தேவி அருள் புரிவாய்!
நம் வீட்டில் வேலை செய்யும் பணியாளை[பணிப்பெண்ணைக் கையாள்வது மிகவும் சுலபம் என்றுதான் நாம் எலோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எழுத்தறிவில்லாதவர்கள், எதிர்த்துப் பேச மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
நம் வீட்டில் வேலை செய்யும் பணியாளை[பணிப்பெண்ணைக் கையாள்வது மிகவும் சுலபம் என்றுதான் நாம் எலோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எழுத்தறிவில்லாதவர்கள், எதிர்த்துப் பேச மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் வேலைக்கமர்த்திய பிறகுதான் அவர்களால் எத்தனை பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பது நமக்கு உறைக்கிறது.
ராமுவும் இதற்கு விதிவிலக்கல்ல; தீர்மானமான பிரம்மசாரி அவர். வயதா கிக்கொண்டே போவதும், வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதுமாக, அவ ருக்கு வீட்டில் உதவிக்கு ஆள் தேவைப்பட்டது.
தன்னுடைய தேவையை அக்கம்பக்கத்தில் உள்ள தெரிந்தவர்களிடம் கூறினார்.
அதன்பின், நீண்டகாலம் காத்திருக்கவேண்டிய அவசியமிருக்க வில்லை. துணியை சலவை செய்துகொண்டுவருபவர் வீட்டுவேலைக்காக ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டுவந்தார்.
“ஸார், இந்தப் பெண் இங்கே இந்தப் பகுதியில்தான் வேலைபார்த்து வரு கிறாள். உண்மையாக உழைப்பவள். இதற்கு நான் உத்தரவாதம்.” என்றார் அவர்.
“அப்படியானால் சரி” என்றார் ராமு. என்ன வேலை, எத்தனை சம்பளம் என்பதையெல்லாம் விளக்கமாகக் கூறினார். எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார். பின், “நீ நாளையிலிருந்து வந்து விடலாம்”, என்றார்.
தேவி(அதுதான் அந்தப் பணிப்பெண்ணின் பெயர்) முதல் சில மாதங்கள் உண்மையாக உழைத்தாள். விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை.
ராமுவின் வீட்டில் தன்னை உறுதியாக வேரூன்றிக்கொண்ட பிறகு, அவள் தன்னுடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்தத் தொடங்கினாள்.
வாரம் ஒருமுறையாவது வேலைக்கு வராமல் போக்குக்காட்டத் தொடங்கினாள்.
ஏன் என்று கேட்டால், அதற்குத் தயாராய் கைவசம் சில சாக்குபோக்குகளை வைத்துக்கொண்டிருந்தாள்.
’எங்க உறவுக்காரவுங்க இறந்துபோயிட்டாங்க’ அல்லது, ’வீட்டுக்கு மண்ணெண்ணெய் வாங்கவேண்டியிருந்தது, பெரிய க்யூவுல ரொம்ப நேரம் காத்திக்கிட்டிருக்கவேண்டியிருந்தது’ அல்லது’ ‘உடம்பே முடியலை’
மேலும், தினசரி வேலை செய்யும் நேரத்தையும் குறைத்துக்கொள்ளத் தொடங்கினாள்; ஆரம்ப நாட்களில் ஒரு மணி நேரம் உண்மையாக வேலை களைச் செய்துவந்தவள், இப்பொழுதெல்லாம் அதே வேலையை அரை குறை யாய் 40 நிமிடங்களில் முடித்துக்கொண்டு கிளம்பத் தொடங்கினாள்.
கொஞ்ச நாட்களாகவே அவளுடைய அசிரத்தையான, அரைகுறையான வேலை களைக் கவனித்துக்கொண்டிருந்த ராமு, இதை இனியும் இப்படியே விடக் கூடாது என்று தீர்மானித்தார்.
சம்பள நாள் அன்று, அவள் சரிவர வேலை செய்வதில்லை என்றும், இப்படியே போனால் தான் வேறு ஆளை வேலைக்கமர்த்திக்கொள்ள வேண்டி வரும் என்றும் கூறினார்.
