LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Friday 28 November 2014

விஷ்ணு _ ப்ரும்மா _ யமன் ஒரு கற்பனை உரையாடல்!




விஷ்ணு _ ப்ரும்மா _ யமன் - 
 ஒரு கற்பனை உரையாடல்!


விஷ்ணு:வாருங்கள் ப்ரும்மாவே, யமராஜனே  வாருங்கள். நீங்களிருவரும் பிரபஞ்சத்தில் எதிர்கொண்டுவரும் பிரச்னைகளை  நானறிவேன். அதுகுறித்து உங்கள் இருவருக்கும் என்னுடைய அக்கறையையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தவே நான் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளேன்.

ப்ரும்மா: மதிப்பிற்குரிய மகாவிஷ்ணுவே, பூமியில் நான் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் நாளு க்கு நாள் அதிகரித்துக்கொண்டே, அதிக சிக்கலாகிக் கொண்டே போகிறது ஐயா.

விஷ்ணு:  என்னவென்று தயவுசெய்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடி யுமா?

Brahma:   ஐயா, பூமியிருப்பவர்கள் அதிவேக மாற்றங்கள் நிறைந்த காலகட் டத்தில் இருக்கிறார்கள். பெரியவர்கள் பார்த்து, பெரியவர்களின் சம்மதத் தோடு திரு மணங்கள் நிச்சயிக்கப்படும் காலமெல்லாம் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் இருபாலரிலும் ஓரினப்புணர்ச்சியாளர்களிடையே திருமணங்கள் நடக்கின்றன!

விஷ்ணு:  ஆனால், அப்படி நடப்பது உங்களுடைய வேலைப்பளுவைக் குறைக்கும் என்றல்லவா எண்ணினேன்?

Brahma:  இல்லை ஐயா! அவர்களுடைய மருத்துவ விஞ்ஞானிகள் மிக மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெகுவிரைவில் இயற்கையையே மாற்றியெழுதும் வழிமுறையைக் கண்டு பிடித்துவிடுவார் கள் என்றும் கேள்விப்பட்டேன்!

விஷ்ணு:  ஐயோ, இது என்ன? ஆனால், அது எப்படி சாத்தியம் ப்ரும்மா?

Brahma:  உங்களுக்குத் தான் தெரியுமே ஐயா, அவர்கள் ஏற்கனவே இயற்கை விதியின் ஒரு பகுதியை மாற்றியெழுதியாகிவிட்டது! வாடகைத் தாய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது ஓரினப் புணர்ச்சியாள தம்பதிகள் தங்களுக்கும் குழந்தைகள் பிறக்க வழியைக் கண்டுபிடிக்க முனைந்திருப்பதாகக் கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

விஷ்ணு: ஆண் ஒன்பது மாதங்கள் கருவுற்றிருப்பதா! என்ன அபத்தம்! பெண்கள் ஆணின் துணையின்றி குழந்தைகள் பெறுவதா! ப்ரும்மா! இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக் கிறது? ஜ்ஸைலோ [Zylo] வேறொரு இடத்தில் செய்துகொண்டிருப்பதையே நானும் செய்திருந் தால் நன்றாயிருந் திருக்கும் என்று தோன்று கிறது 

ப்ரும்மா:  அது என்னது ஐயா?

விஷ்ணு:  பிறகு கூறுகிறேன் ப்ரும்மா? உங்களுக்காகவும் நான் வருத்தப்படுகிறேன் யமராஜனே! 

யமராஜன்:   நான் ஏற்கனவே என்னுடைய பிரச்னைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன் ஐயா, ஆனால், சாத்தியமாகக்கூடிய சில தீர்வுகளை நான் கண்டுபிடித்திருக்கிறேன். எனவே, இப்பொழுதெல்லாம் எனக்குப் பதற்றமோ, பரிதவிப்போ இல்லை!

விஷ்ணு:  உண்மையாகவா! அவை என்ன யமராஜனே?

