*இது நகைச்சுவையாக எழுதப்பட்டது.
யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் அல்ல.
வள... வள... வம்பள....!
லக்ஷ்மி: ஹலோ சுனிதா,எப்படியிருக்கே? நல்லாயிருக்கியா? வேலையெல்லாம் முடிஞ்சாச்சா? கொஞ்சம் வம்பளக்க நேரமிருக்கா?
சுனிதா: ஹலோ லஷ்மி, பேசலாம்! பேசலாம்! வள வள வள.!நேத்து நான் ஸ்வேதாவைப் பாத் தேன். ’ஷாப்பிங் மால்’ ல ஒரு புதுப் புடவை கட்டிக்கிட்டிருந்தா.... பாக்கவே சகிக்கலை.. அவகிட்டயே சொல்லிடணு ம்னு ஆசையா இருந் துச்சு...ஆனா, அவ புருஷங்காரன் பக்கத்திலே இருந்தான்!
லக்ஷ்மி: நீ சொல்றது சரிதான். புருஷங்காரங்க பக்கத்திலே இருக்கற ப்போ நம்ம வெறும் புன் னகை செய்ய மட்டும் தான் முடியும்.... வள.. .. வள.... வள...
சுனிதா: ப்ரகாஷ் போயாச்சா? வள... வள... வள...
சுனிதா: ப்ரகாஷ் போயாச்சா? வள... வள... வள...
சுனிதா: அவரும் இன்னும் போகலை.... கடுகடு ன்னு இருக்கார்.... ஆபீஸ் பிரச்னைகள்..வள.. வள.... வள....
லக்ஷ்மி: இன்னும் கொஞ்சம் வம்பாக்கலாமா? நேர மிருக்கா?
சுனிதா: இருக்கு! இருக்கு ! மேலே சொல்லு!
சுனிதா: என்னுடைய வீட்டுக்கு நேர்கீழே உள்ள ஃப்ளாட்டில் இருக்கும் காவேரியை உனக்குத் தெரியும்தானே? அவள் ஒரு புதுப் பையனுடன் ஊர்சுற்றிக்கொண்டிருப்பதைப் பாத்தேன் தெரி யுமா! தெருவில் அவர்களைப் பார்த்துவிட்டேன். “ஆண்ட்டி, இது என்னுடைய ஒன்றுவிட்ட தம்பி ஹேமந்த் என்கிறாள்!எப்படிப் புளுகுகிறாள் பார்த் தாயா!
சுனிதா: நான் உன்னிடம் சொன்னேனோ - எங் கள் வீட்டுக்கு இரண்டு மாடிகள் கீழேயிருக்கி றாளே மிஸஸ் தத், அவள் நல்லவள் தான்... அவள் வீட்டுக்கு ஒரு அழகான ஆசாமி அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறான்! அதைப் பற்றி அவளிடம் கேட்டபோது, உடம்பு வலிக்கு சிகிச்சை பெற்றுவருவதாகச் சொல்கிறாள்...! Dal me kuch kala hai!! வள....வள.. ..வள...
லக்ஷ்மி: இந்த மியூஸிக் ஸீசன்ல யாருடைய கச்சேரிக்கெல்லாம் போகப்போறே? வள.... வள....வள....?
சுனிதா: நித்யஸ்ரீயின் கச்சேரிக்குப் போகலாம் னு நினைச்சுக்கிட்டி ருக்கேன்..வள.. .வள... வள.. போன டிசம்பர்ல அவளுடைய கச் சேரியைக் கேட்க முடியாமல் போய்விட்டது.
லக்ஷ்மி: ஓஹோ! நீயும் அவளுடைய ரசிகையா! வள....வள.. ..வள.... எனக்கு அருணா சாய் ராம் தான்!
சுனிதா: அருணாவா! நித்யஸ்ரீ அளவுக்கு அவளால் தமிழையும் சரி, தெலுங்கையும் சரி, சரியா உச்சரிக்கவே தெரியாது!
லக்ஷ்மி:ஆனா, நித்யாவால் ‘அபங்க்’ பாட முடியுமா, சொல் பாக்க லாம்! தவிர, அருணாவின் உடையலங்காரங்கள் எவ்வளவோ நேர்த் தியாக இருக்கிறது... வள.... வள.... வள....
