LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Sunday, 21 December 2014

காதல் பத்தும் செய்யும்! (அல்லது) காதலுக்குப் பார்வை கிடையாதா?

காதல் பத்தும் செய்யும்!
(அல்லது)
காதலுக்குப் பார்வை கிடையாதா?

ஷாலினி வறுமையில் உழலும் மரபார்த்தமான இந்துக் குடும்பத்தில் பிறந்தவள்; ஆனால், அவளுக்குக் கிடைக்காத செல்வவளத்தை ஈடுசெய்யும் அளவு அழகும் அறிவும் அவளிடம் இருந்தது!   

அவளுடைய பெற்றோர் அவளை மேனிலைப் பள்ளிவரை மட்டுமே படிக்க வைக்க முடிந்தது; ஏதேனும் வேலை தேடிக்கொண்டு வயதான காலத்தில் தங்க ளைப் பார்த்துக்கொள்வதோடு தன்னுடைய திருமணத் திற்குத் தேவையான பணத்தையும் சேமிக்க முடிந்த அளவு வருமானம் ஈட்ட வேண்டும் என்று ஷாலினியின் பெற்றோர்கள் விரும்பினார்கள்.

சிறந்த மாணவியாக விளங்கிய ஷாலினி தன்னுடைய பள்ளி இறுதியாண்டுப் பரிட்சையில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றாள். பின், அவள் கணிப்பொறி சார்ந்த பயிற்சி பெற்றாள், புகழ் பெற்ற ஸாஃப்ட்வேர் நிறுவனங் களில் வேலைக்கு விண்ணப்பித்தாள்.

உடனடியாக அந்த நிறுவனங்கள் எல்லாமே அவளை வேலைக்கு அழைத்தன. அவற்றில் மிகச் சிறந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் வேலைக்குச் சேர்ந்தாள் ஷாலினி.

அங்குதான்  அவள் ஸ்டீஃபனை சந்தித்தாள்.

 அவன் ஒரு வசதியான, மரபார்த்தமான இந்துக் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த வன். ஷாலினி அளவு அறிவாளி கிடையாது, என்றாலும், அவனும் புத்திசாலி தான். தவிர, ஆணழகனாகப் படைக்கப்பட்டிருந்தான்!

அவனுடைய அழகும், கம்பீரமும், அற்புதமான இங்கிதம் தெரிந்த நயமான நடத்தையுமாக, பெண்கள் அவன்பால் இயல்பாகவே ஈர்க்கப்பட்டார்கள்.

ஷாலினி, ஸ்டீவென்ஸ்(அவனும் அப்போது தான் வேலையில் சேர்ந்திருந்தான்) ஆகிய இருவரிடமுமாக கால வரையறை கூடிய அளவில் முடிக்கப்பட வேண் டிய ’ப்ரோக்ராமிங்’ சம்பந்தப்பட்டமுக்கியமான வேலை ஒன்று தரப்பட்டது.

அந்த நிறுவனத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வேலை நீடிப்பதற்கும், நிறு வனத்தில் அவர்களுடைய எதிர்கால நன்மைகளும் இந்தப் பணியை அவர்கள் எவ்வளவு திறமையாக, சிறப்பாக செய்துமுடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர்களிருவரிடமும் நயமாக அறிவுறுத்தப்பட்டது.

நேரத்தை வீணாக்காமல் அவர்கள் உடனடியாக வேலையைத் தொடங்கினார்கள். எப்பொழுதுமே புதுத் துடப்பம் மிக நன்றாகவே பெருக்குமல்லவா! தரப்பட்ட பணியை தங்களுக்கிடையில் பகிர்ந்துகொண்டார்கள் அவர்களிருவரும். வாரா வாரம் தங்கள் பணி தொடர்பாகவும் , அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித் தும் மானேஜரிடம் அவர்கள் அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது; கலந்தா லோசனைக் கூட்டங்களில் இடம்பெறவேண்டி யிருந்தது.

கலந்தாலோசனைக் கூட்டங்களில், அவர்களுடைய மானேஜர் ஷாலினியின் வேலைத்திறன் குறித்து மிகவும் திருப்தியடைந்தார்.  ஸ்டீஃபன் இன்னும் நன்றாகப் பணியாற்றி இலக்கை எட்டவேண்டியது அவசியம் என்று அவனிடம் நயமாக அறிவுறுத்தினார்!  

