பழிக்குப் பழி
ராமு அவனுடைய பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அதனால் தானோ என்னவோ, செல்லம்கொடுத்துக் குட்டிச்சுவரான பையனாய் வளர்ந்தான் அவன்.
குழந்தையாக இருந்தபோது பூச்சிகளையும் பிராணிகளை யும் துன்புறுத்துவதில் பெரிதும் ஆனந்தமடைவான்.
ஈக்கள், கரப்பான் பூச்சிகளைப் பிடித்துஅவற்றை சிலந்திவலைக்குள் போட்டு வெளியே வர முடியாமல்
அவை திணறுவதைப் பார்த் துக் களிப்பான். அதேபோல், பூனையின் வாலைப் பிடித்து இழுப்பான். புறாக்கள் தரையில் இருந்தால் அவற்றை
அச்சுறுத்தித் துரத்தியடிப் பான். தெருநாய்களின் மீது கல்லை விட்டெறிவான்.
அவனுடைய அப்பாவும், அம்மாவும் செய்யக் கூடாது, பிராணிகளைத் துன்புறுத்தக் கூடாது
என்று எத்தனையோ சொல்லிப்பார்த்துவிட்டார்கள். ஆனால்,அவன் அவர்களுடையபேச்சைக் கேட்கவே மாட்டான்.
அவனுடைய வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் வசித்து வந்த நண்பர்களிடம்கூடஒரே அதிகாரமாய் நடந்து கொள்வான்.
அப்படித்தான், கிரிக்கெட் விளையாடும்போது எப்பொழுதும் ‘பாட்டிங்’தான் செய்வேன் என்று அடம்பிடிப்பான்.
’பாட் டிங்’ மட்டுமே செய்வேன் என்று அழிச்சாட்டியம் செய்வான்!
எடுத்ததற்கெல்லாம் நண்பர்களோடு சண்டை போடுவான். தேவையில்லாமல் சட்சட்டென்று அவர்களை அடித்துவிடு வான்.
அந்தப் பையன்களுடைய பெற்றோர்கள் ராமுவின் அப்பா, அம்மாவிடம் புகார் செய்வார்கள்.அவர்களை சமாதானம் செய்ய ராமுவின்பெற்றோர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.
ஆனாலும், ராமுவின் இந்த குணம் சீக்கிரமேமாறி விடும், அவனுக்கு பிரகாச மான எதிர்காலம் காத்தி ருக்கிறது என்றே அவனுடைய
அம்மாவும் அப்பா வும் நம்பினார்கள்.
அவன் புத்திசாலிப்பையன். அவன் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைத்தால், வகுப்பில் அவனால் இன்னும் முன்னுக்கு
வர முடியும் என்று அவனுடைய ஆசிரியர்கள் உறுதியாக நம்பினார்கள்
* * *
ராமு
வளர்ந்த பையனாகிவிட்டான்;
இப்பொழுது
பிராணிகளின் முறை
அவைஅவனைப் பழிதீர்த்துக்கொள்வதாய் திருப்
பித் தாக்க ஆரம்பித்தன!
பித் தாக்க ஆரம்பித்தன!
பள்ளிக்கு
நடந்துசெல்லும் வழியில், ஒரு கறுப்பு நிறதெரு
நாய் இருந்தது. அது ராமுவைக் கண்ட துமே குரைக்க ஆரம்பிக்கும்.
ராமுவுக்கு இது விசித்திரமாக இருந்தது. கார ணம், அந்த
நாய் தெருவில் வேறு யார் போனாலும் குரைக்காது.
ஆனால், ராமு போனால் மட்டுமே குரைக்கும்!
எப்படியிருந்தபோதும் ராமு அதைப் பெரிதா கப் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால், குரைக் கிற நாய் கடிக்காது என்று அவனுக்குத் தெரியும்!
பிறகு, காக்காய்கள் அவனைப் பழிவாங் கத் தொடங் கின;
ராமு
தன்னுடைய வீட்டு வராந்தாவில் அமர்ந்து தான் படிப்பது வழக்கம்;
அப்படி மும்முரமாகப் படித்துக்கொண்டிருக்கும் போது, அவனைக் காக்காய்கள் தொல்லைப் படுத்தும், அவனுடைய தலைமுடியைக் கொத்தி விட்டுப் பறந்து போகும்.
தொல்லை
தாங்கமுடியாமல் அவன் அங்கிருந்து
எழுந்து வீட்டுக்குள் இருக்கும் ஓர் அறைக்குள் அமர்ந்துகொண்டு படிப்பைத் தொடரும்படியாகும்!
எழுந்து வீட்டுக்குள் இருக்கும் ஓர் அறைக்குள் அமர்ந்துகொண்டு படிப்பைத் தொடரும்படியாகும்!
ராமு படித்துமுடித்துவிட்டான்;
இப்பொழுது அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஜூனியர் எஞ்ஜினியரிங் மானேஜராக
வேலையில் இருந்தான்.
இப்பொழுது மனமுதிர்ச்சி
பெற்றவனாய் இருந்தான் ராமு. அவனுடைய பழைய
குழந்தைப்பருவ கெட்ட பழக்கங்களெல் லாம் போய்விட்டன. ஆனாலும், அவனுடைய சிடுசிடுவென்ற
கோபகுணம் மட்டும் அப்படியே
இருந்தது. ஆனாலும், அவன் வேலை யில் மிகவும் நேர்மையானவன், கடின உழைப்பாளி என்பதால்
அலுவலகத்தில் அவனுக்கு நல்லபெயர் இருந்தது.
சிக்கலான நேரங்களில் பொறுமையாக
இருக்கும் படியும், நிதானமாக நடந்து கொள்ளும்படியும்
அவனுடைய மேலதிகாரி அவனிடம் சில தடவை கள் கூறியிருக்கிறார்.
ஆனாலும், தன்னோடு வேலை பார்ப்பவர்களிடம் கோபப்பட்டு கத்தாமல் இருக்கவே முடியாது ராமுவால்.
ஒரு சமயம் அவர்களுடைய அலுவலகத்தில்
நிர்வாகக் கூட்டம் ஒன்று அதற்கான
அறையில் நடந்து கொண்டிருந்தது. மேலதிகாரிகள் அனை வரும் வந்திருந்தார்கள்; இள நிலை
எஞ்ஜினியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளுக்கு அந்த ஆண்டில் தங்கள் துறையின் சாதனைகளை
எடுத்துரைக்கும் விளக்க வுரை [a presentation] ஒன்றை அவையில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அந்த நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனரும் அந்தக் கூட்டத்தில் இடம்பெற்றிருந்தார்.
ராமுவின் விளக்க வுரை அற்புதமாக அமைந்தது.அவையிலிருந்த அனைவரும் கைதட்டி
பாராட்டினார்கள்.
அதன்பின், கேள்விகளுக்கான
நேரம் வந்தது.அங்கி ருந்தவர்கள் சமர்ப்பிக்கப் பட்ட
விளக்கவுரை தொடர்பாக கேள்வியெழுப்பத்தொடங்கினார்கள்.
கேள்வி கேட்ட ஒருவர் ராமு
தன்னுடைய விளக்க வுரையில் முன்வைத்த புள்ளிவிவரங்கள்
குறித்த சந்தேகத்தை எழுப்பினார்.
ராமு ஆத்திரமடைந்து அந்த
மனிதரை ஏச ஆரம் பித்தான். அவன் கத்த, பதிலுக்கு கேள்வி கேட்ட வரும் கத்த அங்கேஒரே களேபரமாகிவிட்டது.
அவர்களிருவரும் உரத்த குரலில் ஒருவரையொரு வர் கேவலமாகத் திட்டிக்கொண்டார்கள்.
கூட்டத்தை ஒழுங்கமைத்துக் கொண்டிந்தவர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியிருந்தது.
மானேஜர் ராமுவை நோக்கிப்
பார்த்த பார்வை யில் அவர் தன்னைப்பற்றி என்ன
நினைக்கிறார் என்று ராமுவுக்குப் புரிந்துவிட்டது. அவருக்குத் தன் மீது இருந்த நல்ல அபிப்பிராயமெல்லாம் போயே போய்விட்டது என்பதும்,இனி அந்த நிறுவனத்தில் பதவி உயர்வு என்பது தனக்கு எட்டாக்கனி தான் என்பதும் அவனுக்கு நன்றாகவே விளங்கியது!
ராமு வீட்டையடைந்ததும்,
அவனைப் பார்த்ததுமே ஷீலாவுக்கு அவனுடைய
மனநிலை புரிந்துவிட் டது.
சாப்பாட்டு மேஜைப் பக்கத்தில்
அமர்ந்துகொண்ட போதும் ராமுவின் ஆத்திரம் அடங்கியிருக்க வில்லை.
கோபம் தீர கத்தவேண்டுமென்று
விரும்பி னான். காரண காரியமெல்லாம் பார்க்காமல்
கத்தியாக வேண்டும். அப்பொழுது தான்அவன் ஆத்திரம் அடங்கும்…ஷீலாவை நோக்கிக் கத்தத்
தொடங்கினான்.
