LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Saturday 22 November 2014

அவனை விண்ணுலகில் விட்டுவிடுங்கள்

  
          அவனை  விண்ணுலகில் விட்டுவிடுங்கள்

ப்ரகாஷ் மிக வெற்றிகரமான தொழிலதிபர். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை. வரமாய் ஒரு மகன். ப்ரகாஷ் தன்னுடைய அரண்மனை போன்ற பெரிய பங்களாவில் வாழ்ந்துவந்தான்.

வாழ்க்கையில் ஒருவர் தனக்குக் கிடைக்கவேண்டுமென்று விரும்புவதெல்லாம் ப்ரகாஷுக்குக் கிடைத்திருந்தது.
ப்ரகாஷிடம் ஒரு பெரிய பலவீனம் இருந்தது.

அடிக்கொருதரம் சிகரெட் குடிப்பான்.

கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவுடன் அது ஆரம்பமாகியது.  

“நாம் கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். இதை நாம் கொண்டாட வேண்டுமே! என்ன செய்யலாம்?” என்று தன் நண்பர்களைக் கேட்டான் ப்ரகாஷ்.

“நாம் நகரின் இந்த இடத்திலிருந்து வேறொரு பகுதிக்குச் செல்லலாம். அங்கே இன்னும் சுதந்திரமாக இருக்கலாம்”, என்றான் மோகன்.

அதேபோல் அவர்கள் சென்றார்கள். உடனடியாக வெளிப்பட்டது சிகரெட் பாக்கெட்.

“வாருங்கள், எல்லோரும் ஆனந்தமாகப் பற்றவைத்துக்கொள்ளலாம், நிறைய நாட்களாகவே இதைச் செய்யவேண்டுமென்று எனக்கு மிகவும் ஆசை”, என்றான் மோகன்.

ப்ரகாஷுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும், சிகரெட், ஆர்வமூட்டும் ஒரு புது விஷயம்!


”இல்லை, எனக்கு வேண்டாம்”, என்றான் ப்ரகாஷ்.”ஆனால், நீங்கள் விரும்பினால் தாராளமாகப் புகை பிடிக்கலாம்.”

"அட, ரொம்ப பிகு பண்ணிக்காதே ப்ரகாஷ், நீ என்ன பொம்புளையா?” என்று கேலி செய்தவாறே மோகன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ப்ரகாஷின் வாய்க்குள் திணித்தான்.


”இப்பொழுது புகையை உள்ளிழுத்து, பின், வெளியே விடு”, என்று கற்றுக்கொடுத்தான்.


அடுத்த முறை அவர்களுடைய குழு ஒன்றுகூடிய போது, மறுபடியும் சிகரெட்டுகள் வெளிப்பட்டன.

மோகனை கேலி செய்வதற்காய் மோகன் கூறினான்: “எப்படியும் ப்ரகாஷ் சிகரெட் பிடிக்கப் போவதில்லை. எனவே, அவனுடைய சிகரெட்டையும் நானே எடுத்துக்கொள்கிறேன்.”

இந்தப் பேச்சு ப்ரகாஷை கோபப்படுத்தியது. அவன் அங்கேயிருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி வெளியே எடுத்தான். அதைப் பற்றவைத்துக்கொண்டான்.


சிகரெட் புகையை உள்ளிழுத்தபோது தன்னிடம் ஏதோ மாறுதல் ஏற்படுவதை அவன் கவனித்தான்.

அவனுடைய மூளை முன்பைவிட அதிகத் தெளிவாக இயங்கியது.  இப்போது அவன், முன்பிருந்த பயந்தாங்கொள்ளி ப்ரகாஷ் இல்லை. சொல்லிலும், செயலிலும் தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த மனிதன்!

* * *

வருடங்கள் உருண்டோடின. இப்பொழுது ப்ரகாஷ் சிறுவயதிலிருந்தே அவனுடைய மனதுக்கினியவளாக விளங்கிய லஷ்மியைத் திருமணம் செய்துகொண்டிருந்தான்; 

எஞ்ஜினியரிங் கம்பெனி ஒன்றில் சில வருடங்கள் வேலைபார்த்த பிறகு, ப்ரகாஷ் அங்கிருந்து விலகி, சொந்தமாக ஒரு தொழிற்சாலையைத் தொட்ங்கினான்.  

கம்பெனி வேகமாக வளர்ச்சியடைந்துகொண்டிருந்தது. அதை விரிவுப்படுத்த நிறைய திட்டங்கள் தீட்டியிருந்தான் ப்ரகாஷ்.   


எப்பொழுதுமே மும்முரமாக வேலைசெய்துகொண்டிருக்கும் பரபரப்பான மனிதனாக விளங்கினான் அவன். 


காலையில் சீக்கிரமே எழுந்துகொள்வான். உடனே, தன்னுடைய அரைத்தூக்க மனோபாவத்திலிருந்து விடுபட்டுத் தெளிவடையச் செய்யும் பொருட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொள்வான்;


காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு. அவசர அவசமாக செய்தித்தாள்களைப்  புரட்டிப் பார்த்து, இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொள்ள மட்டுமே அவனுக்கு அவகாசமிருந்தது.. பின், தொழிற்சாலைக்கு விரைவான். 


