LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Thursday 4 December 2014

குதிரைப் பந்தய மைதானத்தில் ஒரு நாள்

குதிரைப் பந்தய மைதானத்தில் 
ஒரு நாள்









ஜி.வெங்கடேஷ்




ஆண்ட்டோ, ஸைப்ரோ இருவரும் கோவாவிலுள்ள பஞ்சிம் கோவாவை சேர்ந்த விவசாயிகள்.   

பம்பாய்க்கு குறுகிய காலப் பயணம் மேற்கொண்டிருந்த இருவரும் மாஸ்கானிலிருந்த தங்களுடைய அத்தையின் வீட்டில் தங்கியிருந்தார்கள்.  

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை; வழக்கம்போல் அவர்கள் இருவ ரும் பக்கத்திலிருந்த தேவாலயத்தில் நடக்கும் கூட்டுப்பிரார்த்த னைக்குச் சென்றார்கள்.  

பிற்பகலில் மகாலட்சுமியில் நடக்கும் குதிரைப்பந்தயத் தைப் பார்க்கச் சென்றார்கள்.

குதிரைப்பந்தய மைதானத்தைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒரே பரவசமாகிவிட்டது! பலதரப்பட்ட மக்கள் அங்கே பெருந்திர ளாய் குழுமியிருந்தார்கள்.

சிலர் மிகவும் தீவிர சிந்தனையிலாழ்ந்த முகபாவந் தாங்கி, கையில் குதிரைப்பந்தய அட்டையோடு காணப்பட்டனர்.

வெறுமே, அங்கேயிருந்த மக்கள் திரளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள்.

"ஹேய் ஆண்டோ” என்று கூப்பிட்டான் ஸைப்ரோ. “அதோ நீலநிற உடையணிந்திருக்கிறாளே, அவள்  இப்பொழுது என்னைப் பார்த்துக் கண்ணடித்தாள்”. 

"ஜாக்கிரதையாக இரு", என்று பதிலளித்தான் ஆண்டோ  

"ஹேய் ஆண்ட்டோ”, என்றான் ஸைப்ரோ. “அந்த ஆளின் ’பாண்ட்’ஐப் பாரேன்! அதன் பின்பக்கப் பாக்கெட்டை யாரோ கிழித்திருக்கிறார்கள்; அந்த ஆளுக்கு அது தெரியவேயில்லை!"

"அதெல்லாம் இங்கே நடக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக் கிறேன்”, என்று பதிலளித்தான் ஆண்ட்டோ. “வா, நாம் போய் அங்கேயுள்ள குதிரைகளைப் பார்த்துவிட்டு வரலாம்”.

குறிப்பிட்ட அந்தப் புல்வெளிப் பகுதியில் அடுத்த பந்தயத் திற்கான குதிரைகள் வெளியே அனுப்பப்பட்டுக்கொண் டிருந்தன. 

அவற்றின் உரிமையாளர்களும் பயிற்சியாளர்களும் ‘ஜாக்கி’ களுக்கு கடைசி நிமிட ஆலோசனைகளை வழங்கிக் கொண்டி ருந்தார்கள். குதிரைகளை ஓட்டிச்செல்லப் போகும் ஜாக்கிகள் வண்ணமயமான உடைகளை அணிந்து கொண்டிருந்தார்கள்!

"சவான், வா!” என்று பார்வையாளர்கள் பகுதியிலிருந்து யாரோ கூவினார்கள்.  

"நாம் இந்தப் பந்தயத்தை நழுவவிடக்கூடாது_” என்று ஆண்ட்டோ ஸைப்ரோவிடம் சொன்னான். “வா, நாம் அங்கே போய் நிஜமான பந்தயத்தைப் பார்க்கலாம்.”

"ஆண்ட்டோ, ஆண்டோ _ நீலநிற உடையில் இருக்கும் அந்தப் பெண் இப்போது மீண்டும் என்னைப் பார்த்துப் புன்னகைத் தாள்”, என்றான் ஸைப்ரோ. 

"ஜாக்கிரதை, ஸைப்ரோ”, என்று பதிலுக்குச் சொன்னான் ஆண்ட்டோ.  

அந்தப் பந்தயத்திற்குப் பிறகு ஸைப்ரோ ஆண்ட்டோவை பக்கத்திலிருந்த நொறுக்குத்தீனிக் கடைகளுக்கு அழைத்துச் சென்றான்.  

"”எங்களுக்கு இரண்டு ‘மஸ்கா பாவ்’-ம் ['maska pao' ]இரண்டு ‘டீ’யும் வேண்டும் என்று ஸைப்ரோ அந்தக் கடையிலிருந்த உதவியாளிடம் கூறினான்.

"90 ரூபாய் ஆகும்” என்றான் கடைக்காரன்.
  

"என்ன இது, உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான் ஸைப்ரோ. மாஸ்கானில் [Mazgaon]  டி’ஸி ல்வா  கஃபே [D'silva cafe]யில் எனக்கு 30 ரூபாய்க்குக் கிடைக்கும் தெரியுமா_”

"ஜானா, பேஜா மத் பிராவோ [Jaana beja mat phirao] என்று இந்தியில் கூறினான் கடைக்காரன்.

ஸைப்ரோ ஆண்ட்டோவிடம் கூறினான்: “ வா, அடுத்த பந்தயம் ஆரம்பமாவதற்குள் நாம் போய் ஜெயிக்கும் குதிரைகள்குறித்து ஏதேனும் விவரம் தெரிகிறதா என்று துப்புத் துலக்குவோம்”

"சரி, ஆனால், 8 மீது இன்று பந்தயம் கட்டுவோம்” என்று பதிலளித்தான் ஆண்ட்டோ.

“ஏன்?” என்று கேட்டான் ஸைப்ரோ.

ஆண்ட்டோ பதிலளித்தான்: காலையில் கண் விழித்ததும் நான் பார்க்கு எண்ணை என் அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுவேன். இன்று காலை நான் 8 மணிக்கு எழுந்து கொண்டேன்”, 

"ஹோ!" என்றான் ஸைப்ரோ.

ஸைப்ரோ குதிரைகளின் மீது பந்தயப்பணம் கட்டவேண்டிய ‘கவுண்ட்டர்களில் ஒன்றசி நோக்கிச் சென்றான். 

"ஜல்தி போல் நே” [Jaldi Bol Ne],"  _ அந்த உதவியாள், ஒரு பார்ஸிக்காரன் [ஒரு ‘பவா  - a Bawa,  சொன்னான்.

"எட்டு",  என்றான் ஸைப்ரோ.

"  நம்பர் 2?” என்று கேட்டான் அந்த ‘பாவா’

“இல்லை, இல்லை - எனக்கு எட்டு தான் வேண்டும், இரண்டு அல்ல”,என்று பதிலளித்தான் ஸைப்ரோ.
 

"அர்ரே, நம்பர் டூ போல்னி[Arre, number two bolni],” என்று விடாப்பிடியாகக் கேட்டான் அந்த ஆள்.
                 
ஸைப்ரோவுக்குக் கட்டுங்கோபம் வந்துவிட்டது. “என்னய்யா நீ, நான் எட்டு என்று சொல்லிக்கொண் டிருக்கிறேன். இரண்டை எடுத்துக்கொள்ளச் சொல்லி நீ ஏன் என்னைக் கட்டாயபடுத்துகிறாய்?” 

’கிதர் ஸே ஆயா கிட்கிட்?”[”Kidar se Aaya kitkit?"] என்று கேட்டான் அந்த உதவியாள்.

"எதற்காக என்னைப் பார்த்துக் கெட்ட வார்த்தை பேசுகிறாய்? என்ன தைரியம் உனக்கு? நான் உன்னைப் பற்றி போலீஸுக்கு ‘கம்ப்ளெயிண்ட்’ தரப் போகிறேன். என் பணத்தைத் திருப்பிக்கொடுத்து
விடு”, 

”ஜாவ், ஜாவ், படா கானூன் சிக்கெனெவாலா "["Jao, Jao, Bada kanoon sikanewala"], என்று பதிலளித்தான் அந்த பாவாஜி.

இதற்கிடையில் ஆண்ட்டோ இன்னொரு கவுண்ட்டரில் 8ம் எண் குதிரையின் மீது பணத்தைக் கட்டிவிட்டான்.

”ஹேய், ஆண்ட்டோ, அந்தப் பெண் என்னைப் பார்த்துக் கையசைத்துக்கொண்டிருக்கிறாள்”, என்றான் ஸைப்ரோ.

ரேஸ் முடிந்த பிறகு ஆண்ட்டோவும் ஸைப்ரோவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். காரணம், 8-ம் எண் குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றுவிட்டது!

