மீண்டும் சந்தித்த போது....
குமாரும் மோகனும்
உயிர் நண்பர்கள்.
பம்பாயி லுள்ள
புறநகர்ப் பகுதியான அந்தேரியில் இரு
வரும் ஒன்றாகவே வளர்ந்தார்கள்.
உயிர் நண்பர்கள்.
பம்பாயி லுள்ள
புறநகர்ப் பகுதியான அந்தேரியில் இரு
வரும் ஒன்றாகவே வளர்ந்தார்கள்.
குமார் பணக்காரக் குடும்பத்தைச்
சேர்ந்தவன் அல்ல. அவன் ஒரு தமிழன். அவனுடைய அப்பா
ஒரு பொதுத் துறை வங்கியில் மானேஜ
ராகப் பணி யாற்றிக் கொண்டிருந்தார்.
மோகனோ வாயில் வெள்ளிக்கரண்டியோடு பிறந்தவன்!. அவனுடைய அப்பா ஒரு குஜராத்தி வர்த்தகர்.
அவர்களிருவரும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள். குமார் மோகனை விட ஒரு சில மாதங்களே பெரியவன்.
அவர்கள் அந்தேரியில் ஒரே நர்ஸரிப் பள்ளியில் படித்தார்கள். பின்னர் இருவரும் அந்தேரியிலுள்ள ஸெயிண்ட் அலோஷியஸ் பள்ளியில் படித்தார்கள்.
அவர்களுடைய வீடுகளும் அருகருகே இருந்தன.
அவர்களுடைய வீடுகளும் அருகருகே இருந்தன.
காரில் பள்ளிக்குச் செல்லும் மோகன், செல்லும் வழியில் குமாரையும் ஏற்றிக்கொண்டுசெல்வான். அதேபோல், பள்ளியிலிருந்து திரும்பிவரும்போது அவனையும் ஏற்றிக்கொண்டுவந்து அவனுடைய வீட்டிற்கருகில் இறக்கிவிடுவான்.
பள்ளியில் இருவரும் ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்துகொள்வார்கள். பள்ளி முடிந்ததும் ஒன்றாக விளையாடுவார்கள்..
படிப்பதும் கூட ஒன்றாகவே படிப்பார்கள். அப்படிப் படிப்பதற்காக குமார் மோகன் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
அப்படி அவர்களிருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பது வழக்கமாதலால், இள வயதில் மோகன் தன்னுடைய அம்மாவிடம், “ அம்மா, குமாரும் இங்கேயே சாப்பிட்டுத் தூங்கட்டுமே” என்று கேட்பான்.
"இல்லை,’பேட்டா’[beta]” என்று அவள் பதில் கூறுவாள். “இப்பொழுது குமார் அவனுடைய வீட்டிற்குத் திரும்பிச்சென்றாகவேண்டும்”.
பள்ளியில், ஆசிரியர்கள் அவர்களிருவரையும் ‘ஒட்டிக்கொண்டு பிறந்தவர்கள்’, என்று கூறுவார்கள். மற்ற பிள்ளைகள் அவர்களை ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்றும், ’கார்ஸியன் சகோதரர்கள்’ எனவும் அழைப்பார்கள்!
அவர்களிருவரில் குமார் அதிக அறிவாளி; அதிக உழைப்பாளி;
தன்னுடைய பாடத்தில் சந்தேகம் கேட்க மோகன் அடிக்கடி குமாரிடம் உதவி பெறுவான். அவனைத் தேடிச் செல்வான். குமாரும் உடனடியாக மோகனுக்குப் பாடத்தை விளக்கிக் கூறி அவனுடைய சந்தேகத்தைத் தீர்த்துவைப்பான்.
அவர்களுடைய நட்பு பள்ளியிறுதி ஆண்டு வரை தொடர்ந்தது.
தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது இருவருமே நன்றாக மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள்.
குமார், தன்னுடைய கடின உழைப்பால் நன்றாகத் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆனால், மோகனுடைய வெற்றிக்கு அவனுடைய டியூஷன் வகுப்புகளும் தனிப்பட்ட முறையில் அவனுக்குக் கற்பிக்கப்பட்டதும் முக்கியக் காரணங்கள்.
அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் என்று மோகன் குமாரிடம் கேட்டான்.
“தெரியவில்லை” என்றான் குமார். “என்
அப்பாவிடம் கேட்க வேண்டும்”.
”இங்கும் அதே தான் கதை” என்றான் மோகன்.
