LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Friday, 12 June 2015

MERI JAAN, MERI JAAN SUNDAY OH SUNDAY !

MERI  JAAN,  MERI JAAN   
SUNDAY  OH  SUNDAY !



 The title was the first liner of a popular hindi song of a bygone era. 

Of all the days in the week Sunday is the day everybody  looks forward to ;

 Sundayis the day of rest, relaxation, meeting up with old friends and relatives.




It is the day you say "to hell with you Time, I will do what I want to do today,, when it pleases me and not to any schedule ! I may not even do some routine work  today , like taking a bath or even  cooking for I would go out with the family  and eat' !

But this sort of a mindset for Sundays, does it work for all of us ? I dont think so;

There are many who dread the thought that the morrow will be a Sunday.


Take the case of Ravi. He is the youngest in a large family.  As a child he was the darling of the house, but on growing up , his parents told him to be responsible  and help the family out on need.

Thus on a Sunday,when the entire family is around, Ravi would run several errands for all the members of  the family which keep him busy. Normally, on week  day evenings, Ravi would go out and play with his friends; but not on a Sunday; for that is the day when his  brothers and sisters would gang up and complain about his misdeeds of the past week to his parents so as a sort of a punishment, his parents would ask him to study instead of play  on Sunday evenings.

Thus Ravi hates Sundays  of all the days in the week.


Shekhar, a budding youngster has a different problem on Sundays ! His gully cricket is completely ruined , on Sundays  as the big boys of the neighbourhood come over to play ! so all that Shekhar does is field in the match; retrieving the ball; with no batting or bowling ! 

Does Shekhar like a Sunday? Hell NO !


Then we have the case of Neeta,  a housewife,  a typical Indian Sati Savitri who treats her husband as lord cum God ! Her husband Shammi, a male chauvinist pig believes Sunday as, a day to be led, the way he pleases  without taking other's concerns to account!  

Thus Neeta's Sunday is a wreck and she becomes literally  a call bell for her hubby! 

On Sundays  tea or coffee are made umpteen times along with snacks as per Shammi's wishes  and there is no fixed time for eating lunch. As per Indian tradition, the wife generally has her lunch along with or after that of her husband, so one can imagine her plight on when Neeta will have her lunch or dinner! 

Also, Shammi  goes out and returns at anytime on a Sunday without informing Neeta. All in all, if there is one day Neeta hates it is a Sunday !


AT the other extreme, we have Suman, a hen pecked husband ; He dreads a Sunday, as that is the day his wife has a ready made list of " Do 's "  for him.  If it is not cleaning up her Kitchen or bathroom, it would be a visit to her friends' houses ;or even some cooking work like cutting vegetables or preparing the flour to make the next week's  iddlis or  dosas.;  any mild protest from Suman is nipped in the bud; as his wife Kamala  says " Dear  I am here to  help you "; and the help ends with issuing instructions , as to how to go  about the job. Suman who  was looking forward to a complete day of rest on a Sunday, does not  get it.


To Shetty, Sunday is one day, he wishes was  not there ! He works as a waiter in a popular catering South Indian Hotel; On Sundays,  The hotel gets filled up  the moment shutters open, at 8 am  and remains thus until 8 pm; Shetty has to be in his best behaviour {a calm demeanour  with a  tooth  paste advertised  smile on his face}  throughout the day  disregarding the  bad behaviour of some of his   customers or else he may lose his job ! At the end of  a  Sunday, Shetty is mentally, physi cally and emotionally a very tired man !


There are many like Shetty,  on whom Sundays take a heavy toll, be it in the Marketting, Sales or Service  sectors;  As far as Sunday is concerned , they wish what is sung  in  an old popular modified  Hindi song is true!

" Chali  jaa, Chali jaa  Sunday, Chali jaa
   Chod Ke  Duniya,  Chali Jaa " 




G. Venkatesh


.
















, , 

Thursday, 11 June 2015

பிரபுவின் பிரச்னைகள்



பிரபுவின் பிரச்னைகள்






 

பலரும் அறிந்த பழமொழி ஒன்று உண்டு: “யார் இளவயதிலேயே இறந்துவிடுகிறார்களோ அவர்கள் கடவுளின் அன்புக்குப் பாத்திர மானவர்கள். 

இந்தக் கூற்றைப் பலரும் மறுக்கக்கூடும் இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று வாதிடக் கூடும். ஆனால், சாதாரண மான மூத்த குடிமக்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். நமக்கு வயதாகிக் கொண்டே போகும்போது, பணமல்ல, உடல்நலனே அவர்களுக்குப் பெரிதும் கவலையளிக்கும் விஷயமாகிறது.

பணக்காரர்களோ, வசதிபடைத்தவர்களோ, நடுத்தர வர்க்கத் தினரோ, ஏழைகளோ கூட, அவரவர் வாழ்க்கைமுறைக்கேற்ப கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு வாழ்ந்துவிட முடிகிறது; ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை யாருக்குமே திருப்தியான வாழ்க்கை இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நீங்கள் யாரேனும் முதியவரிடம், நண்பரிடம், உறவினரிடம் என்று யாரிடம் பேசினாலும் சரி, அந்த உரையாடலில் உடம்பே சரியில்லை என்றவிதமான புலம்பலோ, அங்கலாய்ப்போ கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்!

என்னுடைய உடம்பு மிகவும் ஆரோக்கியமானது; எனக்கு நோய்நொடியே வந்ததில்லை என்று சிலர் பீற்றிக்கொள்ளக் கூடும். அப்படிப் பேசுபவர்கள், ஒன்று பொய் சொல்கிறார்கள், அல்லது தம்முடைய உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் சொல்லத் தக்க அளவில் பொருட்படுத்தக்கூடியது அல்ல என்று கருதுகிறார் களாயிருக்கும்.

எப்படியிருந்தாலும் சரி, மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளவேண்டி யிருக்கும் உடல்நலப் பிரச்னைகள் மிகவும் கடுமையாக இருக் கின்றன. வெளியே தெரிவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிக மான உடல் நலன் சார்ந்த, வாழ்வு சார்ந்த வேதனைகளை அவர் கள் அனுபவித்துவருகிறார்கள்.

பிரபு ஒரு நடுத்தர வயதுக் குடும்பத்திற்குப் பெயரளவில் தலைவராக இருந்துவந்தார். நான் ஏன் பெயரளவு தலைவர் என்று சொல்கிறேனெறால், அந்தக் குடும்பத்தின் முக்கிய முடிவுகளை யெல்லாம் அவருடைய மனைவி ப்ரமீளா தான் எடுப்பாள். பிரபுவின் கடமை என்பது வெறுமே அவருடைய மனைவி காட்டும் காசோலைகளில் கையெழுத்திடுவது; வெறுமே ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியேறிவிடுகின்ற அறிவுரை களை வழங்குவது. பிரபுக்கு நிறைய உடல் உபாதைகள் உண்டு. அவற்றில் முதன்மையானது சீர்கெட்டுவிட்ட முழங்கால் ஒன்று, உயரளவு ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும்.

