any productive activity.

Likewise, a human being's life span is divided into several dasas, one of which is" Shani Dasa".

In the Hindu  religion a  person is said to undergo innumera ble hardships when he or she passes through  the dreaded Shani  Dasa  during his or her life span.  

Then there is the time of birth which is controlled by  27 nakshatras or stars. 

A male child  born under the star "Revati" is considered unlucky and will have a troubled life. 

Similarly the lives of parents are said to  be in danger if they marry their son to a girl under the star " Aayilyam" .

Saraswati is a double whammy as she is born in a highly orthodox Hindu family  under the star  "Aayiliam  and has Shani Dasai ,early in her life span. 

Raamu, also from an orthodox Hindu family is deeply  in love with her but is forced  to marry her sister Shanti because of the latter's favourable stars & horoscope  under the suggestion  of the parents of the families.

The latter dies while giving birth to a child.  

The parents of both  Raamu & Shanti  and Saraswati are deeply distressed;

As the actors of this episode, feel the sorrow, these are the thoughts that go into their minds.




 Saraswati
                             
Why should my sister die at a young age.? I feel I am the cause of her death. The horoscope and stars say I was unlucky,  and Shanti was lucky but it turned out the other way. How can I have belief in  my religion  in future?  Wish I had not listened to  my parents  and married  Raamu, then all this would never have happened !  Best for me in future, is to have a registrar marriage  after making sure the man has regard ,and will take care of me. I wish I am allowed to take care of  the child.


Raamu
                                 
God,  why did you make me fall in love with Saraswati in the first instance ! Wish I had never met her at all !  for the rest of my life now , I will have a guilty conscience . God, you are playing too many tricks  on me !   Now for the sake of my child, I will have to marry Saraswati,as she is the best person to look after him !  How will I approach my inlaws and put this request to them ; if so, will Saraswati oblige?

                           
  Shanti [just  before her death]

God, why did  you punish me in this way ?  What wrong have I  done to you ?  What wrong  has my child done to you ?  Who will breast  feed  my child  and who will look after him till he grows up ? I wish I was stubborn and refused my mother's proposal outright !  I pay the ultimate price for rigid  Hindu dogmas !  What a cruel world and religion ! Please God, if you give me another life, let me be not born in my present religion !



Padmanabhan[Saraswati's Father - an astro loger]

God, give me the moral strength to practice my profession,!  but  who will come to me henceforth, with horoscopes to evaluate!  Should this ever  have happened in my family?  But I still have faith in my profession   even  though Shanti is dead  and  I will never get her back !  My wife begged me to reconsider, but I had put my foot down ! How can I disregard the rules and teachings in Hindu  astrology and horoscopes which have come down to us from Vedic times !


[Laxmi]Saraswati's mother 


I am the cause of this tragedy. I was the person who suggested  the marriage of Shanti to Raamu  although he loved my elder daughter  Saraswati.  If the world comes to know of this it will never forgive me. But I did it with all good intentions, as I know my astrologer husband,would never have permitted  Saraswati's marriage at that time. Will I or will I not suggest  to Padma  for Raamu to marry Saraswati now for the sake of the child? Will all agree  or will I look like a fool in everybody's eyes !


Padma [Raamu's mother]

Why did I listen to Laxmi at all ? I should have left it to Raamu to do what he wished at that time! Who will marry my Raamu again now  and who will look after the child ?   No, I am not going to ask Laxmi  for Saraswati's hand again; looks like there is some bad luck and hoodoo in that family !
but I have to think of my grandson also ! Oh God, please help me find another  suitable girl for my Raamu ,  who will also love and look after my grandson !


Subramanian [Raamu's father]

What a mess I am in !  just because of my wife !  Tells you never listen to women's ideas , there is always a problem there ! I should have put my foot down and taken charge at the very beginning ! Now how will my son take care of my grandson !  As I see it the best solution is for Raamu to marry Saraswati  as early as possible! I know that girl and she will look after  my grandson as her own child; but first I have to talk to Padmanabhan and convince him  about it .



          AFTER THE MOURNING   PERIOD.

AT   Raamu's House.


Subramanian: Raamu, where is your mother? Please call her;  We have to decide  about the child;

Padma:  If you ask me, we have to look for a new alliance for Raamu; There's some bad luck attached with the Padmanabhan  family; and we dont want to share it again;

Subramanian: Padma, Have you realised what will happen to your grandson then ?

Raamu:  Yes father I agree ; we are trapped in a hole ; the only way out is to talk it over with the  Pamanabhan family.

Meanwhile at  Saraswati's house


Laxmi:  Saraswati, the child is crying; Feed her with the bottle;

Saraswati:  Mama, the baby is not drinking !

Laxmi :  Do as I tell you [indicates to allow the  child, initially to suckle her breast and then quickly transfer the bottle to the child's lips]  I think we have to sort the child problem as early as possible.

Laxmi to Padmanabhan:  We have to solve the child's problem  immediately.  The child is not taking anything at all ! we have to coax it to drink milk.  There's only one solution; and you have to agree to it .

Padmanabhan : I know what you are going to tell me !  but I cant agree to what my profession forbids !  But I hear some footsteps outside the house . Oh it is our "Shamandis" [In laws of Shanti. ]

Subramanian to Padmanabhan: We have to take  a  joint   bold and practical decision mainly keeping the child in mind !  Let us leave it to our children , after all our lives are almost over ; so let us see what they decide !

