LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Sunday 1 February 2015

சனி தசை : நடந்தது என்ன? (கதைச் சுருக்கம்)

  சனி தசை : நடந்தது என்ன? 
(கதைச் சுருக்கம்) 

இந்து மதம், மிகவும் சகிப் புத்தன்மை கொண்டதென் றாலும், தீவிரமான நம்பி க்கைகள் கொண்டதாய் சில குறிப்பிட்ட விஷயங் களில் கண்டிப்பான விதி முறைகளை வகுத்துரை க்கிறது.

உதாரணமாக, ஒரு நாள் என்பது ஒவ்வொன்றும் 90 நிமிடங்களை உள்ளடக்கிய எட்டு மண்டலங்கள் அல்லது ‘காலங்களாக’ப் பகுக்கப்பட்டிருக்கிறது;

இவற்றில் ஒரு மண்டலம் ராகு காலம் என்று அழைக்கப்படுகிறது. எந்த விதமான நல்ல செயலில் ஈடுபடுவதற்கும் இந்த நேரம் ‘அபசகுன மான’ நேரமாகக் கருதப்படுகிறது.

அதேபோல், ஒரு மனிதப்பிறவியின் வாழ்நாள் சில ’தசை’களாகப் பகுக்கப் பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று ‘சனி தசை’.

இந்து மதத்தில் சனி தசை என்பது அச்சத்திற்குரியதாகப் பார்க்கப்படு கிறது. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சனி தசையினூடாகப் பயண மாகும்போது மிகவும் சிரமம்ங்களையும் துன்பங்களையும் அனுபவிப் பார் என்று நம்பப்படுகிறது.

மேலும், ஒருவரின் ஜனன நேரமும் முக்கியமாகக் கருதப்படுகிறது. மனிதரின் ஜனன நேரம் 27 நட்சத்திரங்களால் கட்டுப்படுத்தப்படுவது.

ரேவதி’ நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை ‘அதிர்ஷ்டமற்ற’தாகவும், பிரச்னைகள் நிரம்பிய வாழ்க்கையே வாய்க்கப்பெற்றதாகவும் கருதப்படு கிறது. அதேபோல், தங்கள் மகனுக்கு ‘ஆயில்யம்’ நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை மணமுடித்துவைக்கும் பெற்றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

சரஸ்வதியின் நிலைமை இருமடங்கு அவலம். காரணம், அவள் மிகவும் ஆசாரமான இந்துக் குடும்பத்தில், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந் தாள். அவள் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே அவளுக்கு சனி தசை ஆரம்பமாகியிருந்தது.

ராமுவும் ஆசாரமான இந்துக் குடும்பத்தில் பிறந்தவன். சரஸ்வதியை உயிருக்குயிராக நேசித்தான். ஆனால், சரஸ்வதியின் தங்கையான சாந்தி யின் ஜாதகமும், நட்சத்திரமுமே அவனுக்குப் பொருத்தமாக இருப்பதாய் இரண்டுபேரின் பெற்றோர்களும் கருதியதால் சாந்தியையே அவன் திரும ணம் செய்யவேண்டியிருந்தது.

பிரசவத்தின்போது சாந்தி இறந்துபோய்விடுகிறாள்.
 
ராமுவின் பெற்றோர்களும், சாந்தியின் அதாவது சரஸ்வதியின் பெற்றோர் களும் நிலைகுலைந்து, நிம்மதியிழந்துபோனார்கள்.

இந்தப் பின்னணியில் அவர்களின் மனங்களில் பல்வேறு எண்ணங்கள் இப் போது இவ்வாறாக ஓடிக்கொண்டிருக்க்கின்றன.


சரஸ்வதி:
                            
என்னுடைய தங்கை எதற்காக இப்படி இளம்வயதிலேயே இறந்து போய் விட வேண்டும்? நான்தான் அவளுடைய மரணத்திற்குக் காரணம் என்று தோன்றுகிறது. என்னுடைய ஜாதகத்திலுள்ள நட்சத் திரங்கள் நான் ராசியில்லாதவள் என்றும், சாந்தி  அதிர்ஷ்டக்காரி என்றும் சுட்டிக் காட் டின. ஆனால், நடந்ததோ நேர் எதிர்.இனி என்னால் எப்படி என்னு டைய மதத்தில் நம்பிக்கைவைத்திருக்க முடியும்?