அப்படியே செய்வதாக தலையசைத்தான் ஸ்டீஃபன்.

இப்பொழுது ஷாலினியால் சீக்கிரம் வீடு திரும்ப முடிந்தது. ஆனால், ஸ்டீஃபன் தன் வேலையை முடிக்க அலுவலகத்தில் அதிக நேரம் தங்கும்படியாகியது.

ஒருநாள் ஷாலினி ஸ்டீஃபனிடம் இவ்வாறு கூறினாள்: “நானும் கொஞ்ச நேரம் அதிகமாக இங்கேயே இருந்து உங்களுக்கு உதவி செய்கிறேன் ஸ்டீவ்”.

இல்லை, வேண்டாம் ஷாலினி. நீங்கள் சிரமப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று பதிலளித்தான் ஸ்டீஃபன்.  

பரவாயில்லை ஸ்டீவ், எனக்கு வீட்டில் ஒன்றும் இப்போது பெரிதாக வேலை யில்லை. நானும் உதவி செய்கிறேனே. தயவுசெய்து என்னை அனுமதியுங்கள்”, என்றாள்  ஷாலினி.

இவ்வாறு வேலையில் அவர்கள் இணைந்து பணியாற்றியது அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது;  

தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலான விருப்பு வெறுப்புகளையெல்லாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள்.  

"
உங்களுக்குத் தெரியுமா ஸ்டீவ், அடுத்த மாதம் பதினைந்தாம் தேதி என் பிறந்த நாள்,” என்றாள் ஷாலினி;  

அட!  எனக்கும் அன்று தான் பிறந்தநாள்!” என்று பதிலளித்தான் ஸ்டீஃபன்

"
ஆனால் ஸ்டீவ், என்னால் என்னுடைய பிறந்தநாளைப் பெரிய அளவில் கொண்டாட முடியாது”, என்று வருத்தமாய் முனகினாள் ஷாலினி. 

"
பதினைந்தாம் தேதி வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்”, என்றான் ஸ்டீஃபன்.

பின், ஷாலினியின் காதில் ரகசியமாய் எதையோ கூறினான்.

* * *  * * *

"
உன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒப்புக்கொண்டார்களா?” என்று கேட்டான் ஸ்டீஃபன்.    

"
உங்களுடைய அப்பாவும் அம்மாவும் என்ன சொன்னார்கள்? என்று கேட்டாள் ஷாலினி;

"
என்னுடைய அப்பாவும் அம்மாவும் கம்பெனியில் நமக்கு அவசர வேலை இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்”

”நாம் சினிமாத் தியேட்டரில் இருப்பதை அவர்கள் பார்த்து விடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.“ என்று கூறினாள்.

சினிமா பார்த்து முடித்த பிறகு இருவரும் ஒரு பெயர்பெற்ற சிற்றுண்டிசாலைக் குச் சாப்பிடுவதற்காகச் சென்றார்கள்.

ஒருவருக்கொருவர் ‘குட் நைட்’ சொல்லிப் பிரியவேண்டிய நேரம் வந்தது.

"
ஸ்டீவ், ஒரு விஷயம் தெரியுமா? நீங்கள் இன்னும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த் துக்கள் தெரிவிக்கவில்லை!”. 

"
ஹோ, மன்னித்துக்கொள், என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷாலினி!” என்றான் அவன்.  

"
அவ்வளவுதானா?” என்று கேட்டாள் ஷாலினி;

அப்படியென்றால் வேறென்ன நான் சொல்லவேண்டுமென்று எதிர்பார்க்கிறாய் ஷாலினி?” என்று கேட்டான் ஸ்டீஃபன்.
   
ஸ்டீஃபன், நீங்கள் சரியான ‘அனாரி’, அசடு, ஒரு குழந்தை கூட காதல் என்றால் என்னவென்பதை உங்களை விட நன்றாகவே புரிந்துகொள்ளும்,” என்றாள் ஷாலினி. கூறிவிட்டு கோபமாக அங்கிருந்து வெளியேறினாள்.

”ஷாலினீ…  போகாதே – நில்” என்று கூவிக்கொண்டே அவள் பின்னால் ஓடிய ஸ்டீ ஃபன் அவளுடைய கைகளைத் தன்னுடைய கைகளில் மென்மையாக ஏந்திக் கொண்டான்.