Laxmi: Yes I agree what do you say  Padma ?

Padma:  Hmmm; I am terribly confused!  Laxmi,  Can we go against our  Vedas ?  Raamu,where are you going?

Raamu : Oh! to see my child  Amma;   he goes into the room where he finds Saraswati,cuddling his son.   Ramu and Saraswati  look at each other for some time! 

[Then Raamu whispers something into Saraswati's ears ; she looks at him lovingly  and nods her head].

Raamu: [to the parents]  I have great respect for the Vedas and Shastras ; but sometimes we have to be practical and solve our problems in the best way possible; rather than create new problems . All of us have to see how best we can make my son's life comfortable! I also  wish to inform all of you that very soon I  expect to be transferred to another city; I owe it to my son to give him all the love and care a father has to give him  and thus I wish to take my son along with me!  Under the circumstances, he will need a lady, a mother to look after him ; I have talked to Saraswati, and she has agreed to my proposal.

Padmanabhan & Padma:Raamu What are you saying?  Saraswati  will be  going through Shani Dasa and that will be harmful to all of us  including the child ! Moreover  has Saraswati agreed ?

Saraswati: [with the child in hand] Yes father! I am willing to confront  Shani Dasa  with the help of Raamu!

Padmanabhan: Saraswati, from henceforth, either you stay in this house or I!

Raamu: You can stay here Sir, as I am taking the child & Saraswati to my house!

PadmaLaxmi:Raamu what are you saying?

Raamu: Yes mother I have decided Come Saraswati let us go; please bring the child along !



Many, many  years later


Both Padma and Laxmi have left this world! 

Padmanabhan has retired and left his profession for good! 

So has Subramanian,

Sita [granddaughter of Subramanian]  meets a very old man at the end of the street [where she resides] asking   about a Subramanian's residence.  

She leads him to her residence; goes inside and meets her grand father. 

"Thata, there is an old man who wants to meet you"  she says.

"Who is it, where is  he?"  asks  Subramanian.  
"There thata,  he is standing outside the house".

Subramanian  recognises him. 

"Padmanabhan, please come in" said Subramanian, "Sita go and call your mother  Saraswati", ! says Padmanabhan.

"Father!" said Saraswati "Father" I respected Shani Dasa  and married Raamu only after I  had crossed it."  said Saraswati!


G.Venkatesh
















































Saturday 3 January 2015

வள... வள.... வம்பள....!


*இது நகைச்சுவையாக எழுதப்பட்டது. 
யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் அல்ல.


வள... வள... வம்பள....!


லக்ஷ்மி: ஹலோ சுனிதா,எப்படியிருக்கே? நல்லாயிருக்கியா? வேலையெல்லாம் முடிஞ்சாச்சா? கொஞ்சம் வம்பளக்க நேரமிருக்கா? 

சுனிதா: ஹலோ லஷ்மி, பேசலாம்! பேசலாம்! வள வள வள.!நேத்து நான் ஸ்வேதாவைப் பாத் தேன். ’ஷாப்பிங் மால்’ ல ஒரு புதுப் புடவை கட்டிக்கிட்டிருந்தா.... பாக்கவே சகிக்கலை.. அவகிட்டயே சொல்லிடணு ம்னு ஆசையா இருந் துச்சு...ஆனா, அவ புருஷங்காரன் பக்கத்திலே இருந்தான்!


லக்ஷ்மி: நீ சொல்றது சரிதான். புருஷங்காரங்க பக்கத்திலே இருக்கற ப்போ நம்ம வெறும் புன் னகை செய்ய மட்டும் தான் முடியும்.... வள.. .. வள.... வள... 

சுனிதா:  ப்ரகாஷ் போயாச்சா? வள... வள... வள...


லக்ஷ்மி: இல்லை, இங்கெ எங்கெயோ தான் இருக்கார்... .வள....வள....வள.... குமார் ?

சுனிதா: அவரும் இன்னும் போகலை.... கடுகடு ன்னு இருக்கார்.... ஆபீஸ் பிரச்னைகள்..வள.. வள.... வள....


லக்ஷ்மி: இன்னும் கொஞ்சம் வம்பாக்கலாமா? நேர மிருக்கா?

சுனிதா: இருக்கு! இருக்கு ! மேலே சொல்லு!


சுனிதா: என்னுடைய வீட்டுக்கு நேர்கீழே உள்ள ஃப்ளாட்டில் இருக்கும் காவேரியை உனக்குத் தெரியும்தானே? அவள் ஒரு புதுப் பையனுடன் ஊர்சுற்றிக்கொண்டிருப்பதைப் பாத்தேன் தெரி யுமா! தெருவில் அவர்களைப் பார்த்துவிட்டேன். “ஆண்ட்டி, இது என்னுடைய ஒன்றுவிட்ட தம்பி ஹேமந்த் என்கிறாள்!எப்படிப் புளுகுகிறாள் பார்த் தாயா!


சுனிதா:  நான் உன்னிடம் சொன்னேனோ - எங் கள் வீட்டுக்கு இரண்டு மாடிகள் கீழேயிருக்கி றாளே மிஸஸ் தத், அவள் நல்லவள் தான்... அவள் வீட்டுக்கு ஒரு அழகான ஆசாமி அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறான்! அதைப் பற்றி அவளிடம் கேட்டபோது, உடம்பு வலிக்கு சிகிச்சை பெற்றுவருவதாகச் சொல்கிறாள்...! Dal me kuch kala hai!! வள....வள.. ..வள...