”குமார், நீ உன்னுடைய பரிட்சைகளில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக் கிறாய்.... ஆனால், இன்னும் சில வருடங்களில் நான் வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவேன். நான் சேமித்து வைத்துள்ள பணம் உன்னுடைய அக்கா ராதாவின் கல்யாணத்தை நடத்த மட்டுமே போதுமானதாயிருக்கும். எனவே, நீ ஒரு குறுகிய கால கம்ப்யூட்டர் பயிற்சியோ அல்லது செக்ரடரியல் கோர்ஸோ படித்தால் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் சீக்கிரமே நீ ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியும்.”
“தெரியவில்லை” என்றான் குமார். “என்
அப்பாவிடம் கேட்க வேண்டும்”.
”இங்கும் அதே தான் கதை” என்றான் மோகன்.
”குமார், நீ உன்னுடைய பரிட்சைகளில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக் கிறாய்.... ஆனால், இன்னும் சில வருடங்களில் நான் வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவேன். நான் சேமித்து வைத்துள்ள பணம் உன்னுடைய அக்கா ராதாவின் கல்யாணத்தை நடத்த மட்டுமே போதுமானதாயிருக்கும். எனவே, நீ ஒரு குறுகிய கால கம்ப்யூட்டர் பயிற்சியோ அல்லது செக்ரடரியல் கோர்ஸோ படித்தால் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் சீக்கிரமே நீ ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியும்.”
மோகனுடைய தந்தை தன்னுடைய மகனிடம் கூறினார்: “ வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! உனக்கு பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டப்படிப்பில் சேர அமெரிக்காவிலுள்ள கார்னகி இன்ஸ்டிட்யூட்டில் இடம் கிடைத்துவிட்டது! நீ ஜூலை மாதமே அங்கே செல்ல வேண்டும்.”
* * * * * * * * *
குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியின் செயலாளராகப் பணியில் சேர்ந்தான். பார்வதி என்ற பெண்ணை மணந்து ரமேஷ் என்ற குழந்தைக்குத் தகப்பனானான். ரமேஷ் தனியார் பள்ளியொன்றில் மேல்நிலை வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்[பெடுப்பதற்காக குமாரை அழைத்தார். அவர்களுடைய வேலையின் நடுவில், இன்னொரு புதிய தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் நிறுவனத்திற்கு அடுத்த நாள் வரப்போகிறார் என்றும் அவர் நிறுவனத்தின் நிர்வாகக்குழுவிலும் இடம்பெறப்போகிறார் என்றும் விவரம் தெரிவித்தார்.
”ஓ அப்படியா!" என்றான் குமார். “அவர் யார் ஸார்?”
“நாளைக்கு உங்களுக்கே தெரியும்!” என்று பதிலளித்தார் தலைமை நிர்வாக அதிகாரி. “நாளை நம்முடைஅய் புதிய தலைமை நிர்வாக அதிகாரி வரும் போது அவரிடம் தருவதற்கு ஒரு அழகான மலர்ச்செண்டு வாங்கிவைத்து விடுங்கள். மேலும், இந்த விவரம் ரகசியமாகவே இருக்கட்டும்!"
அந்த நாளும் வந்தது. நிர்வாகக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது தலைமை நிர்வாக அதிகாரி ஏற்கனவே குமாரிடம் சொல்லியிருந்த விவரத்தை அறிவித்தார்:
“நம்முடைய நிறுவனத்திற்குப் புதிய தலைஅமை நிர்வாக அதிகாரியாக வந்தி ருக்கும் திரு. மோகன் ஷா அவர்களையும் வருக வருக என்று வரவேற்கின் றோம்!”
“நாளைக்கு உங்களுக்கே தெரியும்!” என்று பதிலளித்தார் தலைமை நிர்வாக அதிகாரி. “நாளை நம்முடைஅய் புதிய தலைமை நிர்வாக அதிகாரி வரும் போது அவரிடம் தருவதற்கு ஒரு அழகான மலர்ச்செண்டு வாங்கிவைத்து விடுங்கள். மேலும், இந்த விவரம் ரகசியமாகவே இருக்கட்டும்!"
அந்த நாளும் வந்தது. நிர்வாகக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது தலைமை நிர்வாக அதிகாரி ஏற்கனவே குமாரிடம் சொல்லியிருந்த விவரத்தை அறிவித்தார்:
“நம்முடைய நிறுவனத்திற்குப் புதிய தலைஅமை நிர்வாக அதிகாரியாக வந்தி ருக்கும் திரு. மோகன் ஷா அவர்களையும் வருக வருக என்று வரவேற்கின் றோம்!”
”ஹோ!” என்று திகைத்துப்போனவனாய் கூறினான் குமார். அவனுடைய அன்புத்தோழன் மலர்ச்செண்டைப் பெற்றுக்கொள்வதைப் பார்த்து ஆச்சரிய மும் பிரமிப்புமாய் திக்குமுக்காடிப் போனான்.