சிறிதுநேரம் இருவருடைய கண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே யிருந்தன.அதைத்தொடர்ந்து அன்பொழுகும்புன்னகைகளையும், கனிவான தழுவல் களையும் முத்தங்களையும் பரிமாறிக்கொண்டனர்!

"
இப்பொழுது நான் வீட்டுக்குச் சென்றாக வேண்டும் ஸ்டீவ்” என்றாள் ஷாலினி.

“நான் உன்னை வண்டியில் கொண்டுபோய்விடுகிறேன்”, என்று கூறினான் ஸ்டீ ஃபன். 

* *  *  * * *

அவர்கள் இருவருக்கும் தரப்பட்டிருந்த வேலை நிறைவடையும் தறுவாயில் இருந்தது.

“ஸ்டீவ்…” என்று அழைத்தாள் ஷாலினி.

“என்ன செல்லம்?” என்று கேட்டான் ஸ்டீஃபன்.

"
ஸ்டீவ், இந்த வேலைக்குப் பின் நம்முடைய நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தீர்களா?” நம்மை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி விடுவார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள்…”  

"
ஆமாம், நானும் அதைக் கேள்விப்பட்டேன்.”
  
ஷாலினி ஸ்டீஃபனின் கண்களுக்குள் கூர்ந்து பார்த்தாள். “ஆம் என்ன செய்வது?”. ஷாலினி கூறினாள்: ”என்னுடைய அப்பா அம்மாவிடம் நம் விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு வாயெடுப்பதற்கே எனக்கு பயமாக இருக்கிறது.” 

"
எனக்கும் அப்படித்தான்” என்று பதிலளித்தான் ஸ்டீஃபன். “ஆனால், என்னிடம் நம் பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது” 

பின், ஷாலினியின் காதில் நீண்ட நேரம் எதையோ விளக்கமாகக் கிசுகிசுத்தான். “என்னது? உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா? “ என்று திகைப்போடு கேட் டாள் ஷாலினி.

"
உனக்கு இதில் சம்மதம் என்றால் முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிடு”, என்று ஸ்டீஃபன் கூறினான்.

* * *    * * *

ஊடகங்கள், அச்சு ஊடகங்களும் மின்னியல் ஊடகங்களுமாக அந்தச் செய்தியை முன்னிலைச் செய்தியாக வெளிச்சமிட்டுக் காட்டின.

"
பெயர்பெற்ற ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலைபார்த்துவரும் துணிச்சல் மிக்க இளம்பெண் தன்னுடைய சக ஊழியர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அதை எதிர்த்துப் போராடினார்; குற்றவாளி காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். அந்தப் பெண் நல்லவேளையாக சிறுகாயங்களுடன் தப்பித்துவிட்டார்”.

அந்தச் செய்தி பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உறவுகள், நண்பர்களிடையே அதிர்ச்சி யலைகளை உருவாக்கியது.

மூத்த ஸிவெய்ரா, ஸ்டீஃபனின் தந்தை தன்னுடைய மனைவியிடம்,“ஸில்வியா, இனி ஸ்டீஃபனை இந்த வீட்டில் நான் பார்க்கக் கூடாது; இனி சமூகம் நம்மை எப்படி நடத்தப்போகிறது என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவன் சார்பில் வழக்காட சிறந்த வழக்கறிஞரை நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றார்.

ஷாலினியின் குடும்பம் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தது. குணமான பின், ஷாலினி கையில் ராஜினாமாக் கடிதத்தோடு தன்னுடைய  அலுவலகத் திற்குச் சென்றாள்.  

மேலதிகாரி அவளை அழைத்து நடந்த விஷயத்திற்காக வருத்தம் தெரிவித்தார்.

அவர் அவளுடைய ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இங்கிலாந்தில் உள்ள அவர்களுடைய தலைமை அலுவலகத்திற்கு அவளுக்கு மாற்றல் கிடைத்திருக்கும் நல்ல தகவலை அவளிடம் தெரிவித்தார்.