லக்ஷ்மி:  இந்த மியூஸிக் ஸீசன்ல யாருடைய கச்சேரிக்கெல்லாம் போகப்போறே? வள.... வள....வள....?  


சுனிதா: நித்யஸ்ரீயின் கச்சேரிக்குப் போகலாம் னு நினைச்சுக்கிட்டி ருக்கேன்..வள.. .வள... வள.. போன டிசம்பர்ல அவளுடைய கச் சேரியைக் கேட்க முடியாமல் போய்விட்டது.


லக்ஷ்மி: ஓஹோ! நீயும் அவளுடைய ரசிகையா! வள....வள.. ..வள.... எனக்கு அருணா சாய் ராம் தான்!


சுனிதா: அருணாவா! நித்யஸ்ரீ அளவுக்கு அவளால் தமிழையும் சரி, தெலுங்கையும் சரி, சரியா உச்சரிக்கவே தெரியாது!


லக்ஷ்மி:ஆனா, நித்யாவால் ‘அபங்க்’ பாட முடியுமா, சொல் பாக்க லாம்! தவிர, அருணாவின் உடையலங்காரங்கள் எவ்வளவோ நேர்த் தியாக இருக்கிறது... வள.... வள.... வள....


சுனிதா: கச்சேரிக்குப் போவதே அவங்களுடைய புடவை, நகைக ளைப் பார்ப்பதற்குத் தான் என்று சொல்லிவிடுவாயோ! வள... வள.... வள...


லக்ஷ்மி:  வள....வள....வள....


சுனிதா:  வள.... வள....வள...


குமார்:  சுனிதா, எனக்கு ஆபீசுக்கு நேரமாகிறது; தயவுசெய்து சீக்கிரம் டிஃபன் தா!


சுனிதா:[போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் டிராஃபிக் போலீஸ்காரர்போல் சைகை செய்து காத்திருக்கும்படி தெரிவித்த வாறே] பாடகர்களுக்காக நாம் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம் லக்ஷ்மி.... வள...வள...வள...


லக்ஷ்மி:   ஸ்போர்ட்ஸ்காரங்களும் நடிகைகளும் ஏன் எப்பவும் ஒருத் தரோடொருத்தர் காதல் கத்திரிக்காய்னு மாட்டிக்கிறாங்க?


சுனிதா: லஷ்மி, ஏன் தெரியுமா? அப்பத்தானே ஒருத்தர் இன்னொருத் தரை அண்டிப் பிழைக்கலாம்! தவிர, இரண்டு துறைகளிலுமே குறு கிய காலம் தான் நிலைக்க முடியும் என்பதால் இருவரில் யாரேனும் ஒருத்தர்க்கு மார்க்கெட் சரிந்துவிட்டால், மற்றவர் அவரை ஆதரிக்க முடியும். 

  
லக்ஷ்மி: நீ சொல்வதைக் கேட்டு எனக்கு ஒரு சின்ன டி.வி ஸ்டா ரைப் பத்தி ஞாபகம் வருது. எங்கள் வீட்டுக்கு இரண்டொரு வீடுகள் தள்ளித்தான் இருக்கா அவ. பார்ப்பதற்கு சாக்‌ஷி போலவே இருப் பாள், எப்படியோ ஒரு பெரிய அதிகாரியைப் பிடித்துக்கொண்டு விட் டாள்;(பார்க்க கொஞ்சமேகொஞ்சம் ’தோனி’யைப் போல் இருப்பான்] கடவுளே, அவர்கள் கடை கண்ணிக்குப் போனால், அவள் அவனை எப்படி ஆட்டிவைப்பாள் தெரியுமா? பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.

சுனிதா:  வள...வள....வள....

லக்ஷ்மி:  வள....வள....வள....


ப்ரகாஷ்:  லஷ்மீ, குழந்தை அழுகிறது.


லஷ்மி:  [ப்ரகாஷிடம் சைகையில்] ஜட்டியை மாற்றுங்கள்...


ப்ரகாஷ்: நான் ஜட்டியை மாற்றவேண்டுமா? சரி, சரி , மாற்றிவிடுகி றேன்... ஆனால் ,நீ உன்னுடைய வம்பளப்பை எப்போதுதான் நிறுத் தப்போகிறாய்?


லக்ஷ்மி: ஹா ஹா! சினிமாவைப் பொறுத்தவரை, இந்தியக் கதா நாயகர்கள் எல்லாமே வயதானவர்களாய் தோற்றமளிக்கும்போதுதான் கொஞ்சம் நன்றாக நடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று தோன்றுகிறது!


சுனிதா: இதில் நீ சொல்வதை நானும் ஒப்புக்கொள்கிறேன்! இளை ஞர்களாக இருக்கும்போது தங்களுடைய தோற்றத்தை வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்துவிடுகிறார்கள்; ஆனால், வயதாகும் போது, நன்றாக நடித்தே தீரவேண்டியிருக்கிறது. இல்லையென்றால் மார்க்கெட் காலி! ஆனால், வள... ரஜினியுடையதைத் தவிர்த்து மற்றவர்களின் தலைமுடி இயற்கையா, செயற்கையா?-


குமார்:   சுனிதா, இப்ப வம்பளப்பதை நிறுத்தப்போகிறாயா, இல் லையா?மாட்டாயென்றால் உன்னுடைய மௌபைலை எடுத்து ஜன்னல் வழியாக வீசியெறிந்துவிடுவேன்!


