நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் கொண்ட
முரடன்!
இந்தியா 1947இல் சுதந்திர நாடாகியது.
அந்த சமயத்தில், இந்தியாவில் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் தங்களுடைய தொழில்களைத்தொடர் ந்து இந்தியாவிலேயே செய்துவருவதா அல்லது அதையெல்லாம் விற்று விட்டு தாய்நாட்டிற்கே திரும்பிப்போய்விடுவதா என்று முடிவெடுத்தாக வேண்டியிருந்தது.
திரு.க்ளெமெண்ட் பெர்க்கின்ஸ் கூட இந்த நிலைமையில் தான் இருந்தார் என்பதால் அவருக்கு ஒரே கவலையாயிருந்தது.
அந்த சமயத்தில், இந்தியாவில் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் தங்களுடைய தொழில்களைத்தொடர் ந்து இந்தியாவிலேயே செய்துவருவதா அல்லது அதையெல்லாம் விற்று விட்டு தாய்நாட்டிற்கே திரும்பிப்போய்விடுவதா என்று முடிவெடுத்தாக வேண்டியிருந்தது.
திரு.க்ளெமெண்ட் பெர்க்கின்ஸ் கூட இந்த நிலைமையில் தான் இருந்தார் என்பதால் அவருக்கு ஒரே கவலையாயிருந்தது.
அவருடைய தயாரிப்புத் தொழிலை விற்க அவர் கோரிய விலை இந்திய வர்த்தகர்களுக்கு மிகவும் அதிகமாகப் பட்டது. எனவே, பெர்க்கின்ஸ் தன்னுடைய தொழிலை இந்தியாவிலேயே தொடர்ந்து செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.
சில நாட்கள் விடுமுறையில் இங்கிலாந்து சென்றிருந்தார் அவர்.
தன்னுடைய பழைய நண்பன் ஸ்டீவ் ஸ்மித்-ஐப் பார்ப்பதற்காக அவர் ப்ராட்ஃபோர்ட்[Bradford] சென்றிருந்தார்.
ஸ்மித் ஒரு துணி தயாரிப்புத் தொழில் செய்துவந்தார். துணி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழில் பிரிவு அவருடையது. பெர்க்கின்ஸ் இந்தியாவில் செய்துகொண்டிருந்த தொழிலைப் போன்றது.
பெர்க்கின்ஸ் ஸ்மித்தை அவருடைய தொழிற்சாலையில் சந்தித்தார்.
" ஹாய் க்ளெம்”, என்றார் ஸ்மித். “என்ன ஒரே கவலையாக இருக்கி றாய், இந்தியன் பொரியலையெல்லாம் இனி சாப்பிட முடியாதே என்று ஏக்கமாக இருக்கிறதா என்ன?”
"அதெல்லாம் இல்லை”, என்றார் பெர்க்கின்ஸ். “என்னுடையது அதை விடப் பெரிய கவலை.”
அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது பெர்க்கின்ஸ் ஒரு கட்டை குட்டையான மனிதன் சக ஊழியர் ஒருவரைப் பளாரென்றுஅறைவதைப் பார்த்தார். ஓரிரு முறை ஓங்கி அறைந்துகொண்டேஅறைந்துகொண்டே, “யேய், "f*** you, என்ன செய்துவிட்டாய் நீ?” என்று கூச்சலிட்டான் அந்த மனிதன்.
"எதற்காக அப்படி அடிக்கிறான் ஸ்மித்?” என்று கேட்டார் பெர்க்கின்ஸ்;
"தெரியவில்லை, அறைவாங்கியவன் ஏதாவது தப்புசெய்திருக்க வேண் டும்”, என்றார் ஸ்மித்.
"”எனக்கு அந்த மனிதனின் தோற்றம் பிடித்திருக்கிறது. அவன் இங்கே என்ன வேலை செய்கிறான் ஸ்மித்?”என்று கேட்டார் பெர்க்கின்ஸ்;
"அந்த மனிதன் இங்கே ஃபோர்மானாக வேலைசெய்கிறான். இந்தத் தொழிற்சாலையின் பொறுப்பாளனாக அவனை நான் நியமித்திருக் கிறேன். உண்மையில் அவர் ஒரு ‘வெல்டர்’. தன்னுடைய வேலையில் மிகுந்த ஆர்வத்தோடு செயலாற்றுவான் அவன். சமயங்களில் அவனு டைய ஈடுபாடு அளவுகடந்து போய்விடும். அந்த மாதிரி சமயங்களில் நான் இடைபுகுந்து கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ளும்படி கூறு வேன்."