”இதென்ன,சப்பாத்தி சிமெண்டு
போல் கெட்டியாக இருக்கி றது. சூப்பு
உப்புச் சப்பில்லாமல் தண்ணி போல் இருக்கி றது…?”
படுக்கையில் ஷீலா ஆதரவாக
அவன்மேல் கையை போட்ட போது ஆக்ரோ ஷமாக
இரைந்தான். “தொடாதே, தள்ளிப் போ”
அடுத்த
நாளும் அவனுடைய ஆத்திரக் கூப் பாடு தொடர்ந்தது.
“என்னுடைய
துண்டை எங்கே வைத்தாய், ஷீலா? இந்த
சின்ன வேலையைக் கூட உனக்கு செய்யத் தெரியாதா? சே, உன்னுடைய அம்மா இதைக் கூட உனக்குச் சொல்லித் தரவில்லை…”
அதற்குமேல்
ஷீலாவால் பொறுத்துக்கொண்டிருக்க
முடிய வில்லை;
"ஆமாம்,
அம்மா வீட்டிற்குச் சென்று அதைக்கற்றுக்
கொண்டு வருகிறேன்” என்று அவனைச் சீண்டு வதாய்எகத்தாளமாகக் கூறினாள் அவள்.
"தயவு
செய்து சீக்கிரமே அதைச் செய்”,
என்றான் ராமு;
என்றான் ராமு;
ஷீலா
தன்னுடைய பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டிக்கொண்டாள். குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக் கொண்டாள்;
"வீட்டுச்
சாவிகளை எடுத்துக்கொண்டுபோனால் நல்லது.
இல்லையென்றால், வீடு திரும்பும்போது வெளியிலேயே இருக்கும்படியாகிவிடும்,” என்றாள்
அவள்.
*
* * * * *
காலம் எல்லாக் கோபத்தையும் ஆற்றிவிடக் கூடியது. வீட்டை விட்டு ஷீலா போய் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன;
காலம் எல்லாக் கோபத்தையும் ஆற்றிவிடக் கூடியது. வீட்டை விட்டு ஷீலா போய் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன;
வீட்டுவேலைகளையும்,
அலுவலக வேலைகளை யும்
பார்த்துக்கொள்வது ராமுவுக்கு மிகவும் சிரம மாக
இருந்தது. நாளாக ஆக இந்தச் சிரமம் அதிகமா கிக் கொண்டே போயிற்று.
தன்னுடைய
மாமனாரும் மாமியாரும் ஷீலா வைத் திருப்பியனுப்புவார்கள்
என்று ராமு நம்பி னான். ஆனால்
அப்படியெதுவும் நடக்கவில்லை.
தன்னுடைய
குழந்தைகளைப் பிரிந்திருப்பதும் அவ னுக்குவேதனையளித்தது;வீட்டில் நிலவிய அமைதி அச்சுறுத்துவதாய் இருந்தது. குழந்தைகளின்
கூச்ச லும் கும்மாளமும் வீட்டில் மீண்டும் கேட்க வேண் டுமே என்று அவன் மனம் ஏங்கியது.
* *
* * * *
ராமு தன்னுடைய மாமனார் வீட்டு அழைப்பு மணி யை அழுத்தி ஒலிக்கச்செய்தான்.
ஷீலா கதவைத் திறந்தாள்.
அவனைப் பார்த்ததும் ”என்ன வேண்டும்?” என்று
கேட்டாள்;
பதிலுக்கு, "வீட்டிற்குத் திரும்பிவந்துவிடு ஷீலா ” என்று கூறினான் அவன்.
”எதற்கு? உங்களிடம் திட்டு வாங்கவா?” என்று கேட் டாள் ஷீலா.
“இல்லை, மீண்டும்என் நேசத்திற்குரியவளாக”,என பதிலளித்தபடியே ராமு அவளுடைய கைகளை அன்போடு தன் கைகளில் ஏந்திக்கொண்டான்.
இரவு, இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர்.
ராமுவின் மனம் சிந்தனையிலாழ்ந்திருந்தது;
"என்ன யோசிக்கிறீர்கள்?”
என்று கேட்டாள் ஷீலா.
"நீயாவது
என்னை மன்னித்துவிட்டாயே, மற்றவர் கள் யாருமே அதைச் செய்ய முன்வரவில்லை,” என்று
பதிலளித்தான் ராமு.
ஜி.வெங்கடேஷ்.
No comments:
Post a Comment