LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Sunday, 1 March 2015

குற்றமும் தண்டனையும்

குற்றமும் தண்டனையும்
 இடம் : மெக்ஸிகோ



[இந்தக் கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் உண்மையான மனிதர்கள் எவரை யேனும் ஒத்திருந்தால் அது தற்செயலே என்று கூறிக்கொள்கிறேன்  - ஆசிரியர்]





மரிஸ்ஸா பவன், மெக்ஸிகோ நகரின் புதிய போலீஸ் கமிஷனராகப் பதவியேற்றிருந்தாள்.

Juarez என்ற பகுதி, அமெரிக்காவின் எல்லையோர மாநிலமான டெக்ஸாஸ் போகும் வழியில் அமைந்துள்ளது, உலகிலுள்ள தீமைகளுக்குப் பேர்போன நகரங்களில் ஒன்றாகப் பரவலாகக் கருதப்படுவது. போதைப்பொருள்களைக் கடத்துவது, விபச்சாரம், நிழலுலக தாதாக்களின்  உக்கிரமான குழுச்சண்டைகள், பாலியல் வன்கொடுமைகள் என எல்லாவற்றிற்கும் பேர்போன நகரங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குவது;  

இந்த நகரிலுள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே கிடையாது. பாலியல் வன்கொடுமைகள் வழக்கமாக நடந்தேறின. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதேயில்லை. நகரின் பெருமுதலாளிகள் எல்லோரும் ஊழல் பேர்வழிகள். தங்களுடைய நிதியாதாரங்களுக்கு நிழலுலக தாதாக்களை அவர்கள் பெரிதும் அண்டியிருந்தார்கள் என்பதால் அவர்களைப் பேணிப் பராமரித்து, பாதுகாத்து வந்தார்கள்.


அந்த நகரின் போலீஸ் கமிஷனர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்துவிட்டதில் அந்தப் பதவி காலியாகிவிட மரிஸ்ஸா அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டாள்;  

அந்தப் பதவிக்குத் தகுதியான வேறு நபர்களும் இருந்தார்கள். ஆனால், அந்த இடம் எப்படிப்பட்டது, அங்கே பணியாற்றுவது எந்த அளவுக்குக் கடின மான விஷயம் என்பதை நன்கு தெரிந்துகொண்டி ருந்த அவர்கள், அங்கே பணிமாற்றல் கிடைப்பதை ஒப்புக்கொள்ளவில்லை!

அந்த இடத்தின் போலீஸ் கமிஷனர் திடீரென மார டைப்பால் இறந்ததற்கே ஒரு சோகமான பின்னணி உண்டு! ஆம், அவருடைய சொந்த மகள் லாராவை நகரின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றின் தலைவனாக விளங்கிய க்ளாடியோ கான் ஸலஸ் (CLAUDIO GONSALVES),பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கிவிட்டான். அதன் விளைவாய் ஏற்பட்ட அதிர்ச்சியும் அவமானமும் கமிஷனர் உயிரைக் குடித்துவிட்டது. 

அந்தக் குற்றத்துக்காக இப்பொழுது க்ளாடியோ நகரின் மத்தியச் சிறையில் இருந்தான்;

ஆனால், சீக்கிரமே வெளியே சுதந்திர மனிதனாக க்ளாடியோ வந்துவிடுவான் என்று அந்த நகர மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும்! காரணம், அந்த ஊரைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் பலருடைய ஆதரவும் பக்கபலமும் அவனுக்கு உண்டு!

மரிஸ்ஸா பவன் மிகவும் கவலையோடிருந்தாள். தான் பணியேற்றிருக்கும் வேலையும், பணியிடமும் மிகவும் கொந்தளிபானவை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.... 

எதிர்பார்த்ததுபோலவே, விரைவிலேயே அவளுடைய மேலதிகாரிகளிடமிருந்து அவளுக்குத் தொலைபேசியழைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாய் வரத்தொடங்கின. க்ளாடியோவை விடுதலை செய்துவிடும்படி;  

தொலைபேசி ஒலித்தது.

“ஹலோ” என்று கண்டிப்பான குரலில் பேசினாள் மரிஸ்ஸா.

அவளுடைய உதவியாளன் லோப்ஸ்
தான் பேசியது;

“மாடம், ஸிரில், ரிச்சர்ட் இருவரையும் காணவில்லை.”

“நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? போய் என்ன நடந்தது, இது எப்படி நடந்தது என்று கண்டு பிடியுங்கள். உதவிக்கு எத்தனை பேர் தேவைப்ப டுமோ அத்தனை பேரையும் பயன்படுத்திக்கொள் ளுங்கள். இன்று நான் உறங்கச் செல்வதற்குள் எனக்கு தகவல் கிடைத்தாக வேண்டும், புரிகிறதா?” என்று இடிபோல் கர்ஜித்தாள் மரிஸ்ஸா.

ஸிரில் தான் க்ளாடியோவுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சி. அவனை கவனமாகப்பார்த்துக்கொள்ளும் பொருட்டு மரிஸ்ஸா நியமித்திருந்த பாதுகாவலர்  ரிச்சர்ட்.



அடுத்து, மரிஸ்ஸாவின் மேலதிகாரி அவளை நேரடித் தொலைபேசி இணைப்பில் அழைத்தார். “மரிஸ்ஸா, வழக்கு விசாரணையை நாம் எப்போது தொடங்கலாம்?”

முக்கிய சாட்சியைக் காணவில்லை என்ற தக வலை மரிஸ்ஸா அவரிடம் சொல்லவில்லை. “இன்னும் மூன்று நாட்கள் கொடுங்கள் ஸார், தொடங்கிவிடலாம்”, என்றாள்.

"சரி, ஆனால், வழக்கு பிசுபிசுத்துப் போய்விடாமல் பார்த்துக்கொள்”, என்றார் மேலதிகாரி.


க்ளாடியோ. அந்தப் பெயரும் முகமும் மரிஸ்ஸாவின் ரத்தத்தைக் கொதிக்கச் செய்தன! அவனுடைய கண்களைப் பிடுங்கிப் போட முடிந் தால், அவனை சுட்டுத்தள்ள முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் மரிஸ்ஸா. அதைவிட, வித்தியாசமாய் வேறு ஏதாவது செய்வது இன்னும் மேலானது!  


ஆனால், அவள் காவல்துறையில் பணிபுரிபவள். இன்னும் இரண்டு வருடங்கள் இந்த இடத்தில் வெற்றிகரமாகப் பணியாற்றி முடித்தால் அவளுக்கு பெரியதொரு பதவி உயர்வு கண்டிப்பாகக் கிடைக்கும்!

அவளுடைய எண்ணங்கள் க்ளாடியோவை நோக்கித் திரும்பின.பள்ளிநாட்களிலிருந்தே அவனை மரிஸ்ஸாவுக்கு நன்றாகத் தெரியும். அழகான கயவனாக, முரடனாகவே இருந்தான் அவன். மற்றவர்களைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பான். படித்துக்கொண்டிருந்த சமயம், மரிஸ்ஸாவின் உயிர்த்தோழி காப்ரியேலாவைக் குரூரமாக உருக்குலைத்துச் சிதைத்தான் அவன். 


ஆனால், அதற்காய் வெறுமே பள்ளியை விட்டு விலக்கப்பட்டான். அவனுடைய குடும்பம் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டது.


மரிஸ்ஸா காவல்துறையில் கால்பதித்து முன்னே றிக்கொண்டிருந்தபோது க்ளாடியோ பயங்கர கள்ளக் கடத்தல் ’தாதா’வாக, போதைப்பொருள் வியாபாரி யாக உருவாகிக்கொண்டிருந்தான்; அதைவிட மோசம், அவன் ஒரு குரூரமான பெண்பொறுக்கி யாக, கற்பழிப்பாளனாக மாறியிருந்தான். தனக்கி ருந்த பெரியமனிதத் தொடர்பால் வெகுசுலபமாக சட்டத்திலிருந்து தப்பிப்பது அவன் வாடிக்கையாகிவிட்டது.

அவனுடைய வழிமுறை மிகவும் சுலபமானது; ஒரு பெண்ணை, தன்னுடைய அடியாட்களின் துணை யோடு, ஆளரவமற்ற இடத்தில் ‘கெடுத்து; உருக்கு லைத்துப் போட்டுவிடுவது. பின், அந்த நிகழ்ச்சிக்கு சாட்சிகளாக இருப்பவர்களை எப்படியாவது வழிக் குக் கொண்டுவந்துவிடுவது; ஒன்று விலைக்கு வாங்கி விடுவது அல்லது, தீர்த்துக்கட்டிவிடுவது.

இதைத்தான் அவன் சீமாட்டி க்ளாரா விஷயத்திலும் செய்தான். நடந்த பயங்கரத்துக்கு நேரடி சாட்சிய மான அவளுடைய ‘ட்ரைவர்’ நீதிமன்றத்தில் ‘பிறழ் வு சாட்சி’யாக மாறிவிட்டான்; சீமாட்டி க்ளாராவை க்ளாடியோ பலாத்காரம் செய்ய வில்லை என்றும், அவள்தான் க்ளாடியோவின் அழகிலும் கம்பீரத்தி லும் மயங்கி அவனோடு உறவுகொண்டதாகவும் கூறிவிட்டான்.


ஆனால், இப்போதைய வழக்கு விவகாரம் அப்படி யில்லை. ஏனெனில், மரிஸ்ஸா, இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஸிரில் மிகச் சிறந்த முறை யில் பாதுகாப்பளிக்கப்படுவதை உறுதி செய்திருந் தாள்.

மீண்டும் தொலைபேசி மணியடித்தது. அவளுடைய உதவியாளன் லோபஸ் தான் அழைத்தது.


“மாடம்,”என்று மன்னிப்புக்கோரும் குரலில்தயக்கத் தோடு மெல்லியகுரலில் பேசினான் அவன்.                “ஸிரில், ரிச்சர்ட் இருவர்மே இறந்துவிட்டார்கள்.”

”என்னது”” என்று அதிர்ந்துபோய்க் கூவினாள் மரிஸ்ஸா.

“ஆமாம் மாடம், சிறைச்சாலைக்குள்ளேயே அவர் கள் சுடப்பட்டிருக்கிறார்கள்.”

மரிஸ்ஸாவுக்குத் தலைசுற்றியது. அவளுடைய உலகம் கண் முன்னால் சுக்குநூறாக நொறுங்கிச் சிதறியது.

'ஊர்மக்கள் காவல்துறையைப் பற்றியும் அதன் தலைமைப்பொறுப்பிலிருக்கும் கமிஷனர் குறித்தும் என்ன நினைப்பார்கள்...! முக்கிய சாட்சி, போலீஸ் காவலில் இருக்கும்போது இப்படி சுடப்பட்டு இறந்தி ருக்கிறார் என்றால்... ‘


'ஊர்மக்களில் ஒவ்வொருவரும் இது காவல்துறை யிலேயே உள்ள கருப்பு ஆடுகளின் வேலை என்பதை இப்போது நன்றாகவே புரிந்துகொண்டிருப் பார்கள். க்ளாடியோ எத்தனை கொடுமைகள் செய் தாலும் அவனால் எளிதாகத் தப்பித்துவிட முடியும், தன் விருப்பம்போல் என்னவிதமான அத்துமீறல்க ளிலும் அவனால் தைரியமாக ஈடுபட்டுவர முடியும் ... . இப்படித்தானே எல்லோருக்கும் தோன்றும்....!'