"அட!” என்றார் பெர்க்கின்ஸ். “இந்த மாதிரி ஆசாமி என்னுடன் இந்தியா வில் இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்படி மட்டும் இருந் தால் என்னுடைய பிரச்னை ஓரளவுக்குத் தீர்ந்துவிடும்”...
"இதில் உனக்கு உதவிசெய்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், நீ தான் அவனிடம் பேசிப் பார்க்க வேண்டும். அவன் உன்னோடு வரச் சம்மதிக்கிறானா என்று கேட்டுப்பார்க்க வேண்டும். அவனுடைய பெயர் Brad”, என்று கூறிய ஸ்மித் சன்னமான குரலில் “முரட்டு மனிதன்”, என்றார்.
"அவனை இங்கே கூப்பிடேன். நம் அவனிடம் கொஞ்சம் பேசலாம்”, என் றார் பெர்க்கின்ஸ்.
“ஹேய் இங்கே வா; பெர்க்கின்ஸ் உன்னோடு ஏதோ பேசவேண்டும் என் கிறார்.” என்று அழைத்தார் ஸ்மித்.
"ஹாய் நண்பரே”, என்றபடியே வந்தான் Brad,"
" இதுதான் பெர்க்கின்ஸ். அவர் உன்னோடு ஏதோ பேச வேண்டுமாம்”, என்றார் ஸ்மித்.
“ஹலோ Brad, நீ எப்போதாவது இந்தியாவுக்கு வந்ததுண்டா?” என்று கேட்டார் பெர்க்கின்ஸ்.
"இல்லை, ஆனால் அங்கே பெண்களெல்லாம் கருநிறத்தில் அழகாக இருப்பார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கே தட்பவெப்ப நிலையும் சரி, உணவும் சரி ஒரே சூடாக, இருக்குமல்லவா?” என்று விசாரித்தான் Brad.
"ஆமாம், ஆமாம்”, என்றார் பெர்க்கின்ஸ்., “ஆனால், உனக்கு அங்கே வேலை பார்க்க விருப்பமா? இங்கே நீ பார்த்துக்கொண்டிருக்கும் வேலையைப் போலவே அங்கே வேலைபார்க்க உனக்கு விருப்பமா?”
"தாராளமாகப் பார்க்கலாமே”, என்றான் Brad, "ஆனால், எனக்கு எவ்வ ளவு சம்பளம் கிடைக்கும்?”
"ஹோ, அதைப் பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு சொந்தமாய் ஒரு வீடும், காரும் ட்ரைவரும் தரப்படும்”, என்றார் பெர்க்கின்ஸ்.
* * * * * *
ப்ராட் யார்ட்லி(Brad Yardley) பெர்க்கின்ஸ் அண்ட் பாட்டெர்ஸன் தொழிற் சாலையில் அதன் பணிப்பிரிவு மேலாளராகப் பதவியேற்றுக் கொண் டான்.
முதல் சில நாட்கள், அங்கிருந்த ஊழியர்களை உன்னிப்பாக கவனித்து வந்தான்; அவர்கள் பணியில் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என் றும், வேலையில் மெதுவாகச் செயல்படுவதாகவும் அவனுக்குத் தோன்றி யது;
அங்கேயிருந்த ஊழியர்கள் தினமும் தாமதமாக வேலையைத் தொடங்கி அலுவலக நேரம் முடிவதற்கு முன்பாகவே பணிசெய்வதை நிறுத்திவிடு வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
தொழிற்சாலையில் இரண்டு ஷிப்டுகளில் ஊழியர்கள் வேலைபார்த்து வந்தார்கள். இரவுப்பணியில் உற்பத்தி பகல்நேரத்தை விட குறைவாக இருந்தது.
இது ஏன் என்று நிறைய யோசித்தான் Brad. முன்னறிவிப்பின்றி இரவில் தொழிற்சாலைக்குப் போய்ப்பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான்.
அப்படிச் சென்றவன் நேரே கழிப்பறை இருந்த பகுதிக்கும், ஓய்வறைக் கும் சென்று பார்த்தான். அங்கே சில ஊழியர்கள் பணிநேரத்தில் சாவகாச மாகப் புகைபிடித்துக்கொண்டிருப்பதையும், சீட்டு விளையாடிக்கொண் டிருப்பதையும் கண்டான்.
அவன் நுழைந்தவுடன், அந்த ஊழியர்கள் உடனைட்யாக அங்கிருந்து எழுந்துகொண்டு தங்கள் வேலைக்குத் திரும்பினார்கள்;
"F*** you, இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே,” என்று கேட்டு அந்த ஊழியர்களை அறைந்தான்.
அடுத்த நாள், 'பெர்ஸானல் மானேஜர் அவனுடைய அறைக்கு வேகமாக வந்தார்:
"என்ன காரியம் செய்துவிட்டீர்கள்?”என்று பதறிக்கொண்டு கேட்டார். "ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார் கள்.”
