LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Thursday 16 July 2015

என் அன்பே, என் அன்பே ஓ ஞாயிற்றுக் கிழமை!


என் அன்பே, என் அன்பே  
ஓ ஞாயிற்றுக் கிழமை!
ஓஹோ – என் அன்பே, என் அன்பே 
ஓ ஞாயிற்றுக் கிழமை!



”மேரீ ஜான், மேரீ ஜான் ஸண்டே ஓ ஸண்டே” _ இது கடந்த காலத்தில் பிரபலமாயிருந்த ஒரு இந்தித் திரைப்படப் பாடலின் முதல் வரி.

வாரத்தின் மற்ற எல்லா நாட்களையும் விட ஞாயிற்றுக் கிழமையையே எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.



ஞாயிற்றுக்கிழமை இளைப்பாறலுக்கான இனிய நாள். அன்று நண்பர்கள், உறவினர்களையெல்லாம் சந்தித்து மகிழலாம். 




ஞாயிற்றுக்கிழமைதான் நம்மால், 'அட போடா நேரமே, இன்று உன்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியாது. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் இன்று, எந்த நேரத்திலும் செய்வேன். வழக்கமான வேலை யெல்லாம் இன்று செய்யவே மாட்டேன். குளிப்பது, ஏன் சமைப்பது கூட – ஏனென்றால் நான் என்னுடைய குடும்பத்தை வெளியே அழைத்துக் கொண்டு சென்று சாப்பிடுவேன் தெரியுமா!'

ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கான இந்தவிதமான மன நிலை, நம் எல்லோருக்குமே சாத்தியமாகிறதா? சரியாக அமைகிறதா? இல்லையென்று தான் தோன்றுகிறது.

பல பேருக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்றாலே மிகவும் கலவரமடைந்துவிடும் மனது! உதாரணத்திற்கு, ரவியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய குடும்பத்தில் அவன்தான் கடைக்குட்டி.எனவே, சிறுவனாயிருந்தபோது அவன் வீட்டிலுள் ளோருக்கெல்லாம் செல்லப் பிள்ளை! ஆனால், வளர்ந்த பிறகு, அவனுடைய அப்பா, குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து பொறுப் போடு நடந்துகொள்ளும்படியும், குடும்பத்தைக் காப்பாற்ற தன்னாலான வேலையைச் செய்யும்படியும் ரவிக்கு அறிவுரை கூறினார்.

அதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் ரவி குடும்பத்திலுள்ளோ ருக்குச் சில வேலைகள் செய்து கொடுப்பான். அதிலேயே நாள் பூராவும் மும்முரமாக இருப்பான். பொதுவாக, சாதாரண நாட்களில் மாலைவேளைகளில் ரவி வெளியே சென்று தன் சினேகிதர்களோடு விளையாடுவான். ஆனால், ஞாயிற்றுக் கிழமை போக மாட்டான். ஏனென்றால் அன்றுதான் அவனு டைய சகோதர சகோதரிகள் ஒன்றுசேர்ந்துகொண்டு கடந்த வாரம் முழுக்க அவன் செய்த விஷமங்களைப் பற்றிப் பெற் றோர்களிடம் புகார் மேல் புகார் செய்வார்கள். எனவே, அதற் கெல்லாம் தண்டனையளிக்கும் விதமாய் அவனுடைய பெற் றோர்கள் அன்று அவனை விளையாடச் செல்ல விடாமல் படிக் கச் சொல்வார்கள்.

இதனால் ரவிக்கு வாரத்திலேயே ஞாயிற்றுக்கிழமை தான் மிகவும் வெறுப்புக்குரிய நாளாகிவிட்டது.


சேகர், உற்சாகமான சிறுவனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வேறொரு பிரச்னை!ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அக்கம்பக்க த்திலிருக்கும் பெரிய பையன்கள் எல்லாம் அவனுடைய வீட்டுப் பக்கம் வந்து கிரிக்கெட் விளை யாடுவார்கள். எனவே அவனால் தன் பாட்டுக்கு தன் வயதொத்த சிறுவர் களோடு விளையாடிக் கொண்டிருக்க முடியாது. பெரிய பையன்களுக்கு ‘பீல்டிங்’ என்ற பெயரில் பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டிருக்கத் தான் முடியும். BATTING அல்லது  BOWLINGற்கு வழியே யில்லை !

நிலைமை இப்படியிருக்க, சேகருக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிக் குமா என்ன? பிடிக்கவே பிடிக்காது!

நீனாவை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லத்தரசி, சத்தியவானு டைய சாவித்திரியின் மறுஅவதாரம்! அவளுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம்! அவளுடைய கணவன் ஷம்மியோ சரியான ஆணாதிக்கப் பன்றி. ஞாயிற்றுக் கிழமையென்பதே தன் இஷ்டம்போல் நடத்திச்செல்ல வேண்டிய நாள் என்று நம்பு பவன். மற்றவர்களைப் பற்றி அவனுக்குக் கவலையே கிடை யாது.