“வாவ்! வெற்றி பெற்றிருக்கும் டிக்கெட்டுகளுக்கு 550 ரூபாய் கிடக்கும்! நமக்கு இன்றைக்கு எத்தனை அதிர்ஷ்டம் பார்த்தாயா!” என்றான் ஆண்ட்டோ. “வா, நாம் போய் நம்முடைய பணத்தைப் பெற்றுக்கொண்டுவரலாம்.”

அவர்களிருவரும் கவுண்ட்டரில் தங்கலுடைய டிக்கெட்டைக் கொடுத்தார்கள். ஆனால், அவர்களுக்கு 36 ரூபாய் மட்டுமே தரப்பட்டது. 

அதே ‘பாவாஜி’ தான் பணத்தைக் கொடுத்தது.

ஆண்ட்டோ அந்த பாவாஜியிடம், “ஹேய், என்ன இது, நீ எனக்கு 550 ரூபாய் தரவேண்டும், மீதிப் பணம் எங்கே?" என்று கேட்டான்.

அதற்கு அந்த ‘பாவாஜி’ இவ்வாறு பதிலளித்தான். தும் லோக் வாபஸ் ஆயா பேஜா ஃபிரானே கோ மாலும் நய் கோன் இஸ்கோ டிக்கெட் தியா அந்தர் ஆனேக்கோ” [” Tum lok wapas aaya  beja phirane  ko  maalum nai kohn isko ticket  diya andhar aaneko; ]

ஆண்ட்டோ அந்த் அபாவாஜியின் கழுத்தைப் பிடிக்கப் பாய்ந்து முன்னே சென்றான்.  

ஸாலா, ஹாத் உட்டாத்தா காம்கர்னே வாலே மே”["saala haath utathai kaamkarne wale me"] என்று அந்த பாவாஜி இரைந்தான்.   

அவர்களுக்கிடையேயான சண்டையை வேடிக்கை பார்க்க அங்கே ஒரு சிறு கூட்டம் கூடியது;  

பரிச்சயமான ஒரு கை ஆண்ட்டோவைப் பின்னால் இழுத்து, பின், அந்த பாவாஜியிடம் இவ்வாறு கூறியது: “ இதை நான் பார்த்துக்கொள்கிறேன், கவலை வேண்டாம்”

 அது ஸோலங்க்கி. மாஸேகானில் அந்த இருவருடைய நண்பர்; பக்கத்து வீட்டுக்காரர்.

நடந்ததையெல்லாம் கூறச் சொல்லிக் கேட்ட பின், ஸோலங்க்கி அடக்கமாட் டாமல் சிரித்தார்.

"அட, என்ன இது, எங்களைப் பார்த்து எதற்காகச் சிரிக்கிறீர் கள்?” என்று ஆண்ட்டோவும், ஸைப்ரோவும் கேட்டார்கள்.

ஸோலங்க்கி, ஆண்ட்டோ எந்தக் குதிரையின் மீது பணம் கட்ட வேண்டுமோ அந்தப் பணத்தைக் கட்டியதால் அவனுக்கு வெற்றிப்பணம் கிடைக்கும். ஆனால், ஸைப்ரோ தன்னுடைய பந்தயப் பணத்தை ‘பந்தயம் குறித்த வெற்றி-தோல்விகளை ஊகக் கணக்காய் சொல்லும் கவுண்ட்டரில் கட்டியிருக்கிறான். அங்கே பந்தயத்தில் முதலாவதாகவும், இரண்டாவதாகவும் வரக்கூடியதாய் நாம் நினைக்கும் இரண்டு குதிரைகளின் பெயர்களை நாம் தரவேண்டியது அவசியம். அதனால்தான் அந்த பாவாஜி குதிரை ‘இரண்டு’ கூறும்படி திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறான்.

"வா, நாம் வீட்டிற்குப் போகலாம்”, என்றான் ஆண்ட்டோ. “ஸோலங்க்கி, ஒரு மனிதனுடைய பாண்ட்டின் பின்பக்கப் பை கிழிக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன்” என்றான் ஸைப்ரோ. 

ஸோலங்க்கி அவசரமாக பதற்றத்தோடு தன்னுடைய பாண்ட் பாக்கெட்டிற்குள் பர்ஸ் இருக்கிறதா என்று துழாவிப் பார்த்தார். “ஐயோ, யாரோ என்னுடைய பர்ஸைத் திருடிவிட்டார்களே!”

"ஆண்ட்டோ, ஆண்ட்டோ, அந்தப் பெண் மறுபடியும் என்னைப் பார்த்துக் கையசைக்கிறாள்,” என்றான் ஸைப்ரோ.
   







No comments:

Post a Comment