ஏறத்தாழ 1950கள் வரை இந்திய சமூகம் பெண் குழந்தை குடும் பத்திற்கு பெரும் பாரம் என்றே நினைத்துக்கொண்டிருந்தது. குடும்பச் செலவுகளை (குறிப்பாக, பெண்ணுக்குத் திருமணத்தின் போது தரப்படும் வரதட்சணை) எத்தனை முடியுமோ அத்தனை குறைக்கும் பொருட்டு அவளுக்கு ஆரம்பப் பள்ளிக் கல்வி மட்டுமே தரப்பட்டது; வீட்டுக்காரியங்களை அவளுக்குச் சொல்லித் தருவது மிகவும் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது;
பின், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளுக்குத் திருமணம் செய்துவிட
மும்முரமாய் முயற்சிகள் நடந்தன.
இவ்வாறாக, ஒரு
குடும்பத்தின்
பிள்ளையோடு ஒப்பிட, அந்த
வீட்டு மகளுக்கு
அன்பு, கல்வி, மரியாதை என்று எல்லாமே மறுக்கப்பட்டுவந்
தது.
50களுக்குப் பிறகு நிலைமை
கொஞ்சம் சீரடைந்தது. பெண்குழந்தைக் குக் கல்வி கிடைக்கச் செய்தால் அது அவளுக்கு நல்ல
வரன் கிடைப் பதில் உதவி செய்யும் என்பதை உணர்ந்துகொண்டனர் பெற்றோர்கள்.
என்றாலும், குடும்பத்தாரின்
முதன்மையான எண்ணம் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பெண்ணுக்குத் திருமணம்
செய்துவைத்துவிட வேண்டும் என்பதிலேயே நிலைகொண்டிருந்தது.
மகன்களைப் போல்
மகள்களும் வேலைக்குச் சென்று
முன்னுக்கு வர முடியும் என்பது
பற்றி எண்ணிப் பார்ப்பது என்பதே
அப்போதெல்லாம்
இயலாத காரியமாக இருந்தது. கீழ்க்காணும் நிகழ்ச்சி இதை
நன்றாகவே எடுத்துக்காட்டுகிறது.
பேராசிரியர் ஹரிஹரன்
கேரளாவைச் சேர்ந்த கல்பாத்தி மாவட்டத்தில் ஒரு
கலைத்துறைப்
பேராசிரியராக
இருந்தார். தன்னுடைய குழந்தை களுக்கு நல்ல
கல்வியைத் தர வேண்டும் என்பதே
அவருடைய எண்ண
மாக இருந்துவந்தது. அவருக்கு நான்கு
மகள்களும் ஒரு மகனும்
இருந் தார்கள்.
அவருடைய குழந்தைகள் அறிவில்
சிறந்து, திறமைசாலிகளாய், இருந்தார்கள். படிப்பதில் ஆர்வமாய், முனைப்பாய் இருந்தார்கள்;
அவர்கள் எல்லோரிலும் மூத்தவளான ராதா அவளுடைய அப்பாவின் செல்லக்குட்டி! அவள்
தன்னுடைய ‘டீன்
ஏஜ்’ பருவத்தைக் அடந்தபோது ஏற்கனவே
பட்டதாரியாகியிருந்தாள்.
வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது
அவளுடைய கனவு!
அவளுடைய கனவுகளும் இலட்சியங்களும் வானமளாவ
விரிந்தன! சட்டத்தில் பட்டம்
பெற்றதுமே பெயர்பெற்ற வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராகச் சேர்வதாகவும், பின்,
தனியாய் பணியாற்றி தனக்கென்று ஒரு
முத்திரை பதித்துக்கொள்வதாகவும் அவள் கற்பனை செய்து
கொண்டாள். உள்ளூர் நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றம் பின் உச்ச நீதி மன்றம் என்று எல்லாவிடங்களிலும் பணியாற்றி இறுதியாக உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாகத் தலைமை வகிப்பதாக அவளுடைய எண்ணப்பறவை சிறகடித்துக்கொண்டே போயிற்று.
ஆமாம், ராதா
தன்னுடைய எதிர்காலத்தை, தான்
செய்யப்போகும்
தொழில் குறித்து திருத்தமாக மனதிற்குள் திட்டம்
வகுத்துக்கொண்டு விட்டாள்!