யமராஜன்:  மரணங்களைப் பொறுத்தவரை, வறியவர்கள் குடும்பங்களிலோ அல்லது நடுத்தர வர்க்கத்தினர் குடும்பங்களிலோ சாவு நேர்ந்தால், அதில் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை! அதேபோல், பொதுவுடைமைவாத அல்லது இசுலாமிய நாடுகளில் நேரும் மரணங்களாலும் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. மரணம் குறித்த பிரச்னைகள் பொதுவாக மேற்குலக நாடுகலிலிருந்தும், இந்தியாவிலிருந்தும்தான் ஏற்படுகின்றன. மேற்குலகைப் பொறுத்தவரை, நேரும் மரணங்கள் குறித்து மனுக்களும், கோரிக்கைகளும் வழக்குகளும் எழுகின்றன. என்றாலும், சீக்கிரமே மரணங்கள் ஒன்று ஏற்கப்பட்டுவிடுகின்றன அல்லது மறுக்கப்பட்டுவிடுகின்றன. பின், வழக்கம்போல் எல்லாம் நடந்தேறுகின்றன. ஆனால், இந்தியாவிலோ, நான் என்னுடைய அலுவலர்களிடம் கண்டிப்பாக எடுத்துச்சொல்லியிருக்கிறேன் - மரணம் தொடர்பான வழக்குகள், அவை பெரிய மனிதர்கள், செல்வாக்கு மிக்க நபர்கள் தொடர்பானதாயிருந்தால், அதைப் பொருட்படுத்தவேண்டாமென்று தெளிவாகக் கூறியிருக்கிறேன். ஏனென்றால், அந்த வழக்குகளிலெல்லாம் எப்படியும் மரணதண்டனை ஒருபோதும் நிறைவேற்றப்படாது. இந்தியச் சட்டங்கள் மிகவும் பழமையானவை; இங்கே மரணதண்டனை நிறைவேற் றப்பட வாய்ப்பேயில்லை என்று ஒரு நகைச்சுவைத் துணுக்கு இருக்கிறது! நீதிமன்றம், அரசு, ஜனாதிபதிக்கிடையே அது மாறி மாறி கைமாறி,‘மெர்ரி - கோ-ரவுண்ட்’ போல் சுற்றிச் சுற்றி வரும்! இந்த மனுவும் விண்ணப்பமும்15 வருடங்களுக்கு மேல் நீண்டுகொண்டே போகும். அதற்குள் தண்டனைக் கைதி தன்னுடைய தண்டனைக் காலத்தை சிறைக்குள் முடித்துவிடுவார்! எனவே, அவரை விடுதலை செய்துவிடுவார்கள்!

விஷ்ணு:  ஹா ஹா! ஆனால், ச்ம்பந்தப்பட்ட மரணம் பெரிய மனிதருடையது, செல்வாக்குமிக்க நபருடையது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”

யமராஜன்:  இது மிகவும் சுலபம். மீடியா நியூஸ்களைப் பாருங்கள்; அடிக்கொருதரம் அவர்கள் விஷயத்தை நமக்குத் தெரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இன்னொரு வேடிக்கையான, ஆனால் வெகு அபத்தமான இந்தியச் சட்டம் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள். நான்குபேருக்கு ஒரு பெண்ணை ‘பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்துவிட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவர்களில் வயதில் இளையவன் புன்னகையோடு நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து நீதிபதியும் அங்கே கூடியிருந்த மற்றவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அந்த இளைஞன் சொன்னான்: “ஜட்ஜ் ஐயாவே, எனக்கு பதினெட்டு வயதாக இன்னும் சில நாட்களே உள்ளன. எனவே, நான் ஏதேனும் ஒரு பள்ளியில் மூன்று வருடங்கள் கழித்துவிட்டு சுதந்திர மனிதனாக வெளியே வந்துவிடுவேன்!"

விஷ்ணு:
  நல்லது, நான் மற்ற சூரிய மண்டலங்களின் பாதுகாவலர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்துவருகிறேன். ஜ்ஸைலோ  [Zylo]XX6666    சூரிய மண்டலத்தின் பாதுகாவலர். இந்த மண்டலம் நம்மிடமிருந்து பத்து லட்சம் ஒளி வருடங்களுக்கி அப்பால் அமைந்திருக்கிறது. அங்கே ஒரு நபர் [ நாம் இங்கே ’பிறத்தல்’ என்கிறோம்] அவரோடு பொருத்தப்பட்டுள்ள ஒரு தனித்துவமான ‘பாட்டரி’யின் [a unique battery] உதவியால் உருவாக்கப்படு கிறார். அந்த பாட்டரிக்கு சுமார் 75 ஜ்ஸென்கள் [75 zens] வாழ்நாள் இருக்கும். [ஒரு ஜ்ஸென் என்பது ஏறத்தாழ நம்முடைய ஒரு வருட காலம்]. அந்த 75 ஜென்கள் முடிந்த பிறகு அந்த நபர் நிரந்தரமாகப் போய்விடுகிறார், அவரு டைய இடத்திற்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.

ப்ரும்மாவும் யமராஜனும் :  விபத்துகள், கொலைகள், நோய்கள் - இவையெல்லாம் என்னவாகும்?

விஷ்ணு:   எல்லாமே நடக்கும், ஆனால் மரணங்கள் இருக்காது.

ப்ரும்மா:  அதே வழிமுறையை இங்கேயும் கொண்டுவரலாமே!

விஷ்ணு:  உலகம் போகும் போக்கைப் பார்த்தால், அது தன்னைத் தானே அழித்துக்கொண்டுவிடுவது உறுதி. அதற்குப் பின், மேற்குறிப்பிட்ட வழிமுறையை இங்கே அமுல்படுத்த திட்டமிட்டுள்ளேன்!



ஜி.வெங்கடேஷ்































No comments:

Post a Comment