”ஓ, அப்படியா, அதையும் தான் பாக்கலாம். வேற எவ இங்க வந்து என்னைவிட மேலா வேலை செய்வாள்னு பாக்கறேன்”,
அதாவது, அவள் மருத்துவமனையில் சில காலம் இருக்கவேண்டி வந்தாலொ ழிய!
அப்படியே தப்பித்தவறி அந்த மாதிரி நடந்துவிட்டாலும்கூட, ஆறுமாத சம்பளத்தை என் கையில் கொடுத்து அனுப்பத் தயாராக இருக்கவேண்டும். இந்தநாளில் நினைச்சா வேலை கெடக்குதா என்ன?
எனவே, இப்பொழுதெல்லாம் ராமு போகுமிடங்களிலெல்லாம் ஒரே கவலை யாகக் காட்சியளித்தார்.
’க்ளப்’போ, ’பார்க்’கோ எங்கு போனாலும் அவரை கவலை பாரமாக அழுத்திக் கொண்டிருந்தது.
அவருடைய நண்பர்களில் ஒருவரான ஷ்யாம் க்ளப்பில் அவரைப் பார்த்த போது கேட்டார். “ஏன் கவலையாயிருக்கிறாய் ராமு? ஏதாவது பிரச்னையா?”
ராமு அவரிடம் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் தேவியைப் பற்றிக் கூறினார்.
“இதுதான் விஷயமா? கவலையை விடு! என்னிடம் சொல்லிவிட்டாயல்லவா - இனி நான் பார்த்துக்கொள்கிறேன்.”
ஷ்யாம் மேடை நாடகக் கலைஞர். நன்றாக நடிப்பார் தன்னுடைய திட்டத்தை அவர் ராமுவிடம் கூறியபோது ராமுவுக்குக் கொஞ்சம் பயமாகவே இருந்தது.
“நீ பயப்படவேண்டிய அவசியமேயில்லை ராமு. ஓய்வாக ஓரமாக அமர்ந்துகொண்டு உன் வீட்டில் நடக்கப் போகும் தமாஷைப் பார்!
குறிப்பிட்ட நாளில், திட்டமிட்டபடி ஷ்யாம், ராமுவின் வீட்டுக்கு வந்து அவ ரோடு அமர்ந்தபடி அதையும் இதையும் பேசிக்கொண்டிருந்தார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில்(தன்னுடைய நாடகக் குழுவினரிட மிருந்து கடன் வாங்கி உடுத்திக்கொண்டிருந்தார்!) வந்திருந்தார். தேவியின் வருகைக்காய் காத்துக்கொண்டிருந்தார்.
ராமுவின் வீட்டு வாசலில் ஒரு ஜீப்( போலீஸ் ஜீப் போல்!) நின்றுகொண்டிருந் தது.
தேவி 30 நிமிடங்கள் தாமதமாக வந்துசேர்ந்தாள். வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியைப் பார்த்தபடியே உள்ளே சென்று பரபரவென்று வேலை செய்ய ஆரம்பித்தாள்.
அவள் கூடத்தைப் பெருக்கித் துடைத்துக்கொண்டிருக்கும்போது ஷ்யாம் தன்னுடைய ‘லத்தி’யால் காபி மேஜையில் தட்டினார், தன்னுடைய மீசையைக் கோபமாகத் திருகியபடியே தேவியை நோக்கிக் கோபமாக உறுமினார்: “யேய், இங்கே வா, என்ன இத்தனை ‘லேட்டா’க வருகிறாய்?”
”மன்னிச்சுக்கங்க ஐயா, கார்ப்பரேஷன் தண்ணீ வர நேரமாயிட்டுது!”
“வாயை மூடு! பொய் சொல்வதை நிறுத்து! எத்தனை மோசமாக வேலை செய்திருக்கிறாய் தெரியுமா? நான் தான் நேரிலேயே பார்க்கிறேனே! இன்னும் ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்கக் கூடாது நீ. கிளம்பு, கிளம்பு!”
“இல்லை ஐயா, நான் இங்கே நல்லாத்தான் வேலை செய்கிறேன் ஐயா!”
”அதுதான் இப்படி ரூமிலேயெல்லாம் சிலந்திவலை தொங்குதா!”