சுனிதா: உங்கிட்டே அப்புறம் பேசறேன் லஷ்மி; குமாருக்கு எக்கச் சக்கக் கோபம் போல் தோன்றுகிறது! [குமாரிடம்] இந்த வீட்டில் எனக்காக பத்து நிமிடங்கள் கூடக் கிடைக்காது போலிருக்கிறது குமார். அப்பப்ப நீங்களே சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்க முடியும் தானே! எல்லாமே தயாராக மேஜை மேல் வைத்திருக்கிறேனே!


குமார்: நான் ஆபீஸுக்குப் போன பிறகு தினமும் உனக்கு வம்பளக்க எட்டு மணி நேரத்துக்கு மேலே இருக்கே


சுனிதா: அது சரிதான்! இந்த வீட்டில் எல்லாமே வானிலிருந்து வந்து கொட்டுகிறது என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது!


குமார்: அடுத்த முறை நான் வெளிநாடு செல்லும்போது எனக்கு ஒரு ரோபோ பணியாளை வாங்கிக்கொள்ளப் போகிறேன். அப்படிச் செய் தால் உன்னை நம்பியிருக்கவேண்டியதில்லை!

சுனிதா:  அந்த சமயத்தில் எனக்கு இன்னொரு மௌபைல் ஃபோன் வாங்கிக்கொண்டுவர மறந்துவிடாதீர்கள். கோபத்தில் நீங்கள் ஒன்றை வீசியெறீந்தால் எனக்குஅவசரத்துக்கு இன்னொன்னு இருக்குமே!





இதற்கிடையில், லஷ்மியின் வீட்டில் _ 




லக்ஷ்மி : ப்ரகாஷ், நான் இல்லையென்றால் குழந்தைக்கு ஜட்டி கூட மாற்றமுடியாதென்றா சொல்கிறீர்கள்?


ப்ரகாஷ்:  அடுத்து குழந்தையின் ஜட்டியைத் துவைத்துப்போடுங்கள் என்று சொல்வாய்!


லக்ஷ்மி:  அப்படி நீங்கள் செய்வீர்களானால் , அதில் தவறொன்றுமில்லை! நீங்களும் குழந்தையின் பெற்றோர் தான், நினைவிருக்கிறதல்லவா!

ப்ரகாஷ்:  அடுத்து, குழந்தை ஆய் போனால் அதைக் கழுவிவிடச் சொல்வாயோ என் னவோ!


லக்ஷ்மி : ஏன் கூடாது?


ப்ரகாஷ்:  இப்படியே போனால், உனக்கும் செய்யச் சொல்வாய் போலும்!


லக்ஷ்மி:  ப்ரகாஷ், நீங்கள் சொல்வதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? எனக்கு வயதாகி, உடம்புக்கு முடியாமல் போனால் நீங்கள் எனக்கு உதவியாக இருக்கமாட்டீர்கள், அப்படித்தானே! இது திருமணத்தின் போது நீங்கள் செய்துகொடுத்த சத்தியங்களுக்கே எதிரானது, தெரியு மில்லையா!


ப்ரகாஷ்:  கவலைப்படாதே,அந்த சமயத்தில் நான் உயிரோடு இருக் கப்போவதில்லை!


லக்ஷ்மி: ப்ரகாஷ், என்ன இது? நீங்கள் இங்கே ஒரு கொடுங்கோல் மன்னர் போல் நடந்து கொள்கிறீர்கள்! என்னுடைய சினேகிதியோடு இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினேன், அதற்குப் போய்...



ப்ரகா: 2 நிமிடங்களா! பத்துநிமிடங்களுக்குக் குறையாமல் இருக் கும் என்று நான் எண்ணுகிறேன்!


லக்ஷ்மி: ஹா ஹா _ நீங்கள் அலுவலகத்திலும், ’க்ளப்’களிலும் எத் தனை நேரம் வம்பளக்கிறீங்க, என்னவெல்லாம் வம்பளக்கிறீங்கன்னு தெரியாதா என்ன?


ப்ரகாஷ்:  ஆனால், ஆதாரமில்லாத, சரிபார்க்கப்படாத விஷயங்க ளைப் பற்றி இப்படி பேசிக்கொண்டிருக்க மாட்டோம். இன்னொரு விஷயம், எப்பப்பாத்தாலும் ஸெல் போனை காதோடு அப்படி ஒட்ட வைத்துக்கொண்டிருக்காதே, உன்னுடைய தலையில் கான்ஸர் வரும் ஆபத்தை உனக்கு நீயே உண்டாக்கிக்கொள்ளாதே! இதை உன்னுடைய சினேகிதிகளுக்கும் சொல்லிவை.அந்த பயமாவது இந்த வீட்டில் உங்க ளுடைய வள வள வம்பளப்பைக் குறைத்து ஓரளவேனும் அமைதி யைக் கொண்டுவரும்!



கணவர்கள் வேலைக்குச் சென்றுவிட்ட பிறகு _



லக்ஷ்மி:  சுனிதா, ஃப்ரீயா இருக்கயா? கொஞ்ச நேரம் வம்பளக்க லாமா?