அதன் விளைவாக, அவருடைய உடல்நிலையை, அவன் சாப்பி டும் உணவை அவனுடைய மனைவி உன்னிப்பாக கண்காணித்து வந்தாள். ஏறத்தாழ வீட்டுக்காவலில் இருந்தார் அவர் என்றே சொல்லலாம், அவர் வெளியே எங்கே போவதானாலும் அவளும் அவருடனேயே புறப்பட்டுவிடுவாள்!

ஆனால், அவருடைய உடல் உபாதைகள், மனைவியின் வேட்டை நாய்த்தனமான கண்காணிப்பு எல்லாவற்றையும் மீறி, பிரபுவுக்கு மதுவருந்தவும் சிகரெட் புகைக்கவும் உதவிசெய்ய அவருடைய
வேலையாள் மது இருந்தான்!


இப்பொழுது அந்த வேலையாள் மதுதான் பிரபுவின் அறைக்குள் வருகிறான்;

மது, எனக்கு ஒரு சிகரெட் பற்றவையேன்,” என்கிறார் பிரபு.


எஜமான், இப்பொழுதெல்லாம் இதைச் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது… போன தடவை எஜமானியம்மா என்னைக் கையுங்களவுமாய்ப் பிடித்து, இன்மேல் ஒரு சிகரெட் உங்களுக்கு வாங்கித் தந்தால்கூட என்னை வேலையை விட்டுத் தூக்கிவிடுவதாய் பயமுறுத்தினார். ” என்றான்.

"பிரபு அவனை இடைமறித்து, “ சரி, சரி நான் உனக்கு ஒரு சிகரெட்டுக்கு இன்னும் 5 ரூபாய் அதிகம் தருகிறேன். எங்கே என்னுடைய மதுக்கோப்பை?” என்று கேட்டார்.

மது கதவைத் தாழிட்டு, பிரபுவிடம் ஒரு சிறிய புட்டியைத் தந்தான்;

எஜமான், சீக்கிரம் குடித்து முடியுங்கள், யாராவது வந்துவிடப் போகிறார்கள் என்றான்.

பின்னர், பிரபு குடித்துமுடித்த பிறகு, “ எஜமான், அதன் விலை 200 ரூபாய்”, என்றான்.

என்னது?” என்று கத்தினார் பிரபு. “போன தடவை நான் உனக்கு 100 ரூபாய் தான் தந்தேன்.”

”ஆமாம் எஜமான், ஆனால் நாட்டுச்சாராயத்தை யாருக்கும் தெரி யாமல் வீட்டிற்குள் கொண்டுவருவது இப்போதெல்லாம் எத்தனை கடினமான காரியமாக இருக்கிறது தெரியுமா?”

மது, இங்கே நீ தொடர்ந்து வேலையிலிருக்க வேண்டுமா, அல்லது, உனக்கு வேலை போனால் பரவாயில்லையா? இதைமட்டும் எனக்குச் சொல்லிவிடு" என்றார் பிரபு, தொடர்ந்து, “சின்ன வயதில் நான் மிகவும் நன்றாக நடிப்பேன் தெரியுமா?’ அதுவும், குடிகாரனாக அற்புதமாக நடிப்பேன்; உன்னுடைய எஜமானியம்மாவின் எதிரில் அப்படி நடிக்கவா? அப்படிச் செய்தால் உன் கதி என்னாகும் என்று யோசித்துப்பார்!”  என்று கேட்டார்.

"ஐயோ, வேண்டாம் எஜமான், அப்படிச் செய்துவிடாதீர்கள்” என்று பயந்துபோய் கெஞ்சினான் மது. “உங்களுக்கு என்ன விருப்பமோ அந்தப் பணத்தை மட்டும் தண்டால் போதும்”


அப்போது கிரிக்கெட் ஸீஸன். பிரபுவுக்கு கிரிக்கெட் மீது இருந்த மோகம் குறையவேயில்லை. ஆனால் அவருடைய நினைவு மழுங்கிக்கொண்டிருந்தது. அவருடைய பேரன் அஜித் மட்டுமே அந்த வீட்டில் கிரிக்கெட் ரசிகனாக இருந்தான்.

"அஜித், ஐ.பி. எல் நடந்துகொண்டிருக்கிறது, ஆனால், தெரிந்த முகமாக டி.வியில் யாரையுமே பார்க்கமுடியவில்லையே, ஏன்?” என்று பேரனிடம் கேட்டார் பிரபு.

“யாரைப்போல், தாத்தா?” என்று கேட்டான் அஜித்.

அந்தப் பையன் விஷமக்காரன். தாத்தாவுக்கு எதுவும் சரியாக ஞாபகம் இருப்பதில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். 

வேகப்பந்து வீச்சாளராகத் திகழும் கிரிக்கெட்வீரன் ஒருவரைக் குறிப்பிட்டார் பிரபு.

ஆனால், அவருடைய பெயர் என்ன தாத்தா?”

“ஸ்ரீ, ஸ்ரீ…. “ என்று முணுமுணுத்தார் பிரபு. “எனக்கு அவனுடைய முழுப்பெயர் ஞாபகம் வரவில்லை.”

அது ஸ்ரீகாந்தாக இருக்க வழியில்லை தாத்தா, அவர் வேகப்பந்து வீச்சாளர் கிடையாது. தவிர, இப்பொழுது அவர் ‘கோச்’ மட்டுமே.”

“அஜித், என்னை முட்டாளாக்கப் பார்க்காதே”, என்று கூறினார் பிரபு.

தாத்தா, அது ஸ்ரீநாத்தா? ஆனால், அவர் ‘ரிடையரா’கி விட்டாரே!”

“இல்லை, இல்லை” என்று ஆத்திரத்தோடு கூறினார் பிரபு.

“ஒருவேளை, நீ ஸ்ரீராமைக் குறிப்பிடுகிறாயா? ஆனால், அவர் ஐ.பில். எல்லில் கிடையாதே, அவர் வெறும் ‘க்ளப் ப்ளேயர்’ தான்!”

பரவாயில்லை, அடுத்து நீ என்னிடம் அது ஸ்ரீவித்யாவோ, ஸ்ரீதேவியோ இல்லை என்று சொல்வாய்,” என்ற பிரபு, “உனக்கு என்னிடம் சொல்ல விருப்பமில்லையென்றால் நான் வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்கிறேன்_” என்றார்.

“ஹோ, இப்பொழுது நீ யாரைக் குறிப்பிடுகிறாய் என்று எனக்குப் புரிந்விட்டது, தாத்தா”, என்ற அஜித் “நீ ஸ்ரீஷாந்தைத் தானே குறிப் பிடுகிறாய்! ஆனால், அவர் இப்போது ஸஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளாரே தாத்தா!”

இத்தனை நேரமும் அது உனக்குத் தெரிந்தேயிருந்தது… இல் லையா? என்னை வைத்துக் கொஞ்சம் வேடிக்கை செய்து மகிழ்ச் சியடையப் பார்த்தாய், அவ்வளவுதான்…”

அவருடைய உணவு வழக்கமாக அவருடைய அறையிலேயே பரிமாறப்படும். ஆனால், அன்று அவரும் குடும்பத்தாரோடு சேர்ந்து சாப்பிட வரும்படி அழைக்கப்பட்டார். அப்படி அழைக்கப் பட்டதற்கு என்ன காரணம் என்று பிரபு கேட்க விரும்பினார்.

சாப்பாட்டு மேஜைக்குச் சென்றதும் அங்கேயிருந்தவர்கள் ஒரே குரலில் “ஹாப்பி பர்த்டே தாத்தா!” என்று பாடினார்கள்.

பிரபு சாப்பாட்டுமேஜையருகே நடுநாயகமாக அமர்த்தப்பட்டார்.

மேஜையின் மீது என்னென்னவோ தின்பண்டங்கள் பரப்பிவைக் கப்பட்டிருந்தன, ஆனால், நாக்கில் எச்சிலூற வைக்கும் தின்பண் டங்கள், இனிப்புகள் எல்லாமே தன்னுடைய கையெட்டும் தொலைவிற்கு அப்பால் வைக்கப்பட்டிருந்தன என்பதை பிரபு கவனித்தார்;

அவருடைய தட்டில் இருந்ததெல்லாம் உப்புசப்பில்லாத உணவு, ஒரு சின்னஞ்சிறிய லட்டுத்துண்டு. அவ்வளவே.

அவர் ப்ரமீளாவை ஏறிட்டு நோக்கியபோது, “உங்களுக்குத் தான் தெரியுமே, உங்கள் உடல்நிலை மோசமான நிலையில் இருக் கிறது. டாக்டர் உங்களுக்கு உப்புசப்பில்லாத உணவைத் தான் தர வேண்டும் என்று என்னிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். கொஞ்சம்போல உப்பு சேர்த்துக்கொள்ளலாம், அவ்வளவுதான். அந்த லட்டு உங்களுக்கு இன்று பிறந்தநாள் என்பதற்காக. சொல் லப்போனால், அதைக்கூடத் தரக்கூடாது என்று டாக்டர் என்னைத் தடுத்தார்.”

பிரபு தன்னுடைய மருத்துவரை சபிப்பதாய் முணுமுணுத்தார். ஆனால், அவருடைய குடும்பத்தார் அதைப் பொருட்படுத்தவே யில்லை. அவர்கள் மும்முரமாக அங்கேயிருந்தவற்றையெல்லாம் ஆசைதீர விழுங்கிக்கொண்டிருப்பதை பிரபு கவனித்தார். அவரு டைய பேத்தி ஆர்த்தி மட்டும் சாப்பிடவில்லை. அவருடைய அருகில் அமர்ந்தபடி வெகு மும்முரமாய் யாரிடமோ மௌபைல் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள்.  

அவளுடைய தட்டில் இருந்த லட்டுவைப் பார்க்க பிரபுவுக்கு நாக்கில் எச்சில் ஊறியது; யாரும் பார்க்காத அளவில் பாய்ந்து அதை எடுத்துக்கொண்டவர் அதைத் தன்னுடைய வாயில் போட்டுக் கொண்டுவிட்டார்! ஆசைதீர அதைக் கடித்து ருசித்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த ஆர்த்தி கூறினாள்:

“அம்மா, நீ என் தட்டில் லட்டு வைக்க மறந்துவிட்டாய்.”

“இல்லை, இல்லை ஆர்த்தி – நீ அதைச் சாப்பிட்டிருப்பாய்; இந்தா, இன்னொன்று எடுத்துக்கொள்”, என்றாள் அவளுடைய அம்மா.

“ஸெல்ஃபோனில் பேசுவதை நிறுத்தி சாப்பிடத் தொடங்கு, ஆர்த்தி…. இல்லையென்றால் இந்த லட்டுவும் காணாமல் போய்விடும்! அதுவும், உன்னுடைய தாத்தா இங்கே இருக்கிறாரே!” என்றால் ஆர்த்தியின் பாட்டி.

பிரபு தன்னுடைய அறைக்குத் திரும்பிவந்துவிட்டார். தன்னுடைய வாழ்க்கையின் 80 வருடங்கள் எப்படியெல்லாம் கழிந்துபோயின என்பதை எண்ணிப்பார்த்துக்கொண்டார்;  

அவருடைய நினைவலைகள் அவரைக் குழந்தைப்பிராயத்திற்கு வழிநடத்திச் சென்றன. அங்கிருந்து பள்ளி, கல்லூரி நாட்களுக்கு; தன்னுடைய நண்பர்களோடு அவர் கண்டு களித்த திரைப்படங்கள் – ஆங்கிலப் படங்கள், இந்திப் படங்கள் நினைவுக்கு வந்தன. பின், அவருக்குப் பிடித்தமான பாடகர்கள் நினைவுக்கு வந்து அவரை நெகிழச் செய்தார்கள்

பாடகர்களில் என்றுமே முகேஷ் தான் அவருக்கு மிகவும் பிடித்தமானவர்!

முகேஷைப் பற்றி நினைத்துக்கொண்டதும், அவர் பாடியதிலேயே தனக்குப் பிடித்தமான பாடல்களில் ஒன்று பிரபுவின் உதடுகளிலிருந்து ஒலித்தது: “ப்யார் ஹுவா இக்ரார் ஹூவா( "Pyaar Hua Ikraar Hua) "

அறைக்கதவு தட்டப்பட்டது. ப்ரமீளா உள்ளே நுழைந்தாள்: “தயவு செய்து பாடாதீர்கள்; நீங்கள் பாடும்போதெல்லாம் அக்கம் பக்கத்துவீட்டாருக்கு சிரிப்புக்குப் பஞ்சமில்லாமல் போய்விடு கிறது. தவிர, நாம் இங்கே நல்லபடியாக வாழவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக, உங்கள் வயலினை வாசிக்கத்தொடங்கிவிடாதீர்கள். அதைக் கேட்டாலே தெருநாய்களெல்லாம் குறைக்கத் தொடங்கிவிடுகின்றன

அப்பொழுதுதான், இன்னும் தான் வாழத்தான் வேண்டுமா?’ என்ற எண்ணம் பிரபுக்கு ஏற்பட்டது. அண்ணாந்து வானத்தைப் பார்த்த வர், “எதற்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறாய், கடவுளே, இப்பொழுதே வந்து என்னைக் கூட்டிக்கொண்டுபோய்விடு… கூட்டிக் கொண்டுபோய்விடு….!” என்று மன்றாடிக் கேட்டுக் கொண் டார் அவர்!
ஜி.வெங்கடேஷ்






G.Venkatesh


















Wednesday, 10 June 2015

என் கணவர் தன்னிகரற்ற பரதநாட்டியக் கலைஞர் தெரியுமா!



  என் கணவர் தன்னிகரற்ற பரதநாட்டியக் கலைஞர் தெரியுமா!





 "Keeping up with the Jones" என்றால், ஒருவர் அவருடைய அண்டை அயல் வீட்டுக்காரர்கள் உறவினர்கள் ஆகியோரோடு ஒப்பிடும் அளவில் தனது சமூக அந்தஸ்தை (உலகாயுதப் பொருட்களை வாங்கிக் குவிப்பதன் மூலம்)த் தக்கவைத்துக் கொள்ளு தல். 
இப்படியாக, நம்முடைய பக்கத்துவீட்டுக் காரர்  ஏதாவ தொரு பொரு ளைப் புதிதாக வாங்கி னால்        ( இரு சக்கர வாகனம் வாங்குகிறார் என்று வைத்துக்கொள் வோம்) உடனே நம் மன தில் அதேபோல் வாங்க வேண்டுமென்றோ அல் லது அதைவிட மேலா னதாக வாங்கவேண்டு மென்றோ ( நாலு சக்கர வண்டி என்று வைத்துக்கொள்வோம்) ஆர்வம் பொங்கும்.