”பாத்திரமெல்லாம் அழுக்கா, பிசுபிசுப்பா இருக்கு, பாத்ரூமுக்குள்ளே ஒரே வழுக்கல்! என்ன இதெல்லாம்?”
“இல்லை ஐயா, அப்படியெல்லாம் இல்லை ஐயா!”
“எங்கேயிருக்கு உன் வீடு? உன்னுடைய முழுப்பெயர் என்னது?”
”சாரதா காலனியில் இருக்கேன் ஐயா, என் பேர் தேவி ராமசாமி ஐயா.”
ஷ்யாம் தன்னுடைய ஸெல் ஃபோனை எடுத்து ஒரு எண்ணை சுழற்றிப் பேசத் தொடங்கினார்:
”ஹலோ, யாரு முரளியா, நான் தான் ஷ்யாம் பேசறேன். இங்கே சாரதா காலனியிலே தேவி ராமசாமின்னு ஒரு அம்மா இருக்கு. ரொம்பப் பிரச்னை பண்ற பொம்புளை. கொஞ்சம் கவனி, என்ன?”
பின், தேவியை நோக்கித் திரும்பியவர், “அங்கே இருக்கிற அம்பு, செல்வம் ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு தெரியுமா?” என்றார்.
தேவி (அழுதபடி) ஐயோ வேணாம் ஸார், என்னை உள்ளே போட்டுடாதீங்க...”
அப்படீன்னா, என் நண்பரை ‘ப்ளாக் மெயில்’ பண்றதை இத்தோட நிறுத்திக்க. திரும்பவும் அப்படி ஏதாவது செஞ்சே, என்ன நடக்கும் தெரியுமா? தெரியும் தானே! பாத்து நடந்துக்க. போ, போய் வேலையைப் பாரு”
அந்தப் பெண்மணி அங்கிருந்து சென்றவுடன், ராமு ஷ்யாமிடம், “அட, என் னமா பிரமாதமா நடிச்சே!” என்றார். பின், “ஆனால், அன்பு, செல்வம் பத்தியெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”
”ரொம்ப சுலபம்! அவர்கள் மத்தியில் அன்பு, செல்வம் போன்றவை அதிக மாகப் புழங்கும் பெயர்கள்; எனவே, சொல்லிவைப்போமேன்னு சொல்லிப் பாத்தேன்!”
“முரளி கூட பேசினாயே, அது ?”
“அதுவா, அப்படி யாரிடமும் நான் பேசவே இல்லை. அந்தம்மா பயப்பட ணும்னு சும்மா, வெத்து ஃபோனைக் காதில் வச்சு பேசினேன்!”
”ரொம்ப தாங்க்ஸ் ஷ்யாம்” என்றார் ராமு.
“அட, இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லணுமா என்ன! ஏதாவது பிரச்னை வந்துச்சுன்னா உடனே கூப்பிடு. தயங்காதே, என்ன”
”மறுபடியும் இன்ஸ்பெக்டரா வருவியா!” என்று கேட்டார் ராமு.
“இல்லையில்லை, அப்ப என்ன பிரச்னையோ அதைப் பொறுத்து, அந்த சூழ் நிலைக்கேற்ப வருவேன்! என்றுபதிலளித்தார் ஷ்யாம்.
ஜி.வெங்கடேஷ்
வணக்கம், வீட்டு வேலை செய்பவர்களைப் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள் நம்மிடையே பிரபலம். ஆனால், நமக்காக உடலுழைப்பைத் தருபவர்களை நாம் சக-மனிதர்களாக நடத்துகிறோமா? எப்பொழுதுமே ஒருமையில் தான் அழைக்கிறோம். நமக்கு வாராந்தர விடுமுறை அடிப்படை உரிமை. ஆனால், வீட்டுவேலை செய்பவர்களுக்கு அதைத் தர மறுக்கிறோம். நமக்கு வருடாவருடம் சம்பள உயர்வு அடிப்படை உரிமை. ஆனால், நம் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு அது மறுக்கப்படும். ஆனால், அவர்கள் மட்டும் நமக்கு 200% விசுவாசமாக இருக்கவேண்டும். இந்த எதிர்பார்ப்பு எப்படி நியாயமாகும்? சிந்திப்போம்
ReplyDeleteலதா.ஆர்