சுனிதா: பேசலாம் லக்ஷ்மீ, எனக்குக் குமார் மேல ரொம்பக் கோபம் தெரியுமா! தன்னைப் பத்தி அவர் என்ன நெனச்சிக்கிட்டிருக்கார், தெரி யலை! நான் ஏதோ அவருக்கு வேலைக்காரி போலேயும் அவர் என்ன சொன்னாலும் நான் உடனடியா அதுக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கணும் னும் நினைக்கிறார்!


லக்ஷ்மி:  இங்கே ப்ரகாஷும் அதே கதைதான். இப்பத் தான் குழந்தை க்கு ஜட்டி மாற்றிப்போடச் சொன்னேன். அதுக்கு குய்யோ முறையோ ன்னு கத்தறார்!சில சமயம் இந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு இப்பிடி மாட்டிக்கிட்டிருக்கக்கூடாதுன்னு தோணுது! ஸெல் ஃபோனை அதிக நேரம் தொடர்ச்சியா உபயோகப்படுத்தக்கூடாதுன்னு எனக்கு சொல்றார் இவர். நமக்கு மூளையில கான்ஸர் வந்துடுமாம்!


சுனிதா: குமாரைப் பத்தி கூட நான் இதே மாதிரி தான் நினைச்சிக்கிட் டிருக்கேன் லக்ஷ்மீ.... அதை விடு, லக்ஷ்மீ உனக்கு விஷயம் தெரி யுமா! இன்னைக்கு இன்னொரு அழகான ஆள் மிஸஸ் ’தத்’துக்கு சிகிச்சையளிப்பதற்காக அவள் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்ததைப் பாத்தேன்! சரியான ஃப்ளர்ட் அவ!


லக்ஷ்மி:  இங்கே, அந்த சாக்‌ஷி தன்னோட உறவைத் திரும்பவும் முறித்துக்கொண்டாகிவிட்டது; ஹலோ சுனிதா... சுனிதா.... ஹலோ...! ஹலோ....!”




பின்னர் _



சுனிதா: [லாண்ட் லைனில்] என்னுடைய ஸெல் ஃபோன் ‘டெட்’ ஆகிவிட்டது! ‘ரீசார்ஜ்’ செய்தாக வேண்டும். நேத்துத்தான் முழுசா ரீசார்ஜ் செஞ்சேன். சார்ஜ் ஆன பிறகு மீண்டும் உனக்குக் ‘கால்’ செய்கிறேன், சரியா!”


லக்ஷ்மி: ஆனால், இப்போதே உன்னிடம் வம்பளப்பதற்கு என்னிடம் ஒரு பெரிய சுவாரசியமான விஷயம் இருக்கே!


சுனிதா: அப்புறமா பேசலாம், லக்ஷ்மீ... குமார் இப்பத்தான் வீடுவந்து சேர்ந்திருக்கார். நான் ‘லாண்ட் லைனில்’ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவர் மூஞ்சிலே எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது!(சன்ன மான குரலில் லக்ஷ்மியிடம் ) லாண்ட் லைனைத் தொடவே கூடாது என்று கூறியிருக்கிறார். அதைத் தன்னுடைய தனிப்பட்ட உபயோகத் துக்கு மட்டுமே என்று வைத்துக்கொண்டிருக்கிறார்!!





ஜி.வெங்கடேஷ்





 


நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் கொண்ட முரடன்!


நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் கொண்ட 
முரடன்!





        

      









இந்தியா 1947இல் சுதந்திர நாடாகியது.   

அந்த சமயத்தில், இந்தியாவில் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் தங்களுடைய தொழில்களைத்தொடர் ந்து இந்தியாவிலேயே செய்துவருவதா அல்லது அதையெல்லாம் விற்று விட்டு தாய்நாட்டிற்கே திரும்பிப்போய்விடுவதா என்று முடிவெடுத்தாக வேண்டியிருந்தது.   


திரு.க்ளெமெண்ட் பெர்க்கின்ஸ் கூட இந்த நிலைமையில் தான் இருந்தார் என்பதால் அவருக்கு ஒரே கவலையாயிருந்தது.

அவருடைய தயாரிப்புத் தொழிலை விற்க அவர் கோரிய விலை இந்திய வர்த்தகர்களுக்கு மிகவும் அதிகமாகப் பட்டது. எனவே, பெர்க்கின்ஸ் தன்னுடைய தொழிலை இந்தியாவிலேயே தொடர்ந்து செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.


சில நாட்கள் விடுமுறையில் இங்கிலாந்து சென்றிருந்தார் அவர்.   


தன்னுடைய பழைய நண்பன் ஸ்டீவ் ஸ்மித்-ஐப் பார்ப்பதற்காக அவர் ப்ராட்ஃபோர்ட்[Bradford] சென்றிருந்தார்.


ஸ்மித் ஒரு துணி தயாரிப்புத் தொழில் செய்துவந்தார். துணி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழில் பிரிவு அவருடையது. பெர்க்கின்ஸ் இந்தியாவில் செய்துகொண்டிருந்த தொழிலைப் போன்றது.


பெர்க்கின்ஸ் ஸ்மித்தை அவருடைய தொழிற்சாலையில் சந்தித்தார். 

" ஹாய் க்ளெம்”, என்றார் ஸ்மித். “என்ன ஒரே கவலையாக இருக்கி றாய், இந்தியன் பொரியலையெல்லாம் இனி சாப்பிட முடியாதே என்று ஏக்கமாக இருக்கிறதா என்ன?”   