* * *    * * *
                                                                  

ஸ்டீஃபன் ஸில்வேய்ராவின் வழக்கு அமர்வு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்றது; ஒரு மாதத்திற்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது;

குற்றம்சாட்டப்பட்டவன் தன் மீது கூறப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஒரு கணம் பித்தேறிப் போனதில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் செய்துவிட்டதாக நீதிபதியிடம் கூறினான்.

இருதரப்பு வக்கீல்களின் வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதி ஸ்டீஃபன் குற்றவாளியே என்றும், ஆனால் பாதிக்கப்பட்டவரோடு மூன்று ஆண்டு காலம் பழகியபோது அவர் கொஞ்சங்கூட கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட தில்லை என்பதை கணக்கில் கொண்டு, அவனுக்கு மூன்று வருட கால சிறை வாசத்தை தண்டனையாக விதிப்பதாகவும் அறிவித்தார்

அரசு தரப்பு வக்கீல், எதிர் தரப்பு வக்கீல் ஆகிய இருவருமே நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முற்பட வில்லை.

* * *    * * *

இரண்டு வருடங்கள் கழித்து, ஸ்டீஃபன் லண்டனிலுள்ள ஹீத்ரோவ் விமான நிலையத்தில் வந்து இறங்கினான்.  

அவனுடைய பெட்டி படுக்கைகள் பரிசோதனைக்குப் பிறகு அவனிடம் வந்து சேர்ந்ததும் அவன் வருகைப்பிரிவுக்குச் சென்றான். 

அவர்களுடைய கண்கள் சந்தித்துக்கொண்டன.  

"
ஸ்டீவ்!"என்றாள் ஷாலினி. “நீங்கள் அப்படியேதானிருக்கிறீர்கள்! கொஞ்சங் கூட மாறவில்லை!”

"
நீயும் அப்படியே தான் இருக்கிறாய், செல்லம்!” என்று ஸ்டீஃபன் பதிலுக்குக் கூற   அவர்களிருவரும் இறுகத் தழுவி முத்தமிட்டுக் கொண் டார்கள். 

”உண்மையாகச் சொல்வதென்றால், சிறைவாசம் எனக்குப் பிடித்திருந்தது” என்றான் ஸ்டீஃபன்.

"
என்ன சொல்கிறீர்கள்!” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் ஷாலினி.

ஸ்டீஃபன் தொடர்ந்து பேசலானான்: “ஜெயிலர் மிகவும் நல்லவர். மற்ற கைதிக ளுக்குக் கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் கம்ப்யூட்டர் பயிற்சி சொல்லித் தரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். சிறையிலிருந்தவர்களும் நல்ல முறையில் பண்போடு நடந்துகொண்டார்கள்; எனக்கு மிகுந்த மரியாதை தந்தார்கள். என்னுடைய சிறைத்தண்டனையை இரண்டுவருடங்கள் என்பதாகக் குறைத்துவிடலாம் என்று ஜெயிலர் பரிந்துரை செய்தார். நான் விடுதலையாகி சிறையை விட்டு வெளியேறும்போது மற்ற கைதிகள் என்னைக் கட்டித் தழுவி மனப்பூர்வமாக வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.”   

"
சரி, வாருங்கள், நாம் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”, என்றாள் ஷாலினி.

"உம்ம்ம்ம்என்று பதிலளித்தான் ஸ்டீஃபன்.


* * *   * * *

பல வருடங்கள் கழித்து, எச்ஸெக்ஸ் பகுதியிலிருந்த, செல்ட்டாம் என்ற இடத் தில், 10, சிஸ்விக் ஸ்கொயர், என்ற விலாசமிட்டிருந்த வீடொன்றின் வாசல் கதவு தட்டப்பட்டது.

"
அப்பா! அம்மா! “ என்று ஆச்சரியத்தோடு கூவினான் ஸ்டீஃபன். “வாருங்கள்! வாருங்கள்!” என்று வியப்பும் மகிழ்ச்சியுமாய் வரவேற்றாள் ஷாலினி.

"
அம்மா, இவர்கள் யார்?” என்று கேட்டான் ரோஹன்.

"
எங்களுக்கு ஏன் இப்படிச் செய்துவிட்டீர்கள்? ” என்று அந்தப் பெற்றோர்கள் கேட்டார்கள். “நீங்கள் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதும் – நாங்கள் புரிந்துகொண்டிருப்போம்!”

ஜி.வெங்கடேஷ்

No comments:

Post a Comment