இந்த வாழ்வியல் கலை சமூகத்தின் எல்லாப் படிநிலைகளில் இருக்கும் மக்களையும் ஆட்டிப்படைக்கிறது. பணக்காரர்கள், மத்தியதர வர்க்கத்தி னர், ஏழைகள் என எல்லோருமே இந்தக் கலையை ஆர்வமாகப் பயில் கிறார்கள். நாம் இந்த மனோபாவத்தை எல்லாவிடங் களிலும் பார்த்து வருகிறோம். வீடுகளில், அலுவலகங்களில், மனமகிழ்மன்றங்களில், பூங்காக்களில் என எல்லாவிடங்களிலுமே.... எந்த உரையாடலா னாலும், அதில் இந்தக் கலையைக் காணக்கிடைக்கிறது. ஆனால், பிரம்மா இந்த குணாம்சத்தை, திறனாற்றலை நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் வழங்கியிருக்கிறார். சிலரிடத்தில் இந்த வாழ்வியல் கலை அவர்களுடைய பேச்சு, செய்கை எல்லாவற்றிலும் வெள்ளமாகப் பொங்கிப் பெருகத் தொடங்கிவிடுகிறது. ஆனால், வேறு சிலரோ கூடுதல் அறிவுஞானத்தோடு மிகவும் அத்தியாவசியமான உள்ள சந்தர்ப்பங்களில் இடங்களில் மட்டுமே இந்த வாழ்வியல் கலையில் தங்களுக்கிருக்கும் திறனாற்றல்களை வெளிப்படுத்துகிறார்கள்.

இவ்வாறாக, ஒரு மத்தியதர இல்லத்தரசி, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ‘பேடா’க்களை மகிழ்ச்சி கொப்பளிக்க விநியொகிக் கும்போது, யாரேனும் அதுகுறித்து விசாரித்தால் இப்படிக் கூறுவாள்: “ஹோ, இதுவா, என்னுடைய பிள்ளைக்குச் சென்னை ஐஐடியில் இடம் கிடைத்திருக்கிறது!”

ஆனால், அதைக்கேட்டு அவளுடைய பக்கத்துவீட்டுக்காரர்  வாயடைத் துப் போய்விடமாட்டார். ”எங்கள் சுரேஷுக்கு ஐஐடி மும்பையில் இடம் கிடைத்தது. ஆனால், எங்களுக்குத்தான் அனுப்ப விருப்பமில்லை, ஏனெனில், எங்களுக்கு அங்கே உறவினர்களோ தெரிந்தவர்களோ கிடையாது!” ஆனால், உண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்கக்கூடும்

அதேபோல், ஒரு பூங்காவில், மூத்த குடிமக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருக்கும்போது, ஒருவர் இப்படிக் கூறுவார்: “ஹோ, காலையில் நான் காபி குடிப்பதில்லை. ‘க்ரீன் டீ’ தான் குடிப்பேன். உடனே அவருடைய நண்பர், “ஓ, நான் எப்பொழுதும் பழ ஜூஸ் தான் குடிப்பேன்... அந்தந்தப் பருவத்திற்கேற்ப பழங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்”. உண்மையில் அவர்கள் தினசரி காலையில் அவர்களுக்கு சாதாரண காப்பி அல்லது தேனீர் மட்டுமே தரப்படும் என்பது வேறு விஷயம்;

அதேபோல் ஒரு இல்லத்தரசி தன்னுடைய அண்டைவீட்டுப் பெண்மணி யிடம், “தீபாவளிக்கு நான் காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கப்போகி றேன்!” என்பாள். உடனே மற்றவள், “நான் எப்பொழுதும் பனாரஸ் பட்டு தான் வாங்குவேன்!” என்பாள்.

சில சமயங்களில் இந்த மாதிரி பெருமை பீற்றிக்கொள்வதில் நமக்கு உள்ள ஆர்வம் ஆபத்தான அளவு, அபத்தமானஅளவுகடந்துபோய் விடுவ துண்டு.ராதாவின் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது.

அவள் ‘அப்பர் மிடில் க்ளாஸ்’ சமூகத்தைச் சேர்ந்தவள் கொல்கத்தாவிலிருந்த ஒரு பிரபல ’லேடீஸ் க்ளப்’பில் உறுப்பினராக இருந்தாள். ஒரு நாள் அந்த ’கிளப்’ இல் பழைய புகழ் பெற்ற திரைப்படம் ’ஸிங்கிங் இன் தி ரேய்ன்’ காண்பிக்கப்பட்டது.

படம் முடிந்த பிறகு அங்கிருந்த பெண்கள் தங்களுடைய கணவர்களின் பொழுதுபோக்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ராதாவின் நெருங்கிய தோழியான ரேகா இவ்வாறு கூறினாள்: “ஹோ, சுரேஷ் மிக அழகாகச் சிறந்த மேலைநாட்டு நடனம் ஆடுவார். தனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் மிகவும் ஆர்வமாக கடுமையாகப் பயிற்சி செய்வார். மெதுவாகஆடும் நடனவகைகள், வேகமாக ஆடும் நடனவகைகள் இரண்டு வகைகளையுமே கடுமையாகப் பயிற்சி செய்வார். அவர் ஆடுவதைப் பார்த்தால் எனக்கு எல்விஸ், ஃப்ரெட் ஆஸ்ட்டேய்ர்தான் எனக்கு நினவுக்கு வருவார்கள்!” என்று ராதாவின் பக்கமாகத் திரும்பி சவால் விடுவதாய்க் கூறினாள்.

ராதாவா தோல்வியைத் தழுவுவாள்... கொஞ்சங்கூட யோசிக்காமல், “ ”ரமேஷ் சிறந்த பரதநாட்டியக்கலைஞர்! ஷம்போ, ஸ்வயம்போ’ பாட்டிற்கு எத்தனை அற்புதமாக ஆடுவார் தெரியுமா! என்று பீற்றிக்கொண்டாள்.

ராதா சொல்வது பொய் என்று ரேகாவுக்குத் தெரியும். ’இந்த ராதாவின் பொய்யை அம்பலமாக்கியே தீரவேண்டும்’ என்று முடிவு செய்தவளாய், “அட! அப்படியா! எனக்கு பரதநாட்டியம் என்றால் உயிர் தெரியுமா! அதில் கண், கை, கால் எல்லாம் எத்தனை அருமையான ஒத்திசைவுடன் இயங்கும்! நன்றாக பரதநாட்டியம் ஆடக்கூடியவர்கள் ஆடும்போது பார்க்க அத்தனை ஆனந்தமாக இருக்கும்! ஒருநாள் நான் உன்னுடைய வீட்டிற்கு வந்து ரமேஷ் ஆடுவதைப் பார்க்க விரும்புகிறேன்! எப்படி அந்த அங்கங்களின் ஒத்திசைவை அவர் கொண்டுவருகிறார் என்று பார்க்கவேண்டும்! நான் பின்னர் உன்னைத் தொடர்புகொண்டு உனக்கு சௌகரியமான நாள் ஒன்றில் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்!”