"அதெல்லாம் இல்லை”, என்றார் பெர்க்கின்ஸ். “என்னுடையது அதை விடப் பெரிய கவலை.”


அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது பெர்க்கின்ஸ் ஒரு கட்டை குட்டையான மனிதன் சக ஊழியர் ஒருவரைப் பளாரென்றுஅறைவதைப் பார்த்தார். ஓரிரு முறை ஓங்கி அறைந்துகொண்டேஅறைந்துகொண்டே, “யேய், "f***  you, என்ன செய்துவிட்டாய் நீ?” என்று கூச்சலிட்டான் அந்த மனிதன்.


"எதற்காக அப்படி அடிக்கிறான் ஸ்மித்?” என்று கேட்டார் பெர்க்கின்ஸ்;  


"தெரியவில்லை, அறைவாங்கியவன் ஏதாவது தப்புசெய்திருக்க வேண் டும்”, என்றார் ஸ்மித். 


"”எனக்கு அந்த மனிதனின் தோற்றம் பிடித்திருக்கிறது. அவன் இங்கே என்ன வேலை செய்கிறான் ஸ்மித்?”என்று கேட்டார் பெர்க்கின்ஸ்;


"அந்த மனிதன் இங்கே ஃபோர்மானாக வேலைசெய்கிறான். இந்தத் தொழிற்சாலையின் பொறுப்பாளனாக அவனை நான் நியமித்திருக் கிறேன். உண்மையில் அவர் ஒரு ‘வெல்டர்’. தன்னுடைய வேலையில் மிகுந்த ஆர்வத்தோடு செயலாற்றுவான் அவன். சமயங்களில் அவனு டைய ஈடுபாடு அளவுகடந்து போய்விடும். அந்த மாதிரி சமயங்களில் நான் இடைபுகுந்து கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ளும்படி கூறு வேன்."  


 "அட!” என்றார் பெர்க்கின்ஸ். “இந்த மாதிரி ஆசாமி என்னுடன் இந்தியா வில் இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்படி மட்டும் இருந் தால் என்னுடைய பிரச்னை ஓரளவுக்குத் தீர்ந்துவிடும்”...  


"இதில் உனக்கு உதவிசெய்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், நீ தான் அவனிடம் பேசிப் பார்க்க வேண்டும். அவன் உன்னோடு வரச் சம்மதிக்கிறானா என்று கேட்டுப்பார்க்க வேண்டும். அவனுடைய பெயர் Brad”, என்று கூறிய ஸ்மித் சன்னமான குரலில் “முரட்டு மனிதன்”, என்றார்.


"அவனை இங்கே கூப்பிடேன். நம் அவனிடம் கொஞ்சம் பேசலாம்”, என் றார் பெர்க்கின்ஸ்.


“ஹேய் இங்கே வா; பெர்க்கின்ஸ் உன்னோடு ஏதோ பேசவேண்டும் என் கிறார்.” என்று அழைத்தார் ஸ்மித்.  

"ஹாய் நண்பரே”, என்றபடியே வந்தான் Brad," 


 " இதுதான் பெர்க்கின்ஸ். அவர் உன்னோடு ஏதோ பேச வேண்டுமாம்”, என்றார் ஸ்மித்.

“ஹலோ Brad, நீ எப்போதாவது இந்தியாவுக்கு வந்ததுண்டா?” என்று கேட்டார் பெர்க்கின்ஸ்.

  "இல்லை, ஆனால் அங்கே பெண்களெல்லாம் கருநிறத்தில் அழகாக இருப்பார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கே தட்பவெப்ப நிலையும் சரி, உணவும் சரி ஒரே சூடாக, இருக்குமல்லவா?” என்று விசாரித்தான்  Brad.

"ஆமாம், ஆமாம்”, என்றார் பெர்க்கின்ஸ்., “ஆனால், உனக்கு அங்கே வேலை பார்க்க விருப்பமா? இங்கே நீ பார்த்துக்கொண்டிருக்கும் வேலையைப் போலவே அங்கே வேலைபார்க்க உனக்கு விருப்பமா?”  


 "தாராளமாகப் பார்க்கலாமே”, என்றான்  Brad,  "ஆனால், எனக்கு எவ்வ ளவு சம்பளம் கிடைக்கும்?” 


"ஹோ, அதைப் பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு சொந்தமாய் ஒரு வீடும், காரும் ட்ரைவரும் தரப்படும்”, என்றார் பெர்க்கின்ஸ்.


* * *     * * *

ப்ராட் யார்ட்லி(Brad Yardley) பெர்க்கின்ஸ் அண்ட் பாட்டெர்ஸன் தொழிற் சாலையில் அதன் பணிப்பிரிவு மேலாளராகப் பதவியேற்றுக் கொண் டான்.  

முதல் சில நாட்கள், அங்கிருந்த ஊழியர்களை உன்னிப்பாக கவனித்து வந்தான்; அவர்கள் பணியில் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என் றும், வேலையில் மெதுவாகச் செயல்படுவதாகவும் அவனுக்குத் தோன்றி யது


அங்கேயிருந்த ஊழியர்கள் தினமும் தாமதமாக வேலையைத் தொடங்கி அலுவலக நேரம் முடிவதற்கு முன்பாகவே பணிசெய்வதை நிறுத்திவிடு வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.