’எதையாவது செய்தேயாக வேண்டும், இந்த க்ளாடி யோவின் அக்கிரமங்களுக்கு எப்படியாவது முற்றுப் புள்ளி வைத்தேயாக வேண்டும். சட்டரீதியாக அதைச் செய்யமுடியாவிட்டால், சட்டத்திற்குப் புறம்பான வழியிலாவது அதைச் செய்தாக வேண் டும் என்ற எண்ணம் மரிஸ்ஸா மனதில் தீவிரமாக எழுந்தது.  


'அந்த நாயைக் கிட்டத்தில் வைத்துச் சுட்டுத்தள்ள வேண்டும்; ஆனால், அப்படிச் செய்தால் க்ளாடியோ வுக்குப் பெரிதாக வலி ஏற்படாது, அவளுடைய காவல்துறைப் பணிக்கும் முடிவு ஏற்பட்டுவிடும். அதன்பின் அவள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்துவரவேண்டியதுதான்...க்ளாடியோவால் சிதைத்துப் போடப்பட்ட தனது ஆருயிர்த்தோழிக ளுக்கு சரியான நியாயம் கிடைப்பதாகாது...'   


‘இல்லை, க்ளாடியோவுக்குத் தரப்படும் தண்டனை வேறுவிதமாக இருக்கவேண்டும்... இன்னும் மூன்று நாட்களுக்குள் இந்த விவகாரம் குறித்து ஏதேனு நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்று அவளுடைய மேலதிகாரி கட்டளையிட்டிருந்ததால்  மரிஸ்ஸாவுக்கு நிறைய நேரம் யோசிக்கவோ, திட்டம் தீட்டவோ அவகாசம் இருக்கவில்லை!

அன்றிரவு முழுக்க, விடிய விடிய யோசித்துக் கொண்டிருந்தாள் மரிஸ்ஸா. க்ளாடியோவுக்கு எப் படி சரியான பாடம் கற்பிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.இறுதியில்,சட்டத்தால் க்ளாடியோவை சரியானபடி தண்டிக்கமுடிய வில்லை என்பதால் இந்த விஷயத்தில் தன்னு டைய வேலை யைத் தியாகம் செய்தாவது உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்ற முடிவுக்கு வந்தாள்.


மறுநாள் அதிகாலையில், தன்னுடைய நண்பரான, டாக்டர் ஸெண்டெரோஸைத் தொலைபேசியில் அழைத்து, அவரைக் காவல்நிலையத்திற்கு வரும் படி கேட்டுக்கொண்டாள்.

தன்னுடைய உதவியாளரிடம் சிறைக்குச் சென்று க்ளாடியோவைத் தனியாக ஒரு அறைக்குள் அடைத்துவைக்கும்படி கூறினாள்.

சிறிது நேரம் கழித்து தன்னைக் கவர்ச்சிகரமாக அலங்கரித்துக்கொண்டாள் மரிஸ்ஸா. ஆடையின் முன்பக்கத்திலிருந்த பொத்தான்களில் சில மாட்டப்படாமல் விடப்பட்டிருந்த நிலையில் அவளுடைய மார்பகங்கள் ஓரளவு வெளியே தெரிந்துகொண்டிருந்தன.


அந்நிலையில் மரிஸ்ஸா, க்ளாடியோ இருந்த சிறையறைக்குள் நுழைந்தாள்.

“ஹோ, மரிஸ்ஸா, என் அன்பே, என் செல்லமே!” என்று கூவினான் க்ளாடியோ. “நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்!

நான் உன்னிடம் தீராக்காதல் கொண்டிருக்கிறேன் மரிஸ்ஸா... பள்ளிநாட்களிலிருந்தே உன் மீது பைத்தியமாகியிருக்கிறேன்... நாம் மட்டும் நண்பர்க ளாகவே நீடித்திருந்தால் இதற்குள் திருமணம் செய்துகொண்டு நிறைய பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்...!’

“அன்பே க்ளாடியோ, நீ பேசுவதைக் கேட்க எத் தனை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா!”என்று கொஞ்சும் குரலில் பேசியவாறே, க்ளாடியோவை நோக்கி அவனைக் கிறங்கடிப்பதான அசைவுகளில் முன்னேறிச் சென்றாள் மரிஸ்ஸா! மயக்கும் கண்க ளோடு அவனைப் பார்த்த பார்வையில், ‘என்னை எடுத்துக்கொள்ளேன் என்று மரிஸ்ஸா சொல்வது போல் இருந்தது!