ராதா அப்படியே உறைந்துபோனாள். தானே வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டுவிட்டது அவளுக்குப் புரிந்தது. ’இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது.... கடவுளே, என்னை எப்படியாவது காப்பாற்று....’

’கிளப்’பிலிருந்து நேரே ஒரு இசை ஒலிநாடா, வீடியோ விற்கும் கடைக்குச் சென்றாள். பரதநாட்டியம் கற்க ஆரம்பிப்போருக்கு உரிய வீடியோக்களை வாங்கிக்கொண்டாள்.

வீட்டிற்குச் சென்றவள் ரமேஷை எப்படியாவது, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ளச் செய்து விட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள். தேவைப் பட்டால் ஒரு நடன ஆசிரியரைக் கூட நியமித்துக்கொள்ளலாம்... ’ஆனால், முதலில் ரமேஷை ’தாஜா’ செய்ய வேண்டும்....’ அதற்கு அவனுக்குப் பிடித்த உணவுவகைகளை சமைத்துத் தருவதே சிறந்த வழி என்று அவளுக்குத் தெரியும். எனவே, அவன் விரும்பிச் சாப்பிடும் பால் பாயசத்தைத் தயாரித் தாள்.

சாப்பாட்டுமேஜையில் தனக்குப் பிடித்தமான பால் பாயசம் இருப்பதைப் பார்த்து ரமேஷுக்கு இனிமையான ஆச்சரியம்! “ராதா, இன்று என்ன விசேஷம்? பால் பாயசம் தயாரித்திருக்கிறாயே. இன்று என்னுடைய பிறந்த நாள் கிடையாதே?” என்றான். “எனக்குத் தெரியும் ரமேஷ், சும்மா, வழக்கமாகச் சாப்பிடுவதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட் டுமே என்று செய்தேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”

”மிகவும் பிடித்திருக்கிறது என் அருமை மனைவியே!” என்றான் ரமேஷ்.

சாப்பாட்டுக்குப் பிறகு, ரமேஷ் நாட்டுநடப்புகளை அறியவேண்டி டி.வியை ‘ஆன்’ செய்தான்.  அதில் பரதநாட்டியம் கற்பித்தல் வீடியோ கண்டது. அதைப் பார்த்து ”ராதா” என்று, சமையலறையில்ருந்த தன் மனைவிக்குக் கேட்கும்படியாக உரத்த குரலில் அழைத்தான் அவன்.

பரதநாட்டியம் கற்றுக்கொள்ளப் போகிறாயா என்ன! அல்லது சுமதிக் காக (அவர்களுடைய மகள்) வாங்கிவந்திருக்கிறாயா என்ன?” என்று கேட்டான்.

”இல்லை, இல்லை ரமேஷ்” என்று கூறியபடியே சமையலறையிலிருந்து வரவேற்பறைக்கு வந்துசேர்ந்தாள் ராதா. “ ஆனால், அன்புக் கணவரே, இது உங்களுக்காக வாங்கியது!” என்று ஒருவழியாகச் சொல்லிவிட் டாள்.

“என்னது! எனக்காகவா? என்ன, விளையாடுகிறாயா ராதா?’ என்று கேட்டான் ரமேஷ்.

“இல்லை, அன்பே இல்லை” என்றாள் ராதா, “ஆனால் நீங்கள் எனக்கு அவசியம் உதவிசெய்யவேண்டும்...செய்வேன் என்று சத்தியம் செய்யுங் கள்”

“நான் செய்வேன், ஆனால், அதற்காக சத்தியமெல்லாம் செய்ய மாட் டேன்,  சொல்லு, என்ன விஷயம்?” என்று கேட்டான் ரமேஷ்.

பின், ராதா எல்லாவற்றிற்கும் ரேகா தான் காரணம் என்று கூறி நடந்ததை விவரமாக எடுத்துக்கூறினாள். “அவள் இன்று ‘க்ளப்’இல் எப்படி பீற்றிக்கொண்டாள் தெரியுமா? அவளுடைய கணவர் சுரேஷ் அத்தனை சிறப்பாக மேலையநாட்டு நடனங்களை ஆடுவாராம்... எனவே, நீங்கள் தன்னிகரற்ற பரதநாட்டியக் கலைஞர் என்று நான் சொல்லும்படியாகியது...” 


அதைக் கேட்ட ரமேஷ் இவ்வாறு பதிலளித்தான்: “ சரி, இந்த இக்கட்டி லிருந்து நீ விடுபட நான் உதவி செய்கிறேன். ஆனால், கீழ்க்கண்ட நிபந்தனைகளை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலில், உன்னுடைய தோழிகளிடம் நீ பேசும் பேச்சில் என்னை நுழைக்கக் கூடாது/”

“சரி, சரி” என்றாள் ராதா.


”அடுத்தது, இனி வாரம் ஒருமுறையாவது நீ பாயசம் செய்யவேண்டும்!”

“நிச்சயம் செய்கிறேன், நிச்சயம் செய்கிறேன்”, என்று பதிலளித்தாள் ராதா.

“இறுதியாக, ஆனால் இதுவும் மிக முக்கியம், இந்த விடுமுறையின்போது நாம் என்னுடைய பெற்றோர்களின் இடத்திற்குச் செல்லவேண்டும்.”

“என்னது?” என்று கோபமாகக் கேட்டாள் ராதா. “ஆனால், நாம் என்னு டைய பெற்றோர்களிடம் போகலாம் என்று நீங்கள் வாக்குறுதி அளித் திருக்கிறீர்கள்.”

“நான் உனக்கு உதவி செய்ய வேண்டுமா, வேண்டாமா?” என்று கேட்டான் ரமேஷ். “தவிர, அந்த சமயத்தில் ஒரு வார காலம் நான் அயல்நாடு போக வேண்டிவரலாம். அந்த சமயத்தில் நீ உன்னுடைய பெற்றோர்களிடம் போகலாம்”.

”சரி, அப்படியானால் சரி, நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றாள் ராதா.

“சரி, இப்பொழுது அமைதியாக இரு பதற்றம் வேண்டாம், சரியா” என்றான் ரமேஷ்.


சில நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் ரமேஷ் சுரஷை அவனுடைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் அழைத்தான்.

“ஹலோ சுரேஷ், நான் தான் ரமேஷ் பேசுகிறேன்.”

”தெரிகிறது, “என்ற  சுரேஷ், “நலமாக இருக்கிறாயா?” என்று விசாரித் தான்.

“நான் நலமாக இருக்கிறேன், ஆனால், ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் - நீ எல்விஸ் ஐ விட சிறப்பாக Jailhouse Rock' பாடலுக்கு நடனம் ஆடுவாயாமே!”

என்ன உளறுகிறாய்? பைத்தியம் கிய்த்தியம் பிடித்துவிட்டதா? அல்லது இத்தனை சீக்கிரமே ‘ஒரு கோப்பை’ உள்ளே இறங்கியாகிவிட்டதா?

இல்லை, இல்லை” என்று மறுத்தான் ரமேஷ். “யாராலும் உன்னளவு அற்புதமாய் Blue Danube ஐ ஆடமுடியாதாமே! கேள்விப்பட்டேன்!”