நான் அம்மா அப்பா பேச்சைக் கேட்காமல், ராமுவைக் கல்யாணம் செய்து கொண்டிருந்திருந்தால் எத்தனை நன்றாயிருந்திருக்கும்!அப்படிச் செய்திருந் தால் இதெல்லாம் நடந்தேயிருக்காது! இனி நான் செய்ய வேண்டியது, நல்ல மனிதனாகப் பார்த்து, அவன் என்னை அன்போடும் அக்கறையோடும் பார்த்துக்கொள்வான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின், பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிடவேண்டியது தான். சாந்தியின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு என் கையில் தரப் பட்டால் மிகவும் மகிழ்ச்சியா யிருக்கும் எனக்கு.



ராமு:
டவுளே, எதற்காக பார்த்ததுமே சரஸ்வதி மேல் எனக்குக் காதல் வரும் படிச் செய்தாய். அவளைப் பார்த்திருக்காமலேயே இருந்தால் எத் தனை நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது.  இனி என்னுடைய வாழ்நாள் முழுக்க என்னுடைய மனசாட்சி என்னைக் குத்திக்கிழித்துக் கொண்டே யிருக்கும்!  கடவுளே, என் மீது என்னவெல் லாம் சூழ்ச்சிவலை பின்னுகி றாய் நீ! இப்பொழுது, என்னுடைய குழந்தையின் நலனுக்காக . நான் சரஸ் வதியைத் திரு மணம் செய்து கொண்டாக வேண்டும்…. ஏனென்றால், குழந்தையை அன்பாகப் பார்த்துக்கொள்ள அவள் தான் சரியானவள்!          ஆனால், என்னால் எப்படி என்னுடைய மாமனார், மாமியாரிடம் போய் இந்த வேண்டுகோளை முன்வைக்க முடியும்? அப்படியே கேட்டாலும் அதற்கு சரஸ்வதி சம்மதிப்பாளா?


சாந்தி: [தான் இறப்பதற்கு சற்று முன்பாக) 

கடவுளே, என்னை ஏன் நீ இந்த மாதிரி தண்டித்துவிட்டாய்? நான் அப்படி என்ன உங்களுக்குத் தீங்கு செய்தேன்? என்னுடைய குழந்தை உங்களுக்கு என்ன கேடு செய்தது? என்னுடைய குழந்தைக்கு யார் தாய்ப்பால் தருவார் கள்? அவன் வளரும் வரை யார் அவனை நல்லபடி பார்த்துக்கொள்வார் கள்? நான் பிடிவாதமாக என்னுடைய அம்மா சொன்னதை மறுத்தி ருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது! இந்தமாதிரி தீவிரமான இந்து மத நம்பிக்கைகளுக்கு நான் தான் இத்தகைய விலைகொடுக்க வேண்டி யிருக்கிறது….!  என்னவொரு குரூரமான உலகம்… மதம்…. கடவுளே, உங்க ளைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், எனக்கு இன்னொரு பிறவி தருவீர் களென்றால், நான் இப்போதைய எனது மதத்தில் பிறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!


[பத்மநாபன்( சரஸ்வதியின் அப்பா – ஒரு ஜோதிடர்]  

கடவுளே, என்னுடைய தொழிலை நான் தொடர்ந்து செய்துவர எனக்கு மனோதைரியத்தைத் தா! ஆனால், இனி யார் என்னைத் தேடி ஜோஸியத் திற்காக வருவார்கள்! ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சொல்லி இனி யாரா வது வருவார்களா என்ன? இந்த மாதிரி இதுவரை என் குடும்பத்தில் யாரு க்கும் நடந்ததேயில்லையே! ஆனால், எனக்கு இன்னமும். சாந்தி இறந்து விட்டாள், இனி என்னால் அவளை ஒரு போதும் திரும்பப்பெற முடியாது என்றாலும், என்னுடைய தொழிலில் நம்பிக்கை இருக்கிறது!  ஜாதகங்களை மறுபரிசீலனை செய்யும்படி என்னுடைய மனைவி எத்தனையோ கெஞ்சி னாள். நாந்தான் பிடிவாத மாக மறுத்துவிட்டேன்! வேத காலத்திலிருந்து நமக்கு வழிவழியாக வந்துள்ள இந்துமத ஜோதிடத்தையும், ஜாதகங்களை யும் என்னால் எப்படி பொருட்படுத்தாதிருக்க முடியும்!