’ஆனால், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில் லை’யே……
பேராசிரியர் சீதாராமன் ஹரிஹரனோடு பணிபுரிபவர்; அவர்
கேரளா கல்லூரி ஒன்றில்தான் இருந்தார் என்றாலும் கிழக்குத் தமிழகத்தைச் சேர்ந்த
திருச்சிதான்
அவருடைய சொந்த ஊர்.
அவருக்கு ராதாவைப் பார்த்ததுமே மிகவும்
பிடித்துவிட்டது;
குடும்ப நண்பர்
என்பதால் அவரால் ராதாவை,
அவளுடைய நற்பண்புகளைப் பற்றி
நன்றாகக் கவனித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது;
ராதா பண்புமிக்க, களையான
பெண்ணாக இருந்தாள்.
திருச்சியில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகப்
பணிபுரிந்துவந்த
தன்னுடைய உறவுக்காரப் பையனுக்கு ராதாவைத் திருமணம் செய்யவேண்டும் என்று
விரும்பினார்
சீதாராமன். ஹரிஹரனுக்கு நான்கு
மகள்கள் இருப்பதால் அவர்
தன்னுடைய யோசனைக்கு உடனடியாக சம்மதம்
தெரிவித்துவிடுவார்
என்று சீதாராமனுக்கு தெரியும்.
எனவே, ஒரு
நாள் ஹரிஹரனோடு ‘ஜாலி’யாகப் பேசிக்கொண்டிருந்த போது சீதாராமன் தன்னுடைய எண்ணத்தை அவரிடம்
எடுத்துச் சொன்னார்.
அதைக் கேட்டு ஹரிஹரன்
திகைத்துப்போய்விட்டார்.
இருந் தாலும்,
தன் குடும்பத்தாரோடு அது
குறித்துக் கலந்துபேசக் கொஞ்சம்
அவகாசம் தேவை என்று
கேட்டுக்கொண்டார்.
பின், ராதாவுக்கு வந்திருக் கும் வரன்
குறித்துத் தன்னுடைய மனைவியிடம் பேசினார். இருவருடைய ஜாதகங்களும் பொருந்தியிருந்தால் இந்த
வரனை முடித்துவிடுவதுதான் நல்லது
என்று கூறினார்;
அவர்களுக்கு நான்கு
மகள்கள் இருப்பதால் எப்போதுமே நிதி
நெருக்கடியை
அவர்கள் எதிர்கொள்ளவேண்டிவரும் என்றும்,
இந்த வரன் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்தே வந்ததால், அதுவும்
தெரிந்த நண்பர் ஒருவர்
மூலமாக வந்ததால் திருமணச்செலவு கொஞ்சம்
குறைவாக இருக்கும் என்ற
எண்ணத்தில் ஹரிஹரன் அதற்கு
ஒப்புக்கொண்டார்.
தனக்கு வரன்
பார்த்திருக்கும்
விஷயம் ராதாவுக்குத் தன்
அம்மா மூலமாகத் தெரியவந்தபோது அவளுக்கு ஒரே
அதிர்ச்சியாக
இருந்தது.
வக்கீல்தொழிலைப் பார்க்க
விரும்புவதாக
அவள் அவள் தன்
அம்மாவிடம் மன்றாடியதெல்லாம் எடுபடவில்லை;
குடும்பத்தின் நிதிநிலை சரியாக
இல்லை என்றும், இந்த
சமயத்தில் தானாக வந்திருக்கும் வரனை
வரவேற்க வேண்டும், விட்டுவிடலாகாது என்றும்
ராதாவின் அம்மா திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்;
திருமணம் மாப்பிள்ளையின் சொந்த
ஊரில் தடபுடலாக நடந்தது.
தேனிலவுக்காலம் முடிந்ததும் ராதா
தன்னுடைய புதிய வீட்டில் தன்னைப்
பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டாள்.
திருமணத்திற்குப் பின்
தன்னுடைய வக்கீல்தொழிலைத் தொடரலாம் என்று
அவளுக்கிருந்த
கொஞ்சநஞ்ச நம்பிக்கையும், இனி
வீட்டைப் பராமரிப்பதே அவளுடைய
முழு கவனமாக இருக்கவேண்டும் என்று
அவளுடைய புகுந்தவீட்டார் கூறிவிட்டதில் காற்றில் கரைந்துவிட்டது.
இருபது வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது
ராதாவுக்கு ஒரேயொரு மகள்
இருந்தாள். அவளுக்கு ராதிகா
என்று பெயர். அழகு,
குணம், திறமை எல்லாவற்றிலும் அவள்
அப்படியே அம்மாவை உரித்துவைத்திருந்தாள்! சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் பயிற்சியை முடித்து நகரிலுள்ள ஒரு
பெரிய அக்கவுண்டன்ஸி நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் நாளை
எதிர்நோக்கியிருந்தாள்.
தன்னுடைய அம்மாவைப் போலவே
அவளும் தன்னுடைய தொழில்
குறித்து நிறைய கனவுகள்
கண்டுகொண்டிருந்தாள்;
நிறைய திட்டங்கள் தீட்டியிருந்தாள். அக்கவுண்டன்ஸி படிப்பிலும், நிதித்துறை சார்ந்த
கல்வியிலும்
ஹார்வர்ட் அல்லது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு இரட்டை
முனைவர் பட்டம் வாங்கவேண்டு மென்று அவள்
பெரிதும் விரும்பினாள். உச்சபட்சமாக உலக
வங்கியில் வேலை செய்து மத்திய அரசின்
நிதி பொருளாதாரத்துறை ஆலோசகராகப் பணியாற்றவேண்டும் என்று
விரும்பினாள்.
இதற்கிடையே, சீதாராமன் பணியிலிருந்து ஓய்வு
பெற்று திருச்சியில் குடியேறிவிட்டார். ராதா
குடும்பத்தோடு
அவருக்கு நல்ல தொடர்பிருந்தது.
மீண்டும் சீதாராமன் திருமணத் தூதுவன்
பாத்திரமேற்றார்;
தனக்கு மிகவும் தெரிந்த
தொழிலதிபர் ஒருவரின் மகன்
சுரேஷுக்கு ராதிகாவை மணமுடிப்பதில் அவருக்கு மிகவும்
ஆர்வமாயிருந்தது.
அந்தத் தொழிலதிபர் குடும்பத்தை அணுகி
ராதிகாவின் அழகு, நற்பண்பு, திறமை
என்று எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லியபோது அந்தக்
குடும்பமும்
அவருடைய விருப்பத்திற்கு உடனடியாக ஒப்புக்கொண்டது.
சீதாராமனுக்கு மிகவும்
மகிழ்ச்சி. தன்னுடைய சகோதரி
லஷ்மியிடம் (ராதிகாவின் பாட்டி)
ராதிகாவுக்குத் தான் பார்த்திருக்கும் வரன் பற்றிக் கூறினார்.
லஷ்மிக்கு எத்தனை
சந்தோஷமாயிருந்திருக்கும்
என்பதைச் சொல்ல
வேண்டியதில்லை! அவளுடைய பேத்தி
ஒரு உயர்குடிக் குடும்பத்தின் மருமகளாகப் போகிறாள் என்பது
எத்தனை பெரிய விஷயம்!
ராதாவிடம் அந்த
வரனைப் பற்றிக் கூறி
ராதிகாவிடம்
அதைத் தெரிவிக்
குமாறு கூறினாள் லஷ்மி.
ராதிகா வீடு
திரும்பியபோது
அவள் முகமெல்லாம் மகிழ்ச்சியால் மலர்ந் திருந்தது. ஆனால்,
அதற்கான காரணம் வேறு!
அம்மாவை அன்போடு
கட்டித்தழுவிக்கொண்டு,
“அம்மா, உனக்கு ஒரு
மிகவும் சந்தோஷமான செய்தியை நான்
சொல்லப் போகிறேன். என்ன
தெரியுமா? ‘ப்ரைஸ் & வாட்டர்ஹவுஸ்’ ( பிரபல
சார்ட்டர்ட்
அக்கவுண் டண்ட்
நிறுவனம்) சென்னையில் எனக்கு
இரண்டு வருடங்களுக்கு ‘ட்ரேய்னி ஜாப்’
( trainee job) கொடுத்திருக்கிறார்கள்! என்னுடைய வேலை
அவர்களுக்குத்
திருப்திகரமாக
இருந்தால் என்னைத் தங்கள்
நிறுவனத் தில்
நிரந்தரமாக வேலைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதியளித்திருக் கிறார்கள்!”
அவளுடைய அம்மாவுக்குப் பெரிய
இக்கட்டான நிலை ஏற்பட்டது. தன்னுடைய மகளிடம்
எப்படி அவளுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற
விவரத்தைச் சொல்வது என்று
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
”அம்மா, நான்
சொன்னதைக் கேட்டு உனக்கு
சந்தோஷமாக இல்லையா? ஏன்
ஒரு மாதிரி இருக்கிறாய்? என்ன
விஷயம்?” என்று தாயின்
முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்து ஒன்றும்
புரியாமல் கேட்டாள் ராதிகா.
”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ராதிகா,
எனக்கும் மகிழ்ச்சிதான். ஆமாம்,
வேலையை ஏற்றுக்கொள்வதான ஒப்புதல் கடிதத்தை நீ
எப்போது அனுப்பவேண்டும்?” என்று
கேட்டாள் ராதா.
"அவர்கள் எனக்குப் போதுமான
அவகாசம் தந்திருக்கிறார்கள் அம்மா”,
என்றாள் ராதிகா.
“ஆனால், அதற்கு
முன்பாக நீ உன்
அப்பாவிடம் இதுபற்றிப் பேசிவிடு ராதிகா”,
என்றாள் அம்மா ராதா.
"கண்டிப்பாகப் பேசவேண்டும் அம்மா”,
என்றாள் ராதிகா. “சொல்லப் போனால், நாம்
இருவருமாகவே
பேசுவோம்.”
சாப்பிடும்போது ராஜேஷ் கூறினார், “இது என்ன இன்றைக்கு யாரும் எதுவும் பேசாமல்
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களே, ஆச்சரியமாக இருக்கிறதே!”
அதற்கு அவருடைய
அம்மா(லஷ்மி), “ஏன்
என்று எனக்குத் தெரியும். ராதா,
ராதிகா இருவருமே உன்னிடம் அந்த
நல்ல விஷயத்தைச் சொல்ல
வெட்கப்பட்டுக்கொண்டிருக்
கிறார்கள்! சீதாராம மாமா
தான் அந்த நல்ல
விஷயத்தை இந்தக் குடும்பத்திற்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். உனக்குத் தெரியுமல்லவா, சேஷு,
அந்தப் பெரிய எஃகுத்
தொழிலதிபர்…. அவர் நம்முடைய ராதிகாவைத் தன்னுடைய பிள்ளைக்குக் கேட்கிறார்! நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறதல்லவா! நம்
ராதிகா விரைவிலேயே அந்த பிரம்மாண்ட சாம்ராஜ்யத்திற்குள் குடியேறப்போகிறாள்!”
"என்னது?” என்று
கூவினாள் ராதிகா. "அம்மா, இது
உண்மையா?”
ராஜேஷ் மகிழ்ச்சி பொங்க,
“கங்கிராட்ஸ்
ராதிகா! அம்மா சொல்வது
உண்மையாக இருந்து எல்லாம்
நல்லபடியாக நடந்தால் , அங்கே
போய் நம்முடைய குடும்பத்தின் நற்பெயரையும், கௌரவத்தையும் நீ
நிச்சயம் காப்பாற்றுவாய் என்று
எனக்குத் தெரியும்!"
அதற்குப் பின்
வந்த சில நாட்களில் ராதிகாவுக்குத் தூக்கமே
வரவில்லை;
தனக்குக் கிடைத்திருக்கும் நல்ல
வேலையைப் பற்றி அம்மாவிடம் தெரிவித்தபோது அம்மா
ஏன் மகிழ்ச்சியடையாமல் கலவரமடைந்து காணப்பட்டாள் என்று
ராதிகாவுக்கு
இப்போது புரிந்தது;
அவள் விரைவாக
முடிவெடுக்கவேண்டும்.
தன்னைப் பற்றி, தன்
எதிர்காலத்தைப்
பற்றி, தான் வேலையில் சேருவதா,
அல்லது கல்யாணம் செய்துகொள்வதா என்பது
பற்றி உடனடியாக முடிவெடுக்க வேண்டியது அவசியம்
என்று அவளுக்குப் புரிந்தது;
திருமணம் செய்துகொண்டுவிட்டால், அதன்
பிறகு அவளுடைய அலுவல கக் கனவு
எல்லாவற்றையும்
மூட்டைகட்டி வைக்கவேண்டியதுதான் என்று
அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.
தவிர, அவள் தன்னுடைய அம்மாவுக்கு என்ன நடந்தது என்று நேரடியாகப் பார்த்திருக்கிறாள். (ஒரு திறமையான வழக்கறிஞராக உருவெடுத்திருக்
கக் கூடியவள் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற வீட்டுவேலை
களுக்காக தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டதை)!
இறுதியாக, என்ன செய்ய வேண்டும் என்று மனதிற்குள் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டாள். ஆனால், அதை யாரிடமும் சொல்லவில்லை. தன்னுடைய அம்மாவிடம் கூடத் தெரிவிக்கவில்லை. மிகவும் ரகசியமாக தன்மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டாள்!
வழக்கமான சம்பிரதாயங்களுக்குப் பிறகு
திருமணநாள் குறிக்கப்பட்டது; திருச்சியில் ஒரு
பிரம்மாண்டமான
கல்யாண மண்டபத்தில் ராதிகாவின் திருமணம் நடத்தப்பட ஏற்பாடாகியது.
அது ஒரு
பெரிய தொழிலதிபரின் மகனுடைய
திருமணம் என்பதால் ஊரிலுள்ள முக்கியஸ்தர்களுக்கு எல்லாம்
அழைப்பிதழ்கள்
அனுப்பப் பட்டன.
திருமண நாள் நெருங்கியது. ராதிகா
எப்பொழுதும் போலவே இயல்பாக
இருந்தாள்.
திருமணம் வழக்கம்போல் தொடங்கியது. திருமணத்திற்கு முதல்
நாள் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவந்தார்கள். பின்,
மாப்பிள்ளை அலங்கரிக்கப்பட்ட காரில்
ஊர்வலமாகச் சென்றார். அடுத்த
நாள் (திருமண நாள்)
மாப்பிள்ளை, பெண் இருவரும் நலமும்
வளமும் பெற்று தீர்க்காயுசோடு வாழ்வாங்கு வாழ
இறைவனின் ஆசீர்வாதத்தை வேண்டும் வேதமந்திர முழக்கங் களோடு தொடங்கியது
;
முகூர்த்த நேரம்
வரை எல்லாம் நல்லபடியாகவே போய்க்
கொண்டிருந் தது;
குருக்கள் மந்திரங்களைச் சொல்லிமுடித்துவிட்டார்கள். தாலி
கட்டுவ தற்கு
முன்பாக நடைபெறும் சம்பிரதாயங்களெல்லாம் நடந்தேறிவிட்டன.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் மாப்பிள்ளை மணப் பெண் கழுத்தில் தாலி
கட்டப்போவதை
எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டி ருந்தார்கள்.
அது நடந்துவிட்டால் பின்
திருமணம் முடிந்துவிட்டது என்று
அர்த்தம்!
தலைமை குருக்கள் தாலி
கட்டும்போது
முழங்கும் நாதஸ்வர இசையை
இசைக்கும்படி
சைகை காட்டினார். அந்தக்
கட்டத்தில்தான்
ராதிகா எழுந்துகொண்டு மேற்கொண்டு திருமணச் சடங்குகளில் தன்னால்
பங்கேற்க முடியாது என்று
திட்டவட்டமாக
அறிவித்தாள்.
தனக்கொரு அற்புதமான வேலையும், பணி
சார் எதிர்காலமும் காத்துக்கொண்டிருப்பதாகவும், திருமணம் செய்துகொண்டால் பின்
அந்த எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்றும்
தெரிவித்தாள்.
தன்னுடைய முடிவு யாருடைய
தூண்டுதலும்
இல்லாமல் சுயமாய் எடுக்கப்பட்ட தனிப் பட்ட முடிவு
என்று தெரிவித்தாள்.
அந்தக் கட்டத்தில் அவள்
பகிரங்கமாகத்
தன்னுடைய முடிவை அறிவிக்கவேண்டிய காரணம்
தன்னைப் போல் எவ்வளவோபேர் திருமணம் என்ற
பெயரால் தனித்துவம் இழந்து
அடையாளம் அழிந்து போனதையும், தங்களுடைய பணி
சார் முன்னேற்றத்தையும் எதிர்காலத் தையும் தியாகம்
செய்துவிட்டதையும்
அவள் அறிந்திருந்தாள். இந்த
நிலை மாறவேண்டும், பெண்களுக்குக் காலங்காலமாக இழைக்கப்பட்டு வரும் அநீதி
குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட
வேண்டும், மகன்களுக்கு இணையாக
மகள்களும் நடத்தப்பட வேண்டும் என்று
சமூகம் உணர வேண்டும் என்பதால் தான்
அவள் அப்படிச் செய்தாள்.
தீர்மானமாகத் தன்னுடைய முடிவிலேயே உறுதியாக இருந்தாள். அவளு
டைய உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அவளிடம்
எத்தனையோ கெஞ்சினார்கள்; மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால்,
அவள் அசைந்துகொடுக்கவேயில்லை.
அதற்குப் பிறகு அங்கே நிலைமை ஒரே கூச்சலும் களேபரமுமாக ஆயிற்று. வாய்ச்சண்டை முதல் கைச்சண்டை வரை எல்லாம் நடந்தது. ஏச்சுப் பேச்சு, வசைபாடல், சாபமிடல் என்று இரு தரப்பிலிருந்தும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. திருமணம் நிச்சயிக்கப்படக் காரணமான சீதாராமன் தலைதான் பலமாக உருண்டது. அதன் விளைவாய் திருச்சி யிலிருந்தே வெளியேறி பக்கத்திலிருந்த சிறிய கிராமமொன்றிற்குக் குடிபோய்விடத் தீர்மானித்துவிட்டார் அவர்.
பாட்டி, ராதிகா
அவளுடைய அம்மா இருவரையும் திட்டித் தீர்த்தார். ராதிகா
அப்படி துணிச்சலாக எல்லோரையும் எதிர்த்துநிற்க மருமகள்
ராதா கொடுத்த ஆதரவும்
ஊக்கமுமே காரணம் என்று
குற்றஞ்சாட்டினார்.
ராதாவைப் பொறுத்தவரை, இனி
தன் மகள் ராதிகாவுக்குத் திருமணம் நடக்க
முடியுமோ என்ற கவலை
ஏற்பட்டாலும்
உள்ளூர அவளுக்குத் தன்
மகளை நினைத்துப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒரு
வகையில் தனக்கு நடந்ததற்குத் தன்
மகள் பழிதீர்த்துக்கொண்டுவிட்ட
தாகத் தோன்றியது.
ராதிகா எப்பொழுதும் போலவே,
இயல்பாக, இருந்தாள். இப்பொழுது தன்னால்
தனது பணியில் முழுமையாக கவனம்
செலுத்த முடியும், தன்னுடைய லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று
எண்ணிக் கொண்டாள். தன்னுடைய சமூகம்
மாறுவதற்கு தன்னாலான
வகையில் ஒளியேந்தி அதை
வழிநடத்திச்
சென்றதாகவும்கூடத் தோன்றி யது.வழிகாட்டிவிட்டதாகவும் அவளுக்குத் தோன்றியது.
நிறைய பெண்கள்
தன்னுடைய வழித்தடத்தைப் பின்பற்றவேண்டும் என்ற
எதிர்பார்ப்பும்,
பின்பற்றுவார்கள்
என்ற நம்பிக்கையும், திருமணத்திற் காகத் தங்கள்
கல்வி, வேலை எல்லாவற்றையும் பெண்கள் தியாகம் செய்யக் கூடாது என்ற
எதிர்பார்ப்பும்,
இனி செய்ய மாட்டார்கள் என்ற
நம்பிக்கையும்
அவளுக்கு ஏற்பட்டது!