“யார் இந்த மாதிரி அபத்தமாக உன்னிடம் உளறிக்கொண்டிருக்கிறார் கள்? என்று கேட்டான் சுரேஷ்.

ரமேஷ் ராதாவுக்கும் ரேகாவுக்கும் நடந்த உரையாடல் விவரங்களை சுரேஷுக்கு எடுத்துரைத்தான்.

அவர்களிருவருமாக இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைப்பதற்கு ஒரு திட்டம் வகுத்தார்கள்.


ரு ஞாயிற்றுக்கிழமை, ராதாவுக்கு ரேகாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “நான் இன்றைக்கு அந்தப் பக்கமாக வரவேண்டியிருக் கிறது. எனவே, உன் கணவர் ரமேஷ் பரதநாட்டியம் ஆடுவதைப் பார்க்க உன் வீட்டுக்கு வந்தாலும் வருவேன்!” என்றாள் ரேகா.

யார் அழைப்பது? என்று கேட்டான் ரமேஷ்.

“எல்லாம் அந்தத் தொல்லைப்பிடித்த ரேகா தான்” என்று கிசுகிசுப்பாய்க் கூறினாள் ராதா. ”அவள் இன்று நம் வீட்டுக்கு வரப்போகிறாளாம்...நாம் இப்போது என்ன செய்வது?”

”வரட்டுமே! ஒரு பிரச்னையும் இல்லை!” என்றான் ரமேஷ்.


சுரேஷும் ரேகாவும், சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார்கள். ராதா பீதியும், பதற்றமுமாய், அவர்களை வரவேற்றாள். 

சீக்கிரமே அவர்களுடைய உரையாடல் பொழுதுபோக்குகள், கணவர்கள் என்று திரும்பியது. தனக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்று எண்ணிய வளாய் ராதா காபி எடுத்துவருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து நழுவப் பார்த்தாள். ஆனால், ரமேஷ் அவளைப் போக விடவில்லை.

பின், ரேகா சொன்னாள்: “ரமேஷ், நீங்கள் மிகவும் நன்றாக பரதநாட்டியம் ஆடுவீர்களாமே! சுரேஷ் ஒரேயடியாகப் பாராட்டுகிறார்! அவர் அந்த வீடியோவைக் காட்டினார். உங்களுடைய கை, கால்,கண் எத்தனை அருமையாக ஒத்திசைவோடு இயங்குகின்றன! உண்மையிலேயே நீங்கள் ஒரு தன்னிகரற்ற நடனக்கலைஞர்தான்!”

”அந்த வீடியோவைப் பார்த்து என்னால் நிறையக் கற்றுக்கொள்ள முடியும், ஹோ, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்!” என்று பதிலளித்தவாறே சுரேஷைப் பார்த்துக் கண்சிமிட்டிப் புன்னகைத்தான் ரரேஷ். “இன்னொரு விஷயம் தெரியுமா? கல்லூரி நாட்களில் சுரேஷ் ஆடியதை நான் பார்த்திருக்கிறேன்....Jailhouse Rockக்கு அவன் ஆடியது இருக்கிறதே - அற்புதமாயிருந்தது!  எல்விஸ் இவனுடைய கால்தூசுக்கு வரமாட்டான்!”


பின்னர், அவர்கள் போன பிறகு ராதா ரமேஷிடம் குழப்பத்தோடு கேட்டாள்: “ஆச்சரியமாயிருக்கிறதே! ரேகா ஏதோ உங்களுடைய பரதநாட்டியம் வீடியோவைப் பார்த்ததாகக் குறிப்பிட்டாளே..... எனக்குப் புரியவேயில்லை....”

”எனக்கும் தான் புரியவில்லை!” என்றான் ரமேஷ். ”நீ ரேகாவிடன் கேட்டுப் பாரேன்!”








ஜி.வெங்கடேஷ்



Tuesday, 9 June 2015

உதவிக்கு ஒரு பேய்!

உதவிக்கு ஒரு பேய்! 


சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் செல்லவேண்டிய S267  விமானம் குறித்த நேரத்தில், இரவு  9.30 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது.  

Iஅந்த விமானத்தில் ஏறிக்கொண்ட பயணிகள் மிகவும் உற்சாகமான பேர்வழிகளாக இருந்தார்கள்;  

 சிங்கப்பூருக்கும், சென்னைக்கும் இடையே உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்ட அளவில் அந்த விமானம் இரவு 10 மணி, க்குச் சென்னையில் வந்துசேரவேண்டியது.  


ஆனால், துரதிருஷ்டவசமாக, விமானம் கிளம்பி சுமார் அரைமணிநேரத்திற்குப் பிறகு, விமானம் காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இந்தச் செய்தி எல்லாவிடங்களிலும் ஒலிபரப்பப்பட் டது, ஆனால், காணாமல் போன விமானம் எங்கே போயிற்று, என்ன ஆயிற்று என்று எந்த விவரமும் தெரியவில்லை. 


கடல்களில் மேற்கொள்ளப்படும் தேடல் முயற்சி கள்  அடுத்த நாள் காலையில் தான் தொடங்கப்பட முடியும்;  


இதற்கிடையில் ஊடகங்களில் விமானத்திற்கு என்னாயிற்று என்பது பற்றி பலவிதமான சாத்தியப் பாடுகளை வெளியில் உலவவிட்டுக்கொண்டிருந் தன. 1. விமானம் கடத்தப்பட்டுள்ளது. 2. விமான ஓட்டி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் சமுத் திரத்தில் எங்கேயோ விழுந்துவிட்டது. 3. ஏதோ வொரு  பெரிய அதிகார சக்தி அந்த விமானத்தை வலுக்கட்டாயமாகத் தன்னுடைய இராணுவத் தளத்தில் இறங்கச் செய்திருக்கிறது. இப்படிப் பல ஊகங்கள்...  


ஏதோவோர் அமானுஷ்ய சக்தி, வேற்றுக் கிரகத் தைச் சேர்ந்தது, விமானத்தை பூமியிலிருந்தே அப்பால் எடுத்துச்சென்றுவிட்டது என்று கூட சிலர் பேசிக்கொண்டார்கள்.


காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரமாகத் தொடர்ந்தது, அடுத்துவந்த நாட்களில் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால், எந்தப் பயனுமில்லை.


இப்பொழுது அந்த விமானத்தில் சென்ற பயணிக ளின் உறவினர்கள் தங்களுடைய அன்புக்குரிய உறவுகளை இனி பார்க்க முடியும் என்ற நம்பிக் கையை முற்றிலுமாக இழந்துவிட்டார்கள்;


மேலும், அப்படியே அந்த விமானத்தின் உடைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் உயிரோடு யாருமே இருக்கவியலாது என்றும், இறந்தவர்களின் சடலங்கள் கூட அடையாளம் கண்டுபிடிக்கவியலாத அளவு சிதைந்துபோயிருக்கும் என்பது மிகத் தெளிவாகவே எல்லோருக்கும் புரிந்தது.


அந்த துரதிருஷ்டம் பிடித்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் ராஜீவ் நடராஜன்.  


இயல்பாகவே அவன் பரபரப்பான பேர்வழி. ஓரிடத்தில் நிற்க மாட்டான். அங்கே இங்கே அலைந்துகொண்டேயிருப்பான்.