லஷ்மி (சரஸ்வதியின் அம்மா)

நான் தான் இந்த பெருந்துயருக்கு மூலகாரணம். ராமு என்னுடைய மூத்த பெண் சரஸ்வதியைத் தான் விரும்புகிறார் என்பது தெரிந்தும் நான் தான் சாந்தியை அவருக்குத் திருமணம் செய்யலாம் என்று கூறினேன். உலகத் திற்கு இந்த உண்மையெல்லாம் தெரிந்தால் அது என்னை ஒருபோதும் மன்னிக்காது. ஆனால், நான் நல்ல எண்ணத்தோடு தான் இதையெல்லாம் செய்தேன். அந்த சமயத்தில் என்னுடைய ஜோஸியக் கணவர் சரஸ் வதியை ராமுவுக்குக் கல்யாணம் செய்துகொடுக்க சம்மதித்திருக்கவே மாட்டார். இப்பொழுது, குழந்தையின் நலனுக்காக ராமுவுக்கு சரஸ்வதி யைக் கல்யாணம் செய்வது பற்றி நான் பத்மாவிடம் பேசலாமா, கூடாதா? அதற்கு எல்லோரும் ஒப்புக்கொள்வார்களா அல்லது எல்லோர் கண்களி லும் நான் முட்டாளாகத் தெரிவேனா?


 பத்மா (ராமுவின் அம்மா)

நான் லக்ஷ்மி சொன்னதை ஏன் தான் கேட்டேனோ? அந்த சமயத்தில் ராமு என்ன செய்ய விரும்பினானோ அதையே செய்யட்டுமென்று அவன் விருப்பத்திற்கு விட்டிருக்கவேண்டும் நான். இப்பொழுது மீண்டும் ராமு வைத் திருமணம் செய்துகொள்ள யார் முன்வருவார்கள்? யார் அவனு டைய குழந்தையைப் பார்த்துக்கொள்வார்கள்? இப்பொழுது நான் சரஸ் வதியை ராமுவுக்குக் கட்டிக்கொடுக்கும்படி திரும்பவும் கேட்கப்போவதி ல்லை; அந்தக் குடும்பத்திற்கு ஏதோ துரதிருஷ்டம், செய்வினை இருப்பது போல் தெரிகிறது! ஆனால், என்னுடைய பேரனைப் பற்றியும் நான் நினைக்க வேண்டியது அவசியம்! கடவுளே! என்னுடைய பிள்ளை ராமு வுக்கு வேறொரு பொருத்தமான மனைவியைக் கண்டுபிடிக்க எனக்கு உதவி செய்! என்னுடைய பேரனை அன்பும் அக்கறையுமாக கவனித்துக் கொள்ளும்படியான ஒரு பெண்!


சுப்ரமணியன் (ராமுவின் அப்பா)

என்னவொரு பெருங்குழப்பத்தில் நான் சிக்கிக்கொண்டுவிட்டேன்! எல்லாம் என் மனைவியால் வந்த வினை! இதனால் தான் பெண்களின் கருத்து களை பொருட்படுத்தவேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆரம்பத் திலேயே நான் விஷயத்தை மொத்தமாகக் கையிலெடுத்துக்கொண்டிருக்க வேண் டும்! இப்பொழுது என்னுடைய பிள்ளையையும், பேரனையும் நான் எப்படி பார்த்துக்கொள்ளப்போகிறேனோ, தெரியவில்லை! எனக்குத் தெரிந்தவரை யில் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் சரஸ்வதியை ராமு வுக்குக் கல்யாணம் செய்துவிடு வது தான் பிரச்னைக்கு சரியான தீர்வு. எனக்கு அந்தப் பெண்ணை நன்றாகத் தெரியும். அவள் என் பேரனைத் தன்னுடைய சொந்தப் பிள்ளையைப் போல் பார்த்துக்கொள்வாள்! ஆனால், முதலில் நான் பத்மநாபனிடம் இதுபற்றிப் பேசி அவரை சம்மதிக்கவைக்க வேண்டும்….


சாந்தியின் ஈமச்சடங்குகள் முடிந்து சில காலம் கழித்து…..


ராமுவின் வீட்டில்.


சுப்ரமணியன்: ராமு, உன்னுடைய அம்மா எங்கே? தயவுசெய்து அவளைக் கூப்பிடு. நாம் குழந்தையின் விஷயத்தைப் பற்றி முடிவெ டுத்தாக வேண் டும்;

பத்மா:  என்னைக் கேட்டால், நாம் ராமுவுக்கு வேறொரு பெண்ணைப் பார்ப்பதுதான் நல்லது. பத்மநாபன் குடும்பத்திற்கு ஏதோ துரதிருஷ்டம், கெட்டகாலம் பிடித்தாட்டுவதுபோல் படுகிறது. திரும்பவும் அதில் நாம் பங்கு கேட்கப் போகவேண்டாம்.

சுப்ரமணியன்: பத்மா, அப்படிச் செய்தால் நம்முடைய பேரனின் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பார்த்தாயா?