மோகனைப் பார்த்தவுடன் அவனுடைய மனதில் ஏற்பட்ட முதல் எண்ணம் நண்பனைக் கட்டித் தழுவிக்கொள்ளவேண்டும் என்பதுதான். ஆனால் அலுவலக நாகரீகம்அவனைக் கட்டுப்படுத்தியது. தன்னுடைய மனவெழுச்சியை அடக்கிக்கொண்டான். மோகனை அவனுடைய புது அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“மோகன்” என்று பேசத்தொடங்கினான். ஆனால், மோகன் கைகாட்டி அவன் பேச்சை இடைமறித்து, எந்தவித உணர்ச்சியையும் காட்டாத வெறுமையான முகபாவத்துடன், இறுக்கமான குரலில், “இனி நான் பார்த்துக்கொள்கிறேன்; ஏதேனும் தேவைப்பட்டால் உங்களை அழைக்கிறேன்,” என்று சொன்னான்.
“மோகன்” என்று பேசத்தொடங்கினான். ஆனால், மோகன் கைகாட்டி அவன் பேச்சை இடைமறித்து, எந்தவித உணர்ச்சியையும் காட்டாத வெறுமையான முகபாவத்துடன், இறுக்கமான குரலில், “இனி நான் பார்த்துக்கொள்கிறேன்; ஏதேனும் தேவைப்பட்டால் உங்களை அழைக்கிறேன்,” என்று சொன்னான்.
மோகன் நடந்துகொண்ட விதம் குமாருக்கு விசித்திரமாக இருந்தது; அயல்நாட்டில் பல வருடங்கள் பணிபுரிந்தாலும், அமெரிக்காவில் பட்டம் பெற்றிருந்தாலும் அதெல்லாம் சிறுவயது நட்பிற்குக் குறுகே நிற்கக்கூடியதா என்ன...ஒருவேளை, மோகன் இந்த வேலையில் பொருந்தியவுடன், என்னைக் கண்டிப்பாக நினைவுபடுத்திக்கொள்வான்...’ என்று எண்ணிக்கொண்டான்.
ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை! அவர்களுடைய நட்பு முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டது. மோகன் குமாரிடம் பேசுவதெல்லாம் அலுவலகத்தில் அவர்களுடைய வேலை பற்றியதாகவே இருந்தது.
இப்பொழுது, குமாருக்குப் பொறுக்கமுடியாமல் போயிற்று.
மோகனைப் பார்த்தாலே அவனுக்குப் பற்றிக்கொண்டுவந்தது.
அந்த இடத்தை விட்டே போய்விடவேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.
’இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடிக்கொண்டால் என்ன?’ என்று எண்ணினான்.
அன்றிரவு பார்வதியிடம் விஷயத்தைக் கூறி வேறு வேலை பார்த்துக்கொள்ள எண்ணியிருப்பதாகவும் தெரிவித்தான்.
’இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடிக்கொண்டால் என்ன?’ என்று எண்ணினான்.
அன்றிரவு பார்வதியிடம் விஷயத்தைக் கூறி வேறு வேலை பார்த்துக்கொள்ள எண்ணியிருப்பதாகவும் தெரிவித்தான்.
"தயவு செய்து அவசரப்படாதீர்கள்”, என்றாள் பார்வதி. ”நாம் ரனேஷைப் பற்றி யோசிக்கவேண்டும். நம்மிடம் வங்கியில் சொற்ப அளவு பணமே சேமிப்பாக உள்ளது...”
ஆனால் குமாருக்குத் தன் மன உளைச்சலிலிருந்து மீள முடியவில்லை. யாரையோ பார்ப்பதுபோல் வெற்றுப் பார்வையாக மோகன் தன்னைப் பார்ப்பது குமாருக்குத் தாங்க முடியாமல் இருந்தது. அந்த வெறுமையான முகபாவம் அவனை ஆட்டிப்படைத்தது;
கோயிலுக்குச் சென்று கடவுளிடம் முறையிட்டான் குமார். கடவுளே, இதுவரை உன்னிடம் நான் எதையுமே கேட்டதில்லை. எனக்கு மோகனிடம் எந்த வெறுப்புமில்லை. ஆனால், அவன் ஏன் எங்களுடைய சிறுவயது நட்பை இப்படி அலட்சியப்படுத்துகிறான்? இது நியாயமா? ஏன் வாழ்க்கை என்னை இப்படி வஞ்சிக்கிறது? எனக்கு ஏன் இப்படி விதிக்கப்பட்டிருக்கிறது? தயவு செய்து எனக்கு உதவிசெய்யுங்கள், உதவி செய்யுங்கள்!!’ என்று மன்றாடி வேண்டிக்கொண்டான்.