"நீங்கள் புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டால் நன்றாயிருக்கும்
 dear” என்று கூறிப் பார்த்தாள் லஷ்மி. பயனேதுமில்லை. 

அலுவலகத்தில், தன்னுடைய வாடிக்கையாளர்கள், அங்கே வேலை பார்க்கும் பணியாட்கள்,ஊழியர்கள் எல்லோரிடமும் கையில் கனன்றுகொண்டிருக்கும் சிகரெட்டோடு பேசுவதுதான் அவன் வழக்கம்!!  


***   
        
டாக்டர் பட்டேல், மருத்துவ அறிக்கைகளையெல்லாம் கவனமாகப் பரிசீலித்தார். பின், ப்ரகாஷிடம் இவ்வாறு கூறினார்: 

“நோய் உங்கள் உடல் முழுவதும் பரவிவிட்டது. எங்களால் முடிந்த அளவு மிகச் சிறந்த சிகிச்சையை உங்களுக்கு அளித்தோம். இப்படிச் சொல்வதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் _ ப்ரகாஷ், ஆனால், நீங்கள் வாழப்போவது இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே.”

ப்ரகாஷ் வீடு திரும்பினான். அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே லஷ்மிக்கு எல்லாம் விளங்கிவிட்டது;


அன்றிரவு ப்ரகாஷால் தூங்க முடியவில்லை; அதுவரையான தனது மொத்த வாழ்க்கையும் அவனுடைய கண்முன் விரிந்தது;  


தன்னுடைய துணையில்லாமல் லஷ்மி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வாள், சமாளிப்பாள் என்று அவன் பரிதவித்துப்போனான்;


லஷ்மியோ, அவள் பங்குக்கு அவளால் முடிந்த எல்லாவற்றையும் முயற்சி செய்துபார்த்தாள். 

குடும்ப குருக்கள், ஜோசியர்கள், நலவிரும்பிகள் என்று எல்லோரிடமும் சென்றாள். அவர்கள் சொன்ன அறிவுரைகளையெல்லாம் கேட்டு அவற்றின்படியே நடந்தாள்.

வேறுவகை மருத்துவ சிகிச்சைகளையும் அவர்கள் முயன்றுபார்த்தார்கள். ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்த வைத்தியம், இயற்கை மருத்துவம் - இன்னும் என்னென்னவோ. ஒன்றும் பலனில்லை.

  * * *    
  
நோய் ப்ரகாஷை அரித்தெடுத்து உருக்குலைத்துவிட்டது.

 முன்பிருந்த உருவத்தின் ஆவிபோல் இப்பொழுது காட்சியளித்தான் அவன்
வெறிபிடித்தவன் போல் கத்தினான்; சீறினான்; பித்துப்பிடித்தவனாய் நடந்துகொண்டான்.

”யமனே, தைரியமிருந்தால் இங்கே வந்து என்னைப் பிடி, பார்க்கலாம். நான் சவால் விடுகிறேன். எல்லோரும் எங்கே? எனக்கு என்னுடைய ‘கார்ல்ட்டன்’ வேண்டும், ஒரேயொரு சிகரெட் புகைக்க என்னை தயவுசெய்து அனுமதியுங்கள்....”


மயக்க மருந்து கொடுத்து அவனை அமைதிப்படுத்தவேண்டியிருந்தது.


அவனுக்கு உணவு புகட்டும்படியாகியது. சிறுநீர், மலம் எல்லாம் குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டன.

அவனுடைய குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தாரும் அவனுக்கு நேரப்போகும் முடிவை எதிர்க்க வழியில்லாமல் ‘நடப்பது நடந்தே தீரும்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்;


ஒரு மூதாட்டி கூறினார்: “அவன் தன்னுடைய கர்மவினையைப் பூர்த்திசெய்யாதவரை யமன் அவனை கொண்டுசெல்ல மாட்டான்.” 

இன்னொரு மருத்துவர் சொன்னார்: “ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான உடல்வாகு. இந்த நோயைப் பொறுத்தவரை சிலரிடம் அது சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்!”

* * *  

ஓரிரவு, பிரகாஷ் தன்னோடு எந்தவகையிலும் முரண்படாமல், பரிபூரணஇணக்கத்தோடு அமைதியாக இருந்தான்; 

அவனுடைய குடும்பத்தார் தூங்கிவிட்டதும் தன்னுடைய மனைவி லஷ்மியை எழுப்பினான் . “தயவுசெய்து எனக்கு சுலோகங்களைப் படித்துக் காண்பி லஷ்மீ...”


லஷ்மி புரிந்துகொண்டாள்.

குடும்பத்தாரை எழுப்பிவிடலாகாது என்று சன்னமான குரலில் சுலோகங்களை வாசித்தாள்.

’ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ [அ]பிரக்‌ஷது’ (Shreemaan  Naaraayano Vishnur  Vaasudevo [a]bhirakshatu) என்ற இறுதி வரியை அவள் எட்டியபோது ப்ரகாஷ் நிரந்தர அமைதியில் ஆழ்ந்திருந்தான்!!





0


ஜி.வெங்கடேஷ்









































  

No comments:

Post a Comment