ராமு:  ஆமாம் அப்பா, நீங்கள் சொல்வதை நானும் ஒப்புக்கொள்கிறேன். நாம் ஒரு பொந்தில் அகப்பட்டுக்கொண்டுவிட்டோம்; இதிலிருந்து மீள ஒரே வழி , பத்மநாபன் குடும்பத்தாரிடம் இந்த விஷயத்தைப் பற்றிக் கலந்துபேசிப் பார்ப்பதுதான்.



இந்த சமயத்தில், சரஸ்வதியின் வீட்டில்_



லக்ஷ்மி: சரஸ்வதீ, குழந்தை அழுகிறாள் பார்; அவளுக்கு புட்டிப் பாலில் பாலை கொடு.”

சரஸ்வதி: அம்மா, குழந்தை குடிக்கமாட்டேன் என்கிறாள்!

லக்ஷ்மி: நான் சொல்வதைப் போல் செய். (சைகையால் குழந்தையை மார் போடு அணைத்து அவளுடைய மார்பகத்தை உறிஞ்சச் செய்து பின் விரை வாக அதன் வாயில் புட்டியை நுழைத்துவிடும்படி கூறுகிறாள்) குழந்தை யின் பிரச்னையைத் தீர்த்துவைக்க  சீக்கிரமே ஏதாவது வழிசெய்ய வேண் டும்….

லக்ஷ்மி பத்மநாபனிடம்: குழந்தையின் பிரச்னையை எப்படியாவது சீக்கிர மாகத் தீர்த்துவைக்க வேண்டும். அது சாப்பிடவே மாட்டேனென்கிறது!  புட்டிப்பாலைக் குடிக்கவைக்க படாதபாடு படவேண்டியிருக்கிறதுஒரே யொரு தீர்வுதான் இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண் டும்.

பத்மநாபன்: நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய தொழில் தர்மம் ஒப்புக்கொள்ளாத ஒன்றை நான் செய்ய உடன்பட மாட்டேன்! கொஞ்சம் இரு, வீட்டிற்கு வெளியே ஏதோ காலடிச்சப்தம் கேட்கிறது. ஹோ, நம்முடைய சம்பந்திகள்! (சாந்தியின் மாமனாரும், மாமியாரும்)

பத்மநாபனிடம் சுப்ரமணியன்: நாமெல்லாம் சேர்ந்து ஒரு தைரியமான, யதார்த்த வாழ்க்கைக்குத் தேவையான முடிவை எடுத் தாக வேண்டும். முக்கியமாக, குழந்தைக்காக இந்த முடிவை எடுத்தே யாக வேண்டும்! இந்த முடிவெடுக்கும் பொறுப்பை நம்முடைய குழந்தைகள் கையில் விட்டுவிடுவோம்! நம்முடைய காலம் ஏறத்தாழ முடிந்தாயிற்று; எனவே, நம்முடைய குழந்தைகள் என்ன தீர்மானத்திற்கு வருகிறார்கள் என்று பார்க்கலாம்!

லக்ஷ்மி: ஆமாம், நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன். நீ என்ன சொல்கிறாய் பத்மா?

பத்மா: ஹூம்ம்…  எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது லக்ஷ்மீ….. நாம் நம்முடைய வேதங்களுக்கு எதிராக நடக்கலாமா? ராமு, எங்கே போகிறாய்?

ராமு : ஹோ! குழந்தையைப் பார்க்கத்தான் அம்மா!

(அவன், சரஸ்வதி தன்னுடைய பிள்ளையை அணைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த அறைக்குள் செல்கிறான்).

ராமுவும் சரஸ்வதியும் சிறிது நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண் டேயிருக்கிறார்கள்!

பின், ராமு சரஸ்வதியின் காதுகளில் எதையோ கிசுகிசுக்கிறான்; அவள் அன்பொழுக அவனை ஏறிட்டுப் பார்த்து சரியென்று தலையசைக்கிறாள்.