எனவே, ஞாயிற்றுக்கிழமை என்றாலே நீனா  அவன் இழுத்த இழுப்புக் கெல்லாம் போகவேண்டும்; ”அதைச் செய் இதைச் செய் இங்கே வா அங்கே போ” என்று அவளை வேலைவாங்கி அலைக்கழித்து ஒருவழியாக்கி விடுவான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஷம்மியின் விருப்பத்திற்கேற்ப கணக் கற்ற காப்பியும் தேனீரும் தயாரிக்கப்பட்டபடியே இருக்கும். இந்த நேரத்தில் தான் சாப்பிடுவது என்று கிடையாது. இந்திய மரபுப்படி மனைவி கணவ னுடனோ அல்லது அவன் சாப்பிட்ட பிறகோ சாப்பிடுவதே வழக்கம். எனவே, ஞாயிற்றுக்கிழமை களில் நீனாவின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அன்று எப்பொழுதுதான் அவளுக்குச் சாப்பிட முடியுமோ? சொல்ல வழியில்லை.

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஷம்மி எப்பொழுது வேண்டு மானாலும் வெளியே போய்விடுவான். எப்பொழுது வேண்டுமா னாலும் திரும்பி வருவான். நீனா விடம் எதுவும் சொல்வதே கிடை யாது. மொத்தத்தில், நீனா மனதார வெறுக்கும் நாள் ஒன்று உண்டானால் அது நிச்சயம் ஞாயிற்றுக்கிழமைதான்!

மறுபக்கம், சுமன் இருக்கிறான். பெண்டாட்டிக்கு அடங்கியவன். ஞாயிற்றுக்கிழமை வருகிறதென்றாலே அவனுக்கு கிலி பிடித்து விடும்! காரணம், அன்று அவன் என்னவெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று அவள் தயாராய் ஒரு பட்டியல் வைத்தி ருப்பாள்! சமையலறையையோ அல்லது குளியலறையையோ கழுவ வேண்டும்; அல்லது, அவளுடைய தோழி வீட்டுக்கு அவ ளோடு போய்வர வேண்டும்; அல்லது, சமையலில் அவளுக்கு உதவியாய் காய்கறி நறுக்கித்தர வேண்டும்; அல்லது, அடுத்த வார இட்லி, தோசைக்குத் தேவையான மாவு தயாரிப்பதில் உதவி செய்ய வேண்டும்; வேலை தொடர்பாய் சுமன் சிறிது சுணக்கம் காட்டினாலும் அது முளையிலேயே கிள்ளி யெறிந்து விடப்படும். “நான் தான் இருக்கேனே உங்களுக்கு உதவி செய்ய!” என்று சுமனின் மனைவி கமலா அன்பொழுகக் கூற, அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியாது! ஆனால் அவள் செய்யும் உதவியெல்லாம் ”அப்படிச் செய்யுங்கள், இப்படிச் செய்யுங்கள் என்று உத்தரவிடுவதோடு முடிந்துவிடும். ஞாயிற் றுக்கிழமை நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சுமனுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

ஷெட்டிக்கோ, ஞாயிற்றுக்கிழமைகளில், இன்று நாம் இல்லா திருந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்ற நினைப்பே மேலோங்கியிருக்கும். அவர் ஒரு பிரபல தென்னிந்திய ஹோட்டல் ஒன்றில் ‘வெயிட்டர்’ ஆக வேலை பார்த்து வருகிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஹோட்டல் காலை 8 மணிக்குத் திறந்ததிலிருந்தே கூட்டம் கூடத் தொடங்கிவிடும். இரவு 8 மணி வரை கூட்டம் குறையவே குறையாது. ஷெட்டி மிகச் சிறந்த முறையில் சேவை செய்துவர வேண்டும். பற்பசை விளம்பரத்தில் வருவது போன்ற சிரிப்புடன் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். நாள் முழுவதும் எத்த னையோ வாடிக்கையாளர்கள். எவ்வளவோ பேர் மோசமாக நடந்து கொள்வார்கள். ஆனாலும் அவர் சாந்தசொரூபனாகவே இருக்கவேண்டும். இல்லையென்றால் வேலை போய்விடும். ஒரு ஞாயிற்றுக்கிழமையின் முடிவில் ஷெட்டி உடலாலும் மனதா லும், உணர்வுநிலையிலும் மிகவும் சோர்ந்துபோய் விடுவார்!

ஷெட்டியைப் போல் எத்தனையெத்தனையோ மனிதர்கள். வர்த்தகமோ, சேவையோ – எந்தத் துறையாக இருந்தாலும் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆளை ஒரேயடியாக அவர்க ளைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட அந்தப் பழைய பாடல் கொஞ்சம் திருத்தப்பட்ட அளவிலேதான் உண்மை. இதோ _

’’ஓடிப் போ, ஓடிப் போ, ஞாயிறே நீ ஓடிப் போ !

பூமியை விட்டே ஓடிப்போ! வரவே வராதே ஓடிப் போ!






G. Venkatesh


.




No comments:

Post a Comment