"F*** you,” என்று பதிலளித்தான் Brad; "நீங்கள் தான் தவறான ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறீர்கள். எனவே, இந்த இக்கட்டான நிலை மையை நீங்கள் தான் சமாளிக்கவேண்டும்.”
ஊழியர்களிடம் நீண்டநேரம் பேசி, கெஞ்சி அவர்களை சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. அதன் பிறகே அவர்கள் மீண்டும் வேலையைத் தொட ங்கினார்கள்.
பெர்க்கின்ஸ் விஷயத்தைக் கேள்விப்பட்டதும், அவர் Brad செய்தது சரியே என்று அவன் சார்பாய் வாதிட்டார். அதே சமயம், இந்திய ஊழியர்களைக் கையாளும்போது இன்னும் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டி யது அவசியம் என்று அவனுக்கு எடுத்துக்கூறினார்.
இரவுநேர உற்பத்தி பன்மடங்காகப் பெருகியது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை!
* * * * * *
அந்த நிறுவனம் அரசாங்கத்திற்காக சில பல உற்பத்திவேலைகளைச் செய்துவந்தது. இதற்கென சுயமாய் இயங்கும் அமைப்பு ஒன்றிலிருந்து உரிய தரச் சான்றிதழை அந்த வேலைக்கான அனுமதிக்காகப் பெறவேண்டியது அவசியமாக இருந்தது.
இந்த தரச் சான்றிதழைப் பெறுவதற்காக பெர்க்கின்ஸின் நிறுவனம் அந்தத் தரச் சான்றிதழைத் தரவேண்டிய மேற்பார்வை அதிகாரிக்கு, அவர் சான்றிதழையும், அனுமதியையும் தந்துவிட்ட பிறகு ரொக்கப்பணம் தரு வது வாடிக்கையாக இருந்தது _ அதாவது, Brad அங்கே பணியில் சேருவ தற்கு முன்புவரை.
இந்த விஷயம் Brad க்குத் தெரியவந்ததும்,அவர் அந்த மேற்பார்வை அதி காரிக்குரிய காசோலையில் கையொப்பமிட மறுத்து அதைக் கிழித்தெறிந் தான்.
லஞ்சம் கொடுப்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்பது Bradன் வாதம்.
இது அந்த தரச் சான்றிதழ் வழங்கவேண்டிய மேற்பார்வை அதிகாரியை மிகவும் கோபப்படுத்திவிட்டது.
ஆனால், Brad தன் முடிவில் தீர்மானகாக் இருந்தான். தங்கள் நிறுவனம் செய்துமுடிக்கும் அடுத்த வேலைக்கு அல்ப காரணங்களுக்காக அந்த மேற்பார்வை அதிகாரி தரச் சான்றிதழ் வழங்க மறுத்தால் தங்கள் நிறு வனம் உதவி கொரி நேரடியாகவே அரசாங்கத்தை அணுகிவிட வேண்டும் என்பது அவனுடைய முடிவு.
இதுவும் பெர்க்கின்ஸின் பாராட்டை Bradக்கு பெற்றுத் தந்தது!
இதற்குள் நிறுவனத்திற்குள் Brad தனக்கு நிறைய எதிரிகளை சம்பாதித் துக்கொண்டிருந்தான்!
பிரச்னைகளைத் தீர்ப்பதில் அவன் கையாண்ட புதுமையான, துணிச்ச லான அணுகுமுறைகளை நிறைய பேர் பாராட்டிய போதும். வேறு பலர் அவனுடைய அணுகுமுறைகள், செயல்பாடுகளில் நிறவெறி மனப்போ க்கு வெளிப்படுவதாகக் கருதினார்கள்.
ஆனால், பின்வரும் நிகழ்வில் இந்த விஷயம் உச்சகட்டத்தை எட்டி விட் டது.
திரு.தோர்ஜி (நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்) தன்னுடைய மகன் ஆஷிஷ்-ஐ Bradஇன் கீழ் வேலை கற்றுக்கொள்ளவென அந்த நிறு வனத்தின் தொழிற்சாலைக்கு அனுப்பிவைத்தார். .
இந்த ஆஷிஷுக்கு, நிறுவனத்தின் இயக்குனர் பிள்ளை என்ற ‘பந்தா’வும், அலட்டலும், திமிரும் ரொம்பவே உண்டு. எனவே, தன்னுடைய வேலையை அவன் அலட்சியமாக எண்ணினான். அந்த நிறுவனத்தில் தனக்கு எப்படியும் வேலையும் பெரிய பதவியும் உண்டு என்பது அவன் எண்ணம். நேராக Bradஇன் அறைக்குள் நுழைந்து “நான் தான் ஆஷிஷ், தெரியுமா? திரு. தோர்ஜியின் பிள்ளை. நான் உங்களுக்கு எந்த விதத்தில் உதவவேண்டுமென்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான்.