ஒரு சிறந்த உத்தியோகம் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது;

அந்த துயர சம்பவம் நிகழ்ந்தபோது அவனுக்கு வயது 21தான்.

மிகவும் புத்திசாலியான பட்டம் பெற்ற இஞ்ஜினியர். கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் உயர்ந்தவன் அவன். அயல்நாட்டில் மேற்படிப்பைப் படித்து முடித்து அங்கேயே நல்ல வேலை பார்த்துக்கொள்வதென்று திட்டம் தீட்டியிருந்தான்.

அவனுடைய உறவினர்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்; தாங்கமுடியாத துயரம்.

 ராஜீவின் ஆன்மா சொர்க்கம்/நரகம் வாசலை எட்டிய போது அங்கிருந்த வாயிற்காவலாளி அதைத் தடுத்து நிறுத்தினான்.


"மன்னிக்கவும், உள்ளே நுழைய உங்களுக்கு அனுமதியில்லை. பூமிக்கே திரும்பிச் சென்று அங்கே ஒரு பேயாகத் திரிவாயாக.” 

“என்ன? நான் செய்யாத தப்புக்காக எனக்கு இந்தத் தண்டனையா?” என்று கோபத்தோடு கேட்டான் ராஜீவ்.

“ஆனால், நான் சொன்னதில் ஒரு நிபந்தனை இடம்பெறுகிறது,” என்று தெரிவித்த வாயிற்காவலாளி மேலும் கூறலானான். “பூமியில் நீ எப்படி நடக்கிறாய் என்பது குறித்த காலத்திற்குக் கண்காணிக்கப்பட்டுவரும். நீ நன்றாக நடந்துகொள்கிறாயா, அல்லது தீயவழியில் நடக்கிறாயா என்பதைப் பொறுத்து நீ சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ வரவேற்கப்பட்டு அனுமதிக்கப்படுவாய்”, என்று விவரித்தான் வாயிற்காவலாளி.

ராஜீவ், எப்பொழுதுமே வீர தீர பராக்கிரமங்களை விரும்புவன்; உற்சாகமான இளைஞன். எனவே, அவன் அந்த நிபந்தனையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டான்!

ஆனால், என்ன நல்லது செய்வது, அதை எப்படிச் செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. தன் குடும்பத்தாருக்கு நல்லது செய்வது என்று தன் செயல்பாடுகளைத்  தொடங்கினால் சுயநலக்காரன் என்று அவனைச் சொல்வார்கள்;

எனவே எதிர்ப்படும் விஷயங்களுக்கேற்ப, உரிய வி்தத்தில் செயல்படுவது என்று முடிவு செய்தான்.


முதலில் ஒரு பிச்சைக்காரனுக்குச் சாப்பிட இரண்டு வாழைப்பழங்களை இலவசமாகத் தந்தான். அவற்றை அவன் ஒரு வாழைப்பழ வியாபாரியிட மிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டான்;

நினைவுவைத்துக்கொள்ளுங்கள், அவன் வெளியுலகின் கண்களுக்குத் தெரியமாட்டான்!


திடீரென , அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பெண்ணொருத்தி வீறிட்டலரும் சப்தம் கேட்டது.





என்ன விஷயம் என்றுபார்க்கச்சென்றபோது அங்கே ஒரு ஆள் மூதாட்டி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான். அவனுடைய கூட்டாளி அந்த மூதாட்டியைக் கயிற்றால் இறுகக் கட்டிக்கொண்டி ருந்தான். தன்னுடைய சமயோசித புத்தியைப் பயன்படுத்தி ராஜீவ் அந்த ஆளின் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டினான்’


உடனே அந்த ஆசாமியின் கையிலிருந்த கத்தி கீழே நழுவிவிட்டது. ராஜீவ் அதைக் கையிலெடுத்துக் கொண்டு அந்த ஆளை நோக்கி நீட்டினான். அந்த ஆள் அலறியடித்துக்கொண்டு ஓடியே போய்விட்டான்.

அந்த மூதாட்டி பெருமாளின் தீவிர பக்தை. நாராயணனே தன்னைக் காப்பாற்றிவிட்டதாக எண்ணிக்கொண்டாள் அவள்!

அண்மையிலிருந்த கோயில் ஒன்றில் ராஜீவ் நுழைந்தான். அங்கே ஒரு சுவாமிஜி சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். கூட்டம் மெய்மறந்து அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது;

அந்த சுவாமிஜி மனிதர்களின் பல்வேறு தீயகுணங்களைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார்; முக்கியமாக, பேராசை மிகவும் மோசமான குணம் என்று வலியுறுத்திக்கூறிக்கொண்டிருந்தார்;

தன்னுடைய பேச்சில் நடுநடுவே சில பிரார்த்தனை கீதங்களைப் பாடினார், ராமாயணம் மகாபாரதத்திலிருந்து சில மேற்கோள்களை எடுத்துக்காட்டினார்; சில குட்டிக்கதைகளைச் சொன்னார்.


திடீரென, அங்கே கூடியிருந்தவர்களிலிலிருந்து ஒரு பக்தன் சுவாமிஜியிடம் சென்று அவரை விமர்சித்தான். அவர் தன்னுடைய சொற்பொழிவால் எளிய மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினான்;

சுவாமிஜி சிறிதுநேரம் நிதானமிழக்காமல், அந்த ஆள் கூறுவதை சாந்தமாகவே கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவனோ தொடர்ந்து அவரை இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டேயிருந்தான்.


இது சுவாமிஜியைப் பெரிதும் ஆத்திரமடையச் செய்தது. அவர் அந்த மனிதனின் முட்டாள்தனமான பேச்சுக்காக அவன் ரத்தம் கக்குவான் என்று சபித்தார்.

சீக்கிரமே, அப்படியே நடந்தது. அந்த ஆசாமி நிறையவே சி்வப்பு நிற திரவத்தை நிறையக் கக்கினான்.

உடனடியாக அவன் சிகிச்சை அளிக்கப்படுவதற்காக அங்கிருந்து தூக்கிச்செல்லப்பட்டான்.

இது ராஜீவின் ஆர்வத்தைக் கிளப்பியது;

ஆனால், அங்கே குழுமியிருந்த பார்வையாளர்கள் மத்தியிலோ ஔவாமிஜியைப் பற்றிய மதிப்பும், அவருக்கிருக்கும் ஆன்ம சக்தியைக் குறித்த மதிப்பும் ஒரேயடியாக அதிகரித்துவிட்டது!  நிறைய பேர் அவர் சாட்சாத் கடவுள் அவதாரம் என்று கருதினார்கள்!

உடனடியாக சில முதாட்டிகள் அவருடைய காலடியில் விழுந்து வணங்கினார்கள்!

தன்னுடைய சொற்பொழிவின் இறுதியல் சுவாமிஜி அந்த ஆசிரமத்தின் பராமரிப்புக்காக தங்களால் இயன்றதை, தங்களுக்கு விருப்பமானதை நன்கொடையாகத் தந்து உதவும்படி வேண்டிக்கொண்டார்.


கூடியிருந்த பக்தர்கள் அங்கிருந்த உண்டியலில் காசு போட முண்டியடித்துக்கொண்டு சென்றார்கள்!