 ராமு: (தன்னுடைய பெற்றோர்களிடம்) நம்முடைய வேத சாஸ்திரங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது; ஆனால், சில சமயங்களில் நாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றார்ப்போல் நடந்துகொள்ள வேண்டி யிருக்கிறது. அப்படிச் செய்து நம்முடைய பிரச்னைகளைத் தீர்த்துக்கொள் வதுதான் புத்திசாலித்தனம்.; புதிதாகப் பிரச்னைகளை உருவாக்கிக்கொள் வதைக் காட்டிலும் இது எத்தனையோ மேல்; நாமெல்லோருமாகச் சேர்ந்து என்னுடைய பிள்ளைக்கு எது நல்லது என்று பார்த்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்! இன்னுமொரு விஷயத்தையும் உங்களிடம் நான் செல்ல வேண்டும். சீக்கிரமே எனக்கு வேறொரு ஊருக்கு மாற்றல் கிடைக் கப் போகிறது; ஒரு மகனுக்கு அப்பா மூலம் கிடைக்கவேண்டிய அன்பு, அக்கறை எல்லாவற்றையும் என்னுடைய பிள்ளைக்குத் தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனவே, என்னுடைய பிள்ளையையும் என் கூடவே அழைத்துச்செல்ல விரும்புகிறேன். இந்த நிலைமையில் அவனு க்கு ஒரு அம்மாவின் துணை கண்டிப்பாகத் தேவை; நான் சரஸ்வதியிட மும் பேசியாகிவிட்டது. அவளும் என் விருப்பத்திற்கு சம்மதம் தெரி வித் துவிட்டாள்!

பத்மநாபனும் பத்மாவும் : என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? சரஸ்வதிக்கு இப்போது சனி தசை நடந்துகொண்டிருக் கிறது. எனவே நீ செய்யப்போவது நம்மெல்லோருக்குமே ஆபத்தாக முடியும். உன் குழந்தைக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்! தவிர, சரஸ்வதி ஒப்புக்கொண் டுவிட்டாளா என்ன?

சரஸ்வதி (கையில் குழந்தையோடு) ஆமாம் அப்பா! ராமுவின் உதவி யோடு சனி தசையை எதிர்த்துநிற்க எனக்கு விருப்பம்தான்!

பத்மநாபன்: சரஸ்வதீ, இனிமேல் இந்த வீட்டில் ஒன்று நீயிருக்க வேண்டும், அல்லது நான்!

ராமு: நீங்கள் இங்கேயே இருந்துகொள்ளலாம் ஸார், நான் சரஸ்வதி யையும் குழந்தையையும் என்னுடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போகிறேன்!

பத்மாவும் லக்ஷ்மியும்: ராமு, என்ன சொல்கிறாய் நீ?

ராமு: ஆமாம் அம்மா, நான் முடிவுசெய்துவிட்டேன். வா சரஸ்வதி, நாம் போகலாம்; குழந்தையையும் அழைத்துக்கொண்டுவா!

  

பலப் பல வருடங்கள் கழிந்து



பத்மா, லக்ஷ்மி இருவருமே இந்த உலகத்தை விட்டுப் போயாகிவிட் டது!

பத்மநாபன் வேலையிலிருந்து ஓய்வுபெற்றவராய் தன்னுடைய தொழி லையே விட்டுவிட்டார்!

சுப்ரமணியனும் வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார்.

சீதா [சுப்ரமணியனுடைய பேத்தி]  (அவள் வசிக்கும்)தெருவின் கோடி யில் மிகவும் வயதான முதியவர் ஒருவர் சுப்ரமணியன் என்ற பெயருடைய ஒருவரின் வீடு எங்கே என்று விசாரித்துக்கொண்டிருப்ப தைப் பார்த்தாள்

தன்னுடைய வீட்டுக்கு அவரை வழிநடத்திச் சென்றாள்; வீட்டினுள் சென்று தன்னுடைய தாத்தாவைப் போய்ப் பார்க்கிறாள்.

"தாத்தா, உன்னைப் போலவே வயதானவர் ஒருவர் உன்னைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி வந்திருக்கிறார்.”, என்று கூறுகிறாள் அவள்.

"யார் அது? எங்கேயிருக்கிறார்?” என்று கேட்கிறார் சுப்ரமணியன்.
 
"அதோ தாத்தா, நம் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கிறாரே, அவர் தான்.”

சுப்ரமணியம் அவரை அடையாளங்கண்டுகொண்டுவிடுகிறார்!

"பத்மநாபன்! தயவுசெய்து உள்ளே வாருங்கள்!” என்று கூறுகிறார். பின், பேத்தியிடம், “சீதா, போய் உன்னுடைய அம்மா சரஸ்வதியைக் கூப்பிடு”, என்றார்.

 “அப்பா!” என்று மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டே அங்கே வந்த சரஸ்வதி, ”அப்பா! நான் சனி தசையை மதித்து, எனக்கு சனி தசை முடிந்த பிறகு தான் ராமுவைக் கல்யாணம் செய்துகொண்டேன்!” என்றாள்!


ஜி.வெங்கடேஷ்:





No comments:

Post a Comment