சுனிதா: கச்சேரிக்குப் போவதே அவங்களுடைய புடவை, நகைக ளைப் பார்ப்பதற்குத் தான் என்று சொல்லிவிடுவாயோ! வள... வள.... வள...
லக்ஷ்மி: வள....வள....வள....
சுனிதா: வள.... வள....வள...
குமார்: சுனிதா, எனக்கு ஆபீசுக்கு நேரமாகிறது; தயவுசெய்து சீக்கிரம் டிஃபன் தா!
சுனிதா:[போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் டிராஃபிக் போலீஸ்காரர்போல் சைகை செய்து காத்திருக்கும்படி தெரிவித்த வாறே] பாடகர்களுக்காக நாம் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம் லக்ஷ்மி.... வள...வள...வள...
லக்ஷ்மி: ஸ்போர்ட்ஸ்காரங்களும் நடிகைகளும் ஏன் எப்பவும் ஒருத் தரோடொருத்தர் காதல் கத்திரிக்காய்னு மாட்டிக்கிறாங்க?
சுனிதா: லஷ்மி, ஏன் தெரியுமா? அப்பத்தானே ஒருத்தர் இன்னொருத் தரை அண்டிப் பிழைக்கலாம்! தவிர, இரண்டு துறைகளிலுமே குறு கிய காலம் தான் நிலைக்க முடியும் என்பதால் இருவரில் யாரேனும் ஒருத்தர்க்கு மார்க்கெட் சரிந்துவிட்டால், மற்றவர் அவரை ஆதரிக்க முடியும்.
லக்ஷ்மி: நீ சொல்வதைக் கேட்டு எனக்கு ஒரு சின்ன டி.வி ஸ்டா ரைப் பத்தி ஞாபகம் வருது. எங்கள் வீட்டுக்கு இரண்டொரு வீடுகள் தள்ளித்தான் இருக்கா அவ. பார்ப்பதற்கு சாக்ஷி போலவே இருப் பாள், எப்படியோ ஒரு பெரிய அதிகாரியைப் பிடித்துக்கொண்டு விட் டாள்;(பார்க்க கொஞ்சமேகொஞ்சம் ’தோனி’யைப் போல் இருப்பான்] கடவுளே, அவர்கள் கடை கண்ணிக்குப் போனால், அவள் அவனை எப்படி ஆட்டிவைப்பாள் தெரியுமா? பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.
சுனிதா: வள...வள....வள....
லக்ஷ்மி: வள....வள....வள....
ப்ரகாஷ்: லஷ்மீ, குழந்தை அழுகிறது.
லஷ்மி: [ப்ரகாஷிடம் சைகையில்] ஜட்டியை மாற்றுங்கள்...
ப்ரகாஷ்: நான் ஜட்டியை மாற்றவேண்டுமா? சரி, சரி , மாற்றிவிடுகி றேன்... ஆனால் ,நீ உன்னுடைய வம்பளப்பை எப்போதுதான் நிறுத் தப்போகிறாய்?
லக்ஷ்மி: ஹா ஹா! சினிமாவைப் பொறுத்தவரை, இந்தியக் கதா நாயகர்கள் எல்லாமே வயதானவர்களாய் தோற்றமளிக்கும்போதுதான் கொஞ்சம் நன்றாக நடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று தோன்றுகிறது!
சுனிதா: இதில் நீ சொல்வதை நானும் ஒப்புக்கொள்கிறேன்! இளை ஞர்களாக இருக்கும்போது தங்களுடைய தோற்றத்தை வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்துவிடுகிறார்கள்; ஆனால், வயதாகும் போது, நன்றாக நடித்தே தீரவேண்டியிருக்கிறது. இல்லையென்றால் மார்க்கெட் காலி! ஆனால், வள... ரஜினியுடையதைத் தவிர்த்து மற்றவர்களின் தலைமுடி இயற்கையா, செயற்கையா?-
குமார்: சுனிதா, இப்ப வம்பளப்பதை நிறுத்தப்போகிறாயா, இல் லையா?மாட்டாயென்றால் உன்னுடைய மௌபைலை எடுத்து ஜன்னல் வழியாக வீசியெறிந்துவிடுவேன்!
சுனிதா: உங்கிட்டே அப்புறம் பேசறேன் லஷ்மி; குமாருக்கு எக்கச் சக்கக் கோபம் போல் தோன்றுகிறது! [குமாரிடம்] இந்த வீட்டில் எனக்காக பத்து நிமிடங்கள் கூடக் கிடைக்காது போலிருக்கிறது குமார். அப்பப்ப நீங்களே சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்க முடியும் தானே! எல்லாமே தயாராக மேஜை மேல் வைத்திருக்கிறேனே!
குமார்: நான் ஆபீஸுக்குப் போன பிறகு தினமும் உனக்கு வம்பளக்க எட்டு மணி நேரத்துக்கு மேலே இருக்கே
சுனிதா: அது சரிதான்! இந்த வீட்டில் எல்லாமே வானிலிருந்து வந்து கொட்டுகிறது என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது!
குமார்: அடுத்த முறை நான் வெளிநாடு செல்லும்போது எனக்கு ஒரு ரோபோ பணியாளை வாங்கிக்கொள்ளப் போகிறேன். அப்படிச் செய் தால் உன்னை நம்பியிருக்கவேண்டியதில்லை!
சுனிதா: அந்த சமயத்தில் எனக்கு இன்னொரு மௌபைல் ஃபோன் வாங்கிக்கொண்டுவர மறந்துவிடாதீர்கள். கோபத்தில் நீங்கள் ஒன்றை வீசியெறீந்தால் எனக்குஅவசரத்துக்கு இன்னொன்னு இருக்குமே!
இதற்கிடையில், லஷ்மியின் வீட்டில் _
லக்ஷ்மி : ப்ரகாஷ், நான் இல்லையென்றால் குழந்தைக்கு ஜட்டி கூட மாற்றமுடியாதென்றா சொல்கிறீர்கள்?
ப்ரகாஷ்: அடுத்து குழந்தையின் ஜட்டியைத் துவைத்துப்போடுங்கள் என்று சொல்வாய்!
லக்ஷ்மி: அப்படி நீங்கள் செய்வீர்களானால் , அதில் தவறொன்றுமில்லை! நீங்களும் குழந்தையின் பெற்றோர் தான், நினைவிருக்கிறதல்லவா!
ப்ரகாஷ்: அடுத்து, குழந்தை ஆய் போனால் அதைக் கழுவிவிடச் சொல்வாயோ என் னவோ!
லக்ஷ்மி : ஏன் கூடாது?
ப்ரகாஷ்: இப்படியே போனால், உனக்கும் செய்யச் சொல்வாய் போலும்!
லக்ஷ்மி: ப்ரகாஷ், நீங்கள் சொல்வதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? எனக்கு வயதாகி, உடம்புக்கு முடியாமல் போனால் நீங்கள் எனக்கு உதவியாக இருக்கமாட்டீர்கள், அப்படித்தானே! இது திருமணத்தின் போது நீங்கள் செய்துகொடுத்த சத்தியங்களுக்கே எதிரானது, தெரியு மில்லையா!
ப்ரகாஷ்: கவலைப்படாதே,அந்த சமயத்தில் நான் உயிரோடு இருக் கப்போவதில்லை!
லக்ஷ்மி: ப்ரகாஷ், என்ன இது? நீங்கள் இங்கே ஒரு கொடுங்கோல் மன்னர் போல் நடந்து கொள்கிறீர்கள்! என்னுடைய சினேகிதியோடு இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினேன், அதற்குப் போய்...
ப்ரகாஷ: 2 நிமிடங்களா! பத்துநிமிடங்களுக்குக் குறையாமல் இருக் கும் என்று நான் எண்ணுகிறேன்!
லக்ஷ்மி: ஹா ஹா _ நீங்கள் அலுவலகத்திலும், ’க்ளப்’களிலும் எத் தனை நேரம் வம்பளக்கிறீங்க, என்னவெல்லாம் வம்பளக்கிறீங்கன்னு தெரியாதா என்ன?
ப்ரகாஷ்: ஆனால், ஆதாரமில்லாத, சரிபார்க்கப்படாத விஷயங்க ளைப் பற்றி இப்படி பேசிக்கொண்டிருக்க மாட்டோம். இன்னொரு விஷயம், எப்பப்பாத்தாலும் ஸெல் போனை காதோடு அப்படி ஒட்ட வைத்துக்கொண்டிருக்காதே, உன்னுடைய தலையில் கான்ஸர் வரும் ஆபத்தை உனக்கு நீயே உண்டாக்கிக்கொள்ளாதே! இதை உன்னுடைய சினேகிதிகளுக்கும் சொல்லிவை.அந்த பயமாவது இந்த வீட்டில் உங்க ளுடைய வள வள வம்பளப்பைக் குறைத்து ஓரளவேனும் அமைதி யைக் கொண்டுவரும்!
கணவர்கள் வேலைக்குச் சென்றுவிட்ட பிறகு _
லக்ஷ்மி: சுனிதா, ஃப்ரீயா இருக்கயா? கொஞ்ச நேரம் வம்பளக்க லாமா?
சுனிதா: பேசலாம் லக்ஷ்மீ, எனக்குக் குமார் மேல ரொம்பக் கோபம் தெரியுமா! தன்னைப் பத்தி அவர் என்ன நெனச்சிக்கிட்டிருக்கார், தெரி யலை! நான் ஏதோ அவருக்கு வேலைக்காரி போலேயும் அவர் என்ன சொன்னாலும் நான் உடனடியா அதுக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கணும் னும் நினைக்கிறார்!
லக்ஷ்மி: இங்கே ப்ரகாஷும் அதே கதைதான். இப்பத் தான் குழந்தை க்கு ஜட்டி மாற்றிப்போடச் சொன்னேன். அதுக்கு குய்யோ முறையோ ன்னு கத்தறார்!சில சமயம் இந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு இப்பிடி மாட்டிக்கிட்டிருக்கக்கூடாதுன்னு தோணுது! ஸெல் ஃபோனை அதிக நேரம் தொடர்ச்சியா உபயோகப்படுத்தக்கூடாதுன்னு எனக்கு சொல்றார் இவர். நமக்கு மூளையில கான்ஸர் வந்துடுமாம்!
சுனிதா: குமாரைப் பத்தி கூட நான் இதே மாதிரி தான் நினைச்சிக்கிட் டிருக்கேன் லக்ஷ்மீ.... அதை விடு, லக்ஷ்மீ உனக்கு விஷயம் தெரி யுமா! இன்னைக்கு இன்னொரு அழகான ஆள் மிஸஸ் ’தத்’துக்கு சிகிச்சையளிப்பதற்காக அவள் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்ததைப் பாத்தேன்! சரியான ஃப்ளர்ட் அவ!
லக்ஷ்மி: இங்கே, அந்த சாக்ஷி தன்னோட உறவைத் திரும்பவும் முறித்துக்கொண்டாகிவிட்டது; ஹலோ சுனிதா... சுனிதா.... ஹலோ...! ஹலோ....!”
பின்னர் _
சுனிதா: [லாண்ட் லைனில்] என்னுடைய ஸெல் ஃபோன் ‘டெட்’ ஆகிவிட்டது! ‘ரீசார்ஜ்’ செய்தாக வேண்டும். நேத்துத்தான் முழுசா ரீசார்ஜ் செஞ்சேன். சார்ஜ் ஆன பிறகு மீண்டும் உனக்குக் ‘கால்’ செய்கிறேன், சரியா!”
லக்ஷ்மி: ஆனால், இப்போதே உன்னிடம் வம்பளப்பதற்கு என்னிடம் ஒரு பெரிய சுவாரசியமான விஷயம் இருக்கே!
சுனிதா: அப்புறமா பேசலாம், லக்ஷ்மீ... குமார் இப்பத்தான் வீடுவந்து சேர்ந்திருக்கார். நான் ‘லாண்ட் லைனில்’ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவர் மூஞ்சிலே எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது!(சன்ன மான குரலில் லக்ஷ்மியிடம் ) லாண்ட் லைனைத் தொடவே கூடாது என்று கூறியிருக்கிறார். அதைத் தன்னுடைய தனிப்பட்ட உபயோகத் துக்கு மட்டுமே என்று வைத்துக்கொண்டிருக்கிறார்!!
ஜி.வெங்கடேஷ்
No comments:
Post a Comment