LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Thursday, 16 October 2014

இறைவன் இருக்கின்றானா? - 1

இறைவன் இருக்கின்றானா? - 1



நம்மில் எத்தனை பேர் கடவுள் உண்டு என்று நம்புகிறோம்?

எத்தனையெத்தனையோ!

ஆனால், எத்தனை பேருக்குக் கடவுள் தன்னை கண்களுக்குப் புலனாகாத அளவில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்?, 

இதோ சில எடுத்துக்காட்டுகள்.

நான் சிறுவனாக இருந்தபோது மிகவும் சுறுசுறுப்பாக, கலகலப்பாக இருப்பேன்.

விளையாட்டில் மிகவும் ஆர்வங்கொண்டு எல்லா நேரங்களும் என் நண்பர்களோடு ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருப்பேன். 

எங்கள் வீட்டின் ‘காம்பவுண்ட்’ கேட்’க்கு உட்புறமாக நாங்கள் கிரிக்கெட், டென்னிஸ் என்று விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருப்பது வழக்கம்.

எங்களுடைய வீட்டை ஒட்டினாற்போல் ஒரு பரபரப்பான சாலை இருந்தது. எல்லா நேரமும் அதில் கார்களும், பஸ்களும் சைக்கிள்களும் மோட்டார்சைக்கிள்களும் விரைந்தோடிக்கொண்டிருக்கும்!

ஒரு நாள், நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, நான் அந்த சாலையை ஒட்டினாற்போல் நின்றுகொண்டு ‘ஃபீல்டிங்க்’ செய்துகொண்டிருந்தேன்.

பந்தை அடித்த நண்பன் வேகமாய் அடித்ததில் பந்து சாலையில் சென்று விழுந்தது; எனவே, அதை எடுக்க நான் ஓடினேன். ஓடும் அவசரத்தில் சாலையில் வந்துகொண்டிருந்த வண்டிகளை கவனிக்கவில்லை. 

விளைவு - சைக்கிள் ஒன்று என்மீது மோதியது.

நல்லவேளையாக அதன் சக்கரங்கள் என்னுடைய தொண்டைக்கு மிக அருகில் என் மீது ஏறிச் சென்றது.

என்னுடைய குரல்வளைக்கு இன்னும் ஒரு ‘இஞ்ச்’ அருகில் அவை ஏறியிருந்தாலும் - நான் இன்று உலகில் இருந்திருக்க மாட்டேன்.


அன்று தான் என்னுடைய ‘எஞ்சினியரிங்க்’ தேர்வுகளின் இறுதித் தேர்வு. 

நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில், பரிட்சையில் தேற குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்கவேண்டும்.  

நான் ஒன்றும் படிப்பில் சிறந்த மாணவனாக இருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

எப்பொழுதுமே இறுதிநேரத்தில் தான் பரிட்சைக்குப் படிப்பது வழக்கம். 

அன்று வழக்கம்போல் பரிட்சை தொடங்கியது. 

வினா - விடைத் தாள்கள் வினியோகிக்கப்பட்டன. 

 என்ன நடந்தது தெரியுமா?  

என் பேனா எழுதவில்லை! என்னிடம் ஒரேயொரு பேனா தான் இருந்தது. அதுவும் பழுதாகியிருந்தது!  

அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் அவருடைய பேனாவைத் தந்து உதவும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.

இதயமில்லாத அவரோ, தர மறுத்திவிட்டார்.

பேனா இல்லையென்றால் நான் பரிட்சை எழுத முடியாது. பரிட்சையில் ‘ஃபெயிலாகிவிடுவது நிச்சயம். இந்த நினைப்பில் நான் தவித்து அழுதுகொண்டிருந்தேன்.

அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா?

எனக்கு அறிமுகமேயில்லாத ஒருவர் (என்னருகே பரிட்சை எழுதிக்கொண்டிருந்த இன்னொரு மாணவர்) என் தவிப்பைப் பார்த்தார்.

அதிர்ஷ்டவசமாக, அவரிடம் கூடுதலாக ஒரு பேனா இருந்தது.

அதை எனக்கு அன்போடு கொடுத்தார்! 


வெங்கடேஷ் 


1 comment: