LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Thursday, 16 October 2014

DIVINE INTERVENTION AGAIN! / இறைவன் இருக்கின்றானா? - 2


DIVINE INTERVENTION AGAIN!




Once again the Almighty came to my aid!

I refer to my Engineering final Exams.

I didn’t write the exams all too well. So, there was only 50-50 chance of my pass or fail.

Of the subjects we had, Engineering Maths was one.

The question paper on this subject was very tough, was the unanimous opinion of all students, including me.

When the results were out, as expected, I didn’t get a pass-mark in that particular paper.

But still, a ray of hope was there to see that this lone failure didn’t affect my overall pass in the examinations.


As per the existing rules and regulations regarding exams for our subject, if a student had secured an average of 55% marks  but had failed in just one paper, he would be declared ‘passed’.

I calculated my total marks. I was short of five marks to reach that 55%.  

But, when I saw my detailed mark-list I found out that in one paper I had secured much less marks than what I had expected.

So, I submitted my requisition for re-evaluation of that particular exam-paper.


As per the existing rules, the University should conduct the revaluation at the earliest and announce the result.

But, there was enormous delay in announcing the result. So much so that, losing all hope I decided to sit for the same exam the next year.

Do you know what happened then?


One day there came a communication from the University declaring me pass in that particular exam in which I was initially declared as ‘failed’!




இறைவன் இருக்கின்றானா? - 2



மீண்டும் எனக்குக் கைகொடுக்க முன்வந்தார் கடவுள்!

என்னுடைய ‘எஞ்ஜினியரிங்’ இறுதித் தேர்வுகளைத் தான் இங்கே மீண்டும் குறிப்பிடுகிறேன்.  

நான் தேர்வுகளை பிரமாதமாக எழுதிவிடவில்லை. என்பதால், தேர்வுகளில் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் 50-50 வாய்ப்பாகவே இருந்தது.  

எங்களுடைய பாடப்பிரிவுகளில் Engineering  Maths ம் ஒன்று.

இந்தப் பாடப்பிரிவில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக எல்லா மாணவர்களும் [நான் உட்பட] எண்ணினார்கள்.  

தேர்வு முடிவுகள் வெளியானபோது, எதிர்பார்த்தது போலவே, நான் அந்த குறிப்பிட்ட தேர்வில்/ பாடப்பிரிவில் தேர்ச்சிபெறவில்லை. 

ஆனாலும், அந்தத் தோல்வி என்னுடைய ஒட்டுமொத்த தேர்ச்சியை பாதிக்காமல் இருக்க ஒரேயொரு வழியிருந்தது; நம்பிக்கைக் கீற்று இருந்தது.

எங்களுக்கான தேர்வு விதிமுறைகளின்படி, ஒரு மாணவர் தேர்வுகளானைத்திலும் மொத்தமாக 55% சதவிகிதம் பெற்றிருந்து, ஒரேயொரு பாடத்தில் மட்டும் தேர்ச்சியடையாமல் இருப்பின் அவர் தேர்வுகளில் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்படுவார்!

நான் பெற்றிருந்த மொத்த மதிப்பெண்களைப் பார்த்தேன். மேற்குறிப்பிட்ட 55% பெற எனக்கு 5 மதிப்பெண்கள் குறைவாக இருந்தது. 

ஆனால் என்னுடைய விரிவான மதிப்பெண்கள் பட்டியலைப் பார்த்தபோத் , ஒரு பாடத்தில் நான் எதிர்பார்த்த மதிப்பெண்களை விட மிகவும் குறைவாக நான் பெற்றிருந்ததை அறிந்துகொண்டேன்.  

எனவே அந்த வினாத்தாளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் உரிய துறையிடம் விண்ணப்பித்தேன்.   

விதிமுறைகளின்படி, இத்தகைய மறுபரிசீலனை விரைவாக நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.

ஆனால், பல்கலைகழகம் முடிவுகளை அறிவிக்க மிகவும் காலதாமதப்படுத்தியது. எனவே, நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். மீண்டும் படித்து அதற்கு அடுத்த வருடம் அதே தேர்வை எழுதுவது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டேன்.

அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நாள் பல்கலைக்கழகத்திலிருந்து தபால் வந்தது. என்னுடைய தேர்வுத்தாளை மறுபடியும் திருத்தியதில் நான் தேர்ச்சியடையவில்லை என்று முதலில் அறிவித்திருந்த அந்த குறிப்பிட்ட பாடத்தில் நான் வெற்ரிபெற்றிருப்பதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது! 

கடவுள் கண்டிப்பாக எனக்குக் கைகொடுத்துத் தூக்கி, என்னைக்  கரைசேர்த் துவிட்டார்!


வெங்கடேஷ் 

இறைவன் இருக்கின்றானா? - 1

இறைவன் இருக்கின்றானா? - 1



நம்மில் எத்தனை பேர் கடவுள் உண்டு என்று நம்புகிறோம்?

எத்தனையெத்தனையோ!

ஆனால், எத்தனை பேருக்குக் கடவுள் தன்னை கண்களுக்குப் புலனாகாத அளவில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்?, 

இதோ சில எடுத்துக்காட்டுகள்.

நான் சிறுவனாக இருந்தபோது மிகவும் சுறுசுறுப்பாக, கலகலப்பாக இருப்பேன்.

விளையாட்டில் மிகவும் ஆர்வங்கொண்டு எல்லா நேரங்களும் என் நண்பர்களோடு ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருப்பேன். 

எங்கள் வீட்டின் ‘காம்பவுண்ட்’ கேட்’க்கு உட்புறமாக நாங்கள் கிரிக்கெட், டென்னிஸ் என்று விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருப்பது வழக்கம்.

எங்களுடைய வீட்டை ஒட்டினாற்போல் ஒரு பரபரப்பான சாலை இருந்தது. எல்லா நேரமும் அதில் கார்களும், பஸ்களும் சைக்கிள்களும் மோட்டார்சைக்கிள்களும் விரைந்தோடிக்கொண்டிருக்கும்!

ஒரு நாள், நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, நான் அந்த சாலையை ஒட்டினாற்போல் நின்றுகொண்டு ‘ஃபீல்டிங்க்’ செய்துகொண்டிருந்தேன்.

பந்தை அடித்த நண்பன் வேகமாய் அடித்ததில் பந்து சாலையில் சென்று விழுந்தது; எனவே, அதை எடுக்க நான் ஓடினேன். ஓடும் அவசரத்தில் சாலையில் வந்துகொண்டிருந்த வண்டிகளை கவனிக்கவில்லை. 

விளைவு - சைக்கிள் ஒன்று என்மீது மோதியது.

நல்லவேளையாக அதன் சக்கரங்கள் என்னுடைய தொண்டைக்கு மிக அருகில் என் மீது ஏறிச் சென்றது.

என்னுடைய குரல்வளைக்கு இன்னும் ஒரு ‘இஞ்ச்’ அருகில் அவை ஏறியிருந்தாலும் - நான் இன்று உலகில் இருந்திருக்க மாட்டேன்.


அன்று தான் என்னுடைய ‘எஞ்சினியரிங்க்’ தேர்வுகளின் இறுதித் தேர்வு. 

நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில், பரிட்சையில் தேற குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்கவேண்டும்.  

நான் ஒன்றும் படிப்பில் சிறந்த மாணவனாக இருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

எப்பொழுதுமே இறுதிநேரத்தில் தான் பரிட்சைக்குப் படிப்பது வழக்கம். 

அன்று வழக்கம்போல் பரிட்சை தொடங்கியது. 

வினா - விடைத் தாள்கள் வினியோகிக்கப்பட்டன. 

 என்ன நடந்தது தெரியுமா?  

என் பேனா எழுதவில்லை! என்னிடம் ஒரேயொரு பேனா தான் இருந்தது. அதுவும் பழுதாகியிருந்தது!  

அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் அவருடைய பேனாவைத் தந்து உதவும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.

இதயமில்லாத அவரோ, தர மறுத்திவிட்டார்.

பேனா இல்லையென்றால் நான் பரிட்சை எழுத முடியாது. பரிட்சையில் ‘ஃபெயிலாகிவிடுவது நிச்சயம். இந்த நினைப்பில் நான் தவித்து அழுதுகொண்டிருந்தேன்.

அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா?

எனக்கு அறிமுகமேயில்லாத ஒருவர் (என்னருகே பரிட்சை எழுதிக்கொண்டிருந்த இன்னொரு மாணவர்) என் தவிப்பைப் பார்த்தார்.

அதிர்ஷ்டவசமாக, அவரிடம் கூடுதலாக ஒரு பேனா இருந்தது.

அதை எனக்கு அன்போடு கொடுத்தார்! 


வெங்கடேஷ்