பிறகு சில பக்தர்களுக்கு சுவாமிஜியிடம் தங்களுடைய குறைகளைக் கூறி நிவாரணம் பெற அவருடைய உதவியாதரவை வேண்டுபவர்களாய் அவரிடம் பேசுவதற்காகச் சென்றார்கள்.

அவர்களில் ராஜீவின் மனதுக்கினியவள் நீட்டாவும் இருந்தாள்; அந்த சுவாமீஜி அவளிடம் தன்விவரக்குறிப்புகள் அடங்கிய சிறிய அட்டையைக் கொடுத்து தன்னோடு பேசுவதற்காக முன்பதிவு செய்ய பின்னர் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.



கூட்டம் முடிந்த பிறகு சுவாமிஜி அந்த அரங்கை விட்டு, அவருடைய தனிக்காவலர்களின் பாதுகாப்போடு அங்கிருந்து வெளியேறினார்.

சுவாமீஜி எங்கே போகிறார் என்று பார்ப்பதற்காக ராஜீவ் அவர் பின்னாலேயே சென்றான்.

சிறிது தூரம் நடந்த பின் அவனுக்கு ஒர் பேரதிர்ச்சி காத்திருந்தது.

அரங்கில், சுவாமீஜியை கேலியாக விமர்சித்து அதன் விளைவாய் ரத்தம் கக்கியவன் அங்கே வந்து சுவாமீஜியோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

அவ்ர்களிருவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

சுவாமீஜி கூறினார்: அந்த சிவப்பு ஜூஸ் சரியாக வேலை செய்தது! இல்லையென்றால் நமக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்கும்; நாளைக்கு என்னைப் பார்க்க வரச் சொல்லி ஓர் அழகிய பெண்ணுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். எனவே, உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க முடியும் என்று நம்புகிறேன்.இந்தக் கேளிக்கையில் நீயும் இணைந்துகொள்ள விரும்புகிறாயா?”

   ”கரும்பு தின்னக் கசக்குமா என்ன!” என்றான் சுவாமீஜியின் கூட்டாளி.

“அப்படியென்றால் அங்கே சரியாக பதினோரு மணிக்கு வந்துவிடு.”

”கண்டிப்பாக வருகிறேன்” என்றான் கூட்டாளி.

ராஜீவ் தன்னுடைய மனதுக்கினியவளின் வீட்டுக்கு வேகமாகச் சென்றான்.

அவள் தன்னுடைய அம்மாவிடம் சுவாமீஜியைப் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டான். கோயிலில் நடந்த அந்த சம்பவத்தைத் தாயாரிடம் எடுத்துக்கூறினாள் அவள்.

“அம்மா, சுவாமீஜி எனக்குப் பதினொரு மணிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். நான் அவரிடம் என்னுடைய பிரச்னைகளை எடுத்துச்சொல்லப் போகிறேன். ராஜீவ் பற்றிக்கூட. அவர் எனக்கு நல்ல அறிவுரை வழங்குவார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.”

”கண்டிப்பாக, நீதா..... போகும் போது பூ, பழம் எல்லாம் எடுத்துக்கொண்டு போ. மறந்துவிடாதே. அவர் பிரசாதம் தந்தால் அதை மறக்காமல் கொண்டு வா. நம்முடைய நண்பர்கள், உறவினர்களுக்கெல்லாம் கொடுக்கலாம்.”

அடுத்த நாள், ராஜீவ் குறித்த நேரத்தில் நீத்தாவின் வீட்டையடைந்தான்.

நீத்தா தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாள். அவளுடைய கண்ணுக்குத் தெரியாத அளவில், அருவமாய் ராஜீவ் பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டான்.


தரப்பட்ட விலாசத்திற்கு குறித்த நேரத்தில் அவர்கள் போய்ச்சேர்ந்தனர்.

சுவாமீஜி நீத்தாவை அன்பொழுக வரவேற்று அவளைத் தன்னோடு தரையில் அமரச் செய்தார். நீத்தா தன்னுடைய மனதுக்கினியவன், ராஜீவ் என்று பெயர் கொண்டவன் தன்னைத் தவிக்கவிட்டு இறந்துபோய்விட்டான் என்ற விவரத்தை அவரிடம் கூறினாள்.

சுவாமீஜி அவளை சமாதானப்படுத்தி, ஆறுதல் வார்த்தைகளைப் பேசினார். பின், இறந்தவரின் ஆன்மா சாந்தியடைவதற்காகவும், நீத்தாவின் மனம் நிம்மதி பெறுவதற்காகவும் ஒரு பூஜை நடத்தப்போவதாகத் தெரிவித்தார்.

 கண்ணை மூடிக்கொள்ளும்படியும், மனதிற்குள் கடவுளின் நாமத்தை உச்சரித்துக்கொண்டேயிருக்கும்படியும் நீத்தாவிடம் கூறினார்.

பூஜையின்போது நீத்தா மயக்கத்திலாழ்ந்துவிட்டாள். சுவாமிஜி தன் கூட்டாளியிடம் அவளைப் படுக்கையறைக்குத் தூக்கிக்கொண்டு செல்லும்படிக் கூறினார்.

இச்சை நிரம்பிய மனதோடு, கண்கள் வேட்கையில் பளபளக்க சுவாமீஜி படுக்கையறைக்குள் நுழைந்தார். நீத்தாவின் ஆடைகளைக் களைய முற்பட்டார்;

ராஜீவ் மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்து நீத்தாவின் கண்களில் தண்ணீரைத் தெளித்தான்;

உடனடியாக மயக்கம் கலைந்து எழுந்துகொண்ட நீத்தா, அலங்கோலமான நிலையில் தான் கிடப்பதைப் பார்த்து அந்த சுவாமீஜியை வேகமாக அப்பால் தள்ளிவிட்டாள்.( அருவமாயிருந்த ராஜீவ்வும் உதவினான்) . பின், அந்த அறையிலிருந்து ஒரே ஓட்டமாய் வெளியே ஓடினாள். ராஜீவும் அவளைப் பின்தொடர்ந்தான்.


சுவாமீஜி இதை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப்போய், ஏறத்தாழ அரையாடையில் இருந்தவர் தன்னுடைய கூட்டாளியைக் கூப்பிட்டு அவளைத் தடுத்து நிறுத்தும்படி கூறினார்;

ஆனால் நீத்தா அவருடைய பிடியிலிருந்து தப்பித்துவிட்டாள்.

சட்டத்தின் நீள்கரம் வெளியே காத்துக்கொண்டிருந்தது. சுவாமீஜியைப் பிடித்துக்கொண்டது. “நீயும் உன்னுடைய கூட்டாளியும் கைதுசெய்யப்படுகிறீர்கள்!” என்று இன்ஸ்பெக்டர் சுவாமீஜியிடம் கூறினார். “உங்களுடைய சமூக விரோதச் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு சரியான நேரத்தில் தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப்பட்டதால்தான் எங்களால் வர முடிந்தது.”

பின்னர், ராஜீவுக்கு மேலுலகிலிருந்து ஒரு செய்தி வந்தது: “பாராட்டுகள்; நீ பூமியில் நல்ல காரியம் செய்தபடியால் இப்பொழுது நீ சொர்க்கத்திற்கு வரவேற்கப்படுகிறாய்!




ஜி.வெங்கடேஷ்



.