தொழிற்சாலையில் இரண்டு ஷிப்டுகளில் ஊழியர்கள் வேலைபார்த்து வந்தார்கள். இரவுப்பணியில் உற்பத்தி பகல்நேரத்தை விட குறைவாக இருந்தது.  


இது ஏன் என்று நிறைய யோசித்தான் Brad. முன்னறிவிப்பின்றி இரவில் தொழிற்சாலைக்குப் போய்ப்பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான்.


அப்படிச் சென்றவன் நேரே கழிப்பறை இருந்த பகுதிக்கும், ஓய்வறைக் கும் சென்று பார்த்தான். அங்கே சில ஊழியர்கள் பணிநேரத்தில் சாவகாச மாகப் புகைபிடித்துக்கொண்டிருப்பதையும், சீட்டு விளையாடிக்கொண் டிருப்பதையும் கண்டான்.


அவன் நுழைந்தவுடன், அந்த ஊழியர்கள் உடனைட்யாக அங்கிருந்து எழுந்துகொண்டு தங்கள் வேலைக்குத் திரும்பினார்கள்; 


"F*** you, இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே,” என்று கேட்டு அந்த ஊழியர்களை அறைந்தான்.


அடுத்த நாள், 'பெர்ஸானல் மானேஜர் அவனுடைய அறைக்கு வேகமாக வந்தார்:  


"என்ன காரியம் செய்துவிட்டீர்கள்?”என்று பதறிக்கொண்டு கேட்டார். "ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார் கள்.”  


"F*** you,” என்று பதிலளித்தான் Brad; "நீங்கள் தான் தவறான ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறீர்கள். எனவே, இந்த இக்கட்டான நிலை மையை நீங்கள் தான் சமாளிக்கவேண்டும்.”  


ஊழியர்களிடம் நீண்டநேரம் பேசி, கெஞ்சி அவர்களை சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. அதன் பிறகே அவர்கள் மீண்டும் வேலையைத் தொட ங்கினார்கள்.  


பெர்க்கின்ஸ் விஷயத்தைக் கேள்விப்பட்டதும், அவர் Brad செய்தது சரியே என்று அவன் சார்பாய் வாதிட்டார். அதே சமயம், இந்திய ஊழியர்களைக் கையாளும்போது இன்னும் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டி யது அவசியம் என்று அவனுக்கு எடுத்துக்கூறினார். 


இரவுநேர உற்பத்தி பன்மடங்காகப் பெருகியது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை!

* * *    * * *

அந்த நிறுவனம் அரசாங்கத்திற்காக சில பல உற்பத்திவேலைகளைச் செய்துவந்தது. இதற்கென சுயமாய் இயங்கும் அமைப்பு ஒன்றிலிருந்து உரிய தரச் சான்றிதழை அந்த வேலைக்கான அனுமதிக்காகப் பெறவேண்டியது அவசியமாக இருந்தது. 

இந்த தரச் சான்றிதழைப் பெறுவதற்காக பெர்க்கின்ஸின் நிறுவனம் அந்தத் தரச் சான்றிதழைத் தரவேண்டிய மேற்பார்வை அதிகாரிக்கு, அவர் சான்றிதழையும், அனுமதியையும் தந்துவிட்ட பிறகு ரொக்கப்பணம் தரு வது வாடிக்கையாக இருந்தது _ அதாவது, Brad அங்கே பணியில் சேருவ தற்கு முன்புவரை.

இந்த விஷயம் Brad க்குத் தெரியவந்ததும்,அவர் அந்த மேற்பார்வை அதி காரிக்குரிய காசோலையில் கையொப்பமிட மறுத்து அதைக் கிழித்தெறிந் தான்.


லஞ்சம் கொடுப்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்பது Bradன் வாதம். 


இது அந்த தரச் சான்றிதழ் வழங்கவேண்டிய மேற்பார்வை அதிகாரியை மிகவும் கோபப்படுத்திவிட்டது. 


ஆனால், Brad தன் முடிவில் தீர்மானகாக் இருந்தான். தங்கள் நிறுவனம் செய்துமுடிக்கும் அடுத்த வேலைக்கு அல்ப காரணங்களுக்காக அந்த மேற்பார்வை அதிகாரி தரச் சான்றிதழ் வழங்க மறுத்தால் தங்கள் நிறு வனம் உதவி கொரி நேரடியாகவே அரசாங்கத்தை அணுகிவிட வேண்டும் என்பது அவனுடைய முடிவு. 


இதுவும் பெர்க்கின்ஸின் பாராட்டை Bradக்கு பெற்றுத் தந்தது!


இதற்குள் நிறுவனத்திற்குள் Brad தனக்கு நிறைய எதிரிகளை சம்பாதித் துக்கொண்டிருந்தான்

பிரச்னைகளைத் தீர்ப்பதில் அவன் கையாண்ட புதுமையான, துணிச்ச லான அணுகுமுறைகளை நிறைய பேர் பாராட்டிய போதும். வேறு பலர் அவனுடைய அணுகுமுறைகள், செயல்பாடுகளில் நிறவெறி மனப்போ க்கு  வெளிப்படுவதாகக் கருதினார்கள்.


ஆனால், பின்வரும் நிகழ்வில் இந்த விஷயம் உச்சகட்டத்தை எட்டி விட் டது.