அவள் எதிர்பார்த்ததுபோலவே க்ளாடியோ வேட்கை யோடு அவளை நோக்கிப் பாய்ந்துவந்தான்.

மரிஸ்ஸா கைகளை விரியத் திறந்து அவனைத் தன்னிடம் இழுத்துக்கொண்டாள்.

இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு மிகுந்த வேட்கையோடு முத்தமிட்டுக் கொண்டார்கள். 

இதனால் க்ளாடியோவுக்கு மிகுந்த கிளர்ச்சி ஏற்பட் டது. அவன் மரிஸ்ஸாவைக் கீழே சாயும்படி இழுத் துத் தரையில் படுக்கச் செய்து அவள் மீது கவிந்து கொண்டான்.  


மரிஸ்ஸா அவன் மீது அன்பொழுகக் கையைச் சுற்றி வளைத்துக்கொண்டாள். அவனை சகஜமாக உணரச் செய்தாள்.


சரியான சந்தர்ப்பம் வாய்த்தபோது, மரிஸ்ஸா, க்ளாடியோ சற்றும் எதிர்பாராத அளவில் மரிஸ்ஸா அவனுடைய பிடியிலிருந்து நழுவி வெளியே வந்து, தன்னுடைய ஆடைக்குள் மறைத்துவைத் திருந்த கத்தியைக் கொண்டு அவனுடைய ஆண்குறியை அறுத்தெறிந்தாள்.

 "ஆ........." என்று தாங்க முடியாத வலியில் வீறிட் டலறினான் க்ளாடியோ.


மருத்துவர் ஸெண்டெரோஸும் அவருடைய குழு வும் க்ளாடியோவுக்கு அவசர சிகிச்சையளிக்க விரைந்துவந்தனர். மரிஸ்ஸா ரத்தவெள்ளத்தில் கிடந்த க்ளாடியோவின் ஆண்குறியை அவனிடம் சுட்டிக்காட்டி, “லாராவுக்கும், காப்ரியெலாவுக்கும் நடந்த கொடுமைக்குப் பழிதீர்த்துக்கொண்டுவிட் டேன்,” என்று தெரிவித்தாள்.பின், அந்தச் சதைப் பிண்டத்தைத் தூர எறிந்தாள்.


அதன் பிறகு மரிஸ்ஸா தன்னுடைய மேலதிகாரி யைத் தொலைபேசியில் அழைத்தாள்; 


" தயவு செய்து இங்கே வாருங்கள், ஸார், வந்து என்னைக் கைது செய்யுங்கள்.” என்றாள்.


"மரிஸ்ஸா, என்ன உளறுகிறாய்?” என்று கேட்டார் மேலதிகாரி.


”நான் உளறவில்லை ஸார்,” என்று கூறிய மரிஸ்ஸா நடந்ததெல்லாவற்றையும் அவருக்கு விவரமாக எடுத்துரைத்தாள்;


மரிஸ்ஸாவை வேலையிலிருந்து நீக்கிவிட்டார் கள். ஆனால், அவள் செய்த காரியத்தால் அந்த ஊர்ப் பெண்கள் மிகவும் நிம்மதியடைந்தார்கள்;  இனி க்ளாடியோ கையில் சிக்கிச் சீரழிய மாட் டோம் என்ற எண்ணம் அவர்களை மகிழ்ச்சிவெள் ளத்தில் ஆழ்த்தியது. மரிஸ்ஸாவின் துணிச்சலான செயல் அந்த ஊரில் புதிதாக உருவாகக் கூடிய பாலியல் வன்புணர்ச்சியாளர்களுக்கு நிச்சயமாகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.


ஜி.வெங்கடேஷ்



No comments:

Post a Comment