அந்த இளைஞனின் ஆணவமும், அலட்சியமும் Bradஐ திகைத்துப் போகச் செய்தன.
அந்தத் திமிர்பிடித்த இளைஞனைப் பார்த்து, “வெளியே போய் காத்திருங் கள். நான் கூப்பிடும்போது வாருங்கள்.” என்றான்.
சிறிது நேரம் கழித்து அவனைக் கூப்பிட்டனுப்பினான். அந்த இளைஞனி டம் சில பல கேள்விகள் கேட்டான். பிறகு, “மன்னிக்கவும், நீங்கள் இங்கே தேவைப்பட மாட்டீர்கள்?” என்று தெரிவித்துவிட்டான்."
ஆஷிஷ் கோபத்தில் கொந்தளித்தான். “என்னுடைய அப்பாவிடம் உன்னைப் பற்றிப் புகார் சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கத்தினான்.
Brad, “"F*** off. இங்கிருந்து போய்விடு, இல்லாவிட்டால், உன்னை வெளியே தூக்கியெறியும்படி சொல்லவேண்டியிருக்கும்”, என்று பதிலளித்தான்.
இந்த நிகழ்வு நிறுவனத்தில் பெரிய களேபரத்தை ஏற்படுத்தியது.
திரு. தோர்ஜியும் மற்ற இந்திய இயக்குனர்களும் நிறுவனத்தை விட்டு விலகிவிடுவதாக அச்சுறுத்தினார்கள்.
ஆங்கிலேய இயக்குனர் பெர்க்கின்ஸை அவசரமாகத் தொலைபேசியில் அழைத்தார். “க்ளெம், உடனடியாக ஏதாவது முடிவெடுத்து அதை செய் தாக வேண்டும். நீங்கள் Brad Yardley ஐத் திரும்ப அழைத்துக்கொள்ள வில்லையானால் நிறுவனத்தை விட்டு விலகிவிடுவதாக பயமுறுத்து கிறார்கள்.
"பயப்படவேண்டாம் ஜாக்,” என்றார் பெர்க்கின்ஸ். “நாளைக் காலை நானே அவர்களை நேரடியாகப் பார்த்துப் பேசுகிறேன்.
சொன்னபடியே, பெர்க்கின்ஸ் தோர்ஜியை நேரடியாக சந்தித்து, நிலை மையை சரிசெய்ய முயற்சித்தார்;
"Brad முரட்டுத்தனமாக நடந்துகொள்பவனாயிருக்கலாம், ஆனால், அவன், இதுவரை என்ன செய்திருந்தாலும் அதெல்லாம் நிறுவனத்தின் நலனுக்காகவே தான்.” என்று எடுத்துச் சொன்னார்.
ஆனால் தோர்ஜி அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. “எங்களு டைய கோரிக்கையில் எந்த மாற்றமுமில்லை,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். “Brad அல்லது நாங்கள் - யாராவது ஒருவர் தான் இங்கே இருக்க முடியும். நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்”.
அன்றிரவு பூராவும் யோசித்தபடியே இருந்தார் பெர்க்கின்ஸ்.
இறுதியில், Bradயை பலியிடத் தீர்மானித்தார்.
தன்னுடைய ஹோட்டலுக்கு வரும்படி Bradஐ அழைத்தார். “என்னை மன்னித்துவிடு Brad, நீ அந்த நிறுவனத்தை விட்டுப் போய்விட வேண்டி யதுதான். நிறுவனத்தின் இந்திய இயக்குனர்களுக்கு நீ நடந்துகொள்வது பிடிக்கவில்லை. உன் சார்பாய் அவர்களிடம் பேசிப் பார்த்தேன். ஆனால், அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்".
"அதனால் பரவாயில்லை நண்பரே”, என்றான் Brad, "ஆனால், நான் செய்வது சரி என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்போது நான் யாருக்காகவும் வளைந்துகொடுக்க மாட்டேன்.
* * * * * *
"ஹேய், முரடன் வந்துவிட்டான்!” என்று ஸ்மித் ஐப் பார்த்துக் கூவினார்! “என்னவாயிற்று முதலாளி ! இந்தியப் பொரியல் உனக்கு ஒத்துவரவில் லையா?”
"F*** you", என்றான் Brad, "சரி, நம்முடைய வேலையைப் பார்க்கலாம், வாருங்கள்"
ஜி.வெங்கடேஷ்
No comments:
Post a Comment