திரு.தோர்ஜி (நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்) தன்னுடைய மகன் ஆஷிஷ்-ஐ Bradஇன் கீழ் வேலை கற்றுக்கொள்ளவென அந்த நிறு வனத்தின் தொழிற்சாலைக்கு அனுப்பிவைத்தார். .   


இந்த ஆஷிஷுக்கு, நிறுவனத்தின் இயக்குனர் பிள்ளை என்ற ‘பந்தா’வும், அலட்டலும், திமிரும் ரொம்பவே உண்டு. எனவே, தன்னுடைய வேலையை அவன் அலட்சியமாக எண்ணினான். அந்த நிறுவனத்தில் தனக்கு எப்படியும் வேலையும் பெரிய பதவியும் உண்டு என்பது அவன் எண்ணம். நேராக Bradஇன் அறைக்குள் நுழைந்து “நான் தான் ஆஷிஷ், தெரியுமா? திரு. தோர்ஜியின் பிள்ளை. நான் உங்களுக்கு எந்த விதத்தில் உதவவேண்டுமென்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான்.


அந்த இளைஞனின் ஆணவமும், அலட்சியமும் Bradஐ திகைத்துப் போகச் செய்தன.  


அந்தத் திமிர்பிடித்த இளைஞனைப் பார்த்து, “வெளியே போய் காத்திருங் கள். நான் கூப்பிடும்போது வாருங்கள்.” என்றான். 
 

சிறிது நேரம் கழித்து அவனைக் கூப்பிட்டனுப்பினான். அந்த இளைஞனி டம் சில பல கேள்விகள் கேட்டான். பிறகு, “மன்னிக்கவும், நீங்கள் இங்கே தேவைப்பட மாட்டீர்கள்?” என்று தெரிவித்துவிட்டான்."  


 ஆஷிஷ் கோபத்தில் கொந்தளித்தான். “என்னுடைய அப்பாவிடம் உன்னைப் பற்றிப் புகார் சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கத்தினான்.  


Brad, “"F*** off. இங்கிருந்து போய்விடு, இல்லாவிட்டால், உன்னை வெளியே தூக்கியெறியும்படி சொல்லவேண்டியிருக்கும்”, என்று பதிலளித்தான்.


இந்த நிகழ்வு நிறுவனத்தில் பெரிய களேபரத்தை ஏற்படுத்தியது.  

திரு. தோர்ஜியும் மற்ற இந்திய இயக்குனர்களும் நிறுவனத்தை விட்டு விலகிவிடுவதாக அச்சுறுத்தினார்கள். 


ஆங்கிலேய இயக்குனர் பெர்க்கின்ஸை அவசரமாகத் தொலைபேசியில் அழைத்தார். “க்ளெம், உடனடியாக ஏதாவது முடிவெடுத்து அதை செய் தாக வேண்டும்.  நீங்கள் Brad  Yardley ஐத் திரும்ப அழைத்துக்கொள்ள வில்லையானால் நிறுவனத்தை விட்டு விலகிவிடுவதாக பயமுறுத்து கிறார்கள்.


"பயப்படவேண்டாம் ஜாக்,” என்றார் பெர்க்கின்ஸ். “நாளைக் காலை நானே அவர்களை நேரடியாகப் பார்த்துப் பேசுகிறேன்.


சொன்னபடியே, பெர்க்கின்ஸ் தோர்ஜியை நேரடியாக சந்தித்து, நிலை மையை சரிசெய்ய முயற்சித்தார்; 


"Brad முரட்டுத்தனமாக நடந்துகொள்பவனாயிருக்கலாம், ஆனால், அவன், இதுவரை என்ன செய்திருந்தாலும் அதெல்லாம் நிறுவனத்தின் நலனுக்காகவே தான்.” என்று எடுத்துச் சொன்னார்.   


ஆனால் தோர்ஜி அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. “எங்களு டைய கோரிக்கையில் எந்த மாற்றமுமில்லை,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். “Brad அல்லது நாங்கள் - யாராவது ஒருவர் தான் இங்கே இருக்க முடியும். நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்”.


அன்றிரவு பூராவும் யோசித்தபடியே இருந்தார் பெர்க்கின்ஸ்.


இறுதியில், Bradயை பலியிடத் தீர்மானித்தார்.   


தன்னுடைய ஹோட்டலுக்கு வரும்படி Bradஐ அழைத்தார். “என்னை மன்னித்துவிடு Brad, நீ அந்த நிறுவனத்தை விட்டுப் போய்விட வேண்டி யதுதான். நிறுவனத்தின் இந்திய இயக்குனர்களுக்கு நீ நடந்துகொள்வது பிடிக்கவில்லை. உன் சார்பாய் அவர்களிடம் பேசிப் பார்த்தேன். ஆனால், அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்". 


"அதனால் பரவாயில்லை நண்பரே”, என்றான் Brad,  "ஆனால், நான் செய்வது சரி என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்போது நான் யாருக்காகவும் வளைந்துகொடுக்க மாட்டேன்.


* * *     * * *

"ஹேய், முரடன் வந்துவிட்டான்!” என்று ஸ்மித் ஐப் பார்த்துக் கூவினார்! “என்னவாயிற்று முதலாளி ! இந்தியப் பொரியல் உனக்கு ஒத்துவரவில் லையா?”


"F*** you", என்றான் Brad, "சரி, நம்முடைய வேலையைப் பார்க்கலாம், வாருங்கள்"


ஜி.வெங்கடேஷ்