* * * * * * * * *
நிறுவனத்தின் வருடாந்தரக் கூட்டம் நடக்க இருந்தது. ஊழியர்கள் அனை வரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரை யாற்றத் தொடங்கினார்:
"நம்முடைய நிறுவனத்தின் செயல்திறன் இந்த வருடம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ஊழியர்கள் அனைவருக்கும், அவர்களுடைய அயராத பணிக்காக என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள் கிறேன். திரு. மோகன் ஷாவுக்கு இணை நிர்வாக இயக்குனராகப் பதவி உயர்வு தரப்பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இனி திரு ஷா. நரிமான் பாயிண்ட் -இல் உள்ள நம்முடைய தலைமை அலுவலக்த்தில் இயங்கிவருவார்!"
இதைக் கேட்டு குமாருக்குக் காதில் தேன் வந்து பாய்ந்ததுபோல் இருந்தது! அவனுக்கு மோகனிடம் எந்த வெறுப்பும் இல்லையென்றபோதும், இனி அந்த நன்றிகெட்ட உணர்ச்சியற்ற முகத்தை அவன் பார்க்க வேண்டியிருக்காது!
'கடவுள் அவனுடைய மன்றாடலைக் கேட்டுவிட்டார்; மனமிரங்கிவிட்டார்! இனி அவனுடைய ரத்தம் கொதிக்காது!’
குமார் இனிப்புகள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச்சென்றான்.
“இனி அவனைப் பார்க்க வேண்டிய தேவையில்லை!”, என்று பார்வதியிடம் கூறினான். “ மோகனுக்குப் பதவி உயர்வு தரப்பட்டு அவன் தலை அலுவலகத் திற்கு மாற்றப்பட்டுவிட்டான்!”
அடுத்த நாள், அலுவலக நேரத்தில் குமாருக்கு பர்ஸனல் மானேஜரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “ கொஞ்சம் என்னை வந்து பார்க்க முடியுமா குமார்?” என்று கேட்டார் அவர்.
குமார் போய்ப் பார்த்தான்.
"உட்காருங்கள் குமார்” என்றார் அதிகாரி. “உங்களுடைய சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக கம்பெனி உங்களுக்குப் பதவி உயர்வு தந்திருக்கிறது. இப்பொழுது நீங்கள் நிர்வாகப் பதவியில், அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இனி தலைமை அலுவலகத்தில் தான் இயங்கிவர வேண்டும்; திரு. மோகன் ஷாவின் கீழ் செயல்பட வேண்டும். உங்களுடைய வருமானத்தில் கணிசமான அளவு உயர்வு உண்டு! என்னு டைய மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார்!"
திரும்பவும் மோகனைப் பார்க்கவேண்டும் என்ற நினைப்பில் குமாரின் முகம் வாடிப்போயிற்று.
"என்ன, இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது தானே?” என்று கேட்டார் அதிகாரி.
"நான் முடிவெடுக்க எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்க முடியுமா?” என்று கேட்டான் குமார்.
"சரி, நாளை காலை உங்கள் முடிவைத் தெரிவித்துவிடுங்கள்” என்றார் பர்ஸனல் மானேஜர்.
வீடு திரும்பியதும் பார்வதியிடம் விஷயத்தைத் தெரிவித்தான் குமார்.
பதவி உயர்வைக் கண்டிப்பாக அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பார்வதியின் கருத்தாக இருந்தது.
"ஆனால், பார்வதி - மோகனைப் பார்க்கும்போதெல்லாம் என் ரத்தம் கொதிக் கிறது”, என்று கோபமாய் கத்தினான் குமார்.
”என் செல்லமில்லையா, நான் சொல்வதைக் கேளுங்கள், தினமும் ஆறுமணிநேரம் தான் நீங்கள் அவரைப் பார்க்கவேண்டியிருக்கும். மற்ற நேரங்களில் நீங்கள் எனக்குச் சொந்தமானவர். சரிதானே! “என்றால் பார்வதி. “தவிர, இதில் கிடைக்கப்போகும் கூடுதல் பணத்தின் உதவியோடு நம்மால் ரமேஷை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்க முடியுமல்லவா!”
'ரமேஷ், ரமேஷ்...’ என்று எண்ணிக்கொண்டான் குமார்... ‘தன் மகனுக்காக அவன் எதைவேண்டுமானாலும் செய்வான்! தினந்தினம் மோகனைப் பார்ப்பதைக் கூட!
ஜி.வெங்கடேஷ்